எமது பாடசாலை வரலாற்றுப்
புத்தகங்களில் இலங்கை வரலாற்றுக்கு மூல நூலாக இருப்பது தீபவம்சம் ,
மகாவம்சம் மற்றும் சூழவம்சம் போன்ற பாலி பௌத்த வரலாற்று நூல்களாகும்.
எமது
உண்மை வரலாறுகளை மறந்து, வேத நூற்கள் போன்று இந்த நூற்களிலுள்ள வராலாற்றுக்
கருத்துக்களை மக்களுக்குப் போதிக்கிறோம்.
அவைகளிலுள்ள வரலாற்றுத் திரிபுகள்
என்ன என்பதை நாம் ஆராய்ந்து மாணவர்களுக்கு தெளிவுடன் கற்பிப்போமென்றால், ஒரு
அறிவுத் தெளிவுள்ள ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கலாம்.
ஆனாலும் அதற்கு
மகாவம்ச நூல் பற்றிய ஒரு வரலாற்று அறிவு மிக முக்கியம்.
ஆய்வாளர்
குணராசாவின் மகாவம்சம் பற்றிய ஆய்வை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக்
கட்டுரை ஒரு தெளிவைத்தரும் என்பது எமது எதிர்பார்ப்பு.