புதன், 21 செப்டம்பர், 2011

ஆங்கில தினப் போட்டிகளில் பாலிகாவுக்கு 12 வெற்றிகள்

அத்தனகல்ல தொகுதி பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டிகளில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்  7 முதலாம் இடங்கள் உட்பட 12 வெற்றிகளைப் பெற்று மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளது. தமிழ் மொழி மூல மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகள், கடந்த செப்டம்பர் 15, 16 ஆம் திகதிகளில் வியாங்கொட ஜனாதிபதி வித்தியாலயத்தில் இடம் பெற்றன.

இதன் போது, உடுகொட அரஃபா பாடசாலை மற்றும் ORCHARDWATTA முஸ்லிம் பாடசாலை என்பனவும் பல நிலைகளை வென்று, முஸ்லிம் சமுகம் ஆங்கில அறிவில் சளைக்கவில்லை என்பதை எமது பிரதேசத்துக்கு தெளிவு படுத்தியிருந்ததன.

பாலிகா மாணவிகள் பெற்ற முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

முதலாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A       A.F. Eshqa               Dictation              Gr. 06
CATEGORY-A       M.S.F. Zameera       Dictation              Gr. 09
CATEGORY-A       S.H.F. Husna           Dictation               Gr. 10
CATEGORY-A       A.F. Eshqa              Creative Writing    Gr. 06
CATEGORY-A       M.A. Zainab            Creative Writing    Gr. 09
CATEGORY-A       A.K.F. Miduha        Creative Writing    Gr. 10
CATEGORY-A       M.F. Humaida         Recitation              Gr. 05

இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A       M.S.F. Shifka         Recitation             Gr. 04
CATEGORY-A       S.H.F. Husna          Recitation             Gr. 10
CATEGORY-A       M.R. Bashahir        Copy Writing        Gr. 03

மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A      M.F.F. Fasra         Recitation               Gr. 06
CATEGORY-A      M.I.F. Ifasa           Copy Writing          Gr. 04


      

சனி, 17 செப்டம்பர், 2011

இது ஆக்கமா? அழிவா?

'ஃபேஸ் புக்' இல் தொடர்ந்து செல்கின்ற ஒரு கருத்தாடலை இங்கு தருகிறோம்.

இது விவாதமா? பிடிவாதமா? வாதமா? தர்க்கமா? குதர்க்கமா?...................

நம்மைப் பொருத்தவரை, 'எமது சகோதரர்கள் மத்தியில் ஏன் ஒற்றுமை ஏற்படுவதில்லை?' என்ற எமது வினாவுக்குக் கிடைத்த ஒரு பதிலாகவே இதனைக் கருதுகிறோம். பகிரங்கமாகவே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் இவ்வாறான கருத்தாடல்களினால் ஒற்றுமைக்குப் பதிலாக பிரிவினையே தோன்றும். "உங்கள் கைகளாலேயே நீங்கள் தேடிக்கொண்ட வினை......." என்று இறைவன் கூறுவது இதைத்தானோ....?!

இனி, கீழே வாசியுங்கள்......

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன. பரீட்சை நடைபெற்று ஒரு மாதத்துக்கு முன்னரே பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்த பரீட்சை ஆணையாளர் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

 எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

அதி கூடிய புள்ளியாக அல் பத்ரியாவில் ஒரு மாணவன் 166 உம், பாலிகாவில் இரு மாணவிகள் 180 உம் பெற்றுள்ளனர். அகில இலங்கை மட்டத்தில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளி 195. இந்த அதி கூடிய புள்ளியைப் பெற்ற மூவருள் ஒருவர் முஸ்லிம் சமூகத்தை பிரதி நிதித்துவப் படுத்துவது எமக்கு மற்றொரு மகிழ்ச்சி.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

எமது ஈ மெயிலுக்கு வந்திருந்த ஒரு ஆக்கத்தை இங்கு தருகிறோம்

தொழுவிப்பதற்கு என்ன QUALIFICATION?

பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய qualification என்ன என்பது வரையறை செய்யப்படாததால் உள்ள நடைமுறைச் சிக்கலை உதாரணமொன்றின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இமாம்களாகப் பணி புரிபவர்கள் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்கும் சந்தர்ப்பங்களில், அவர்கள் விடுமுறைக்காக சென்று வரும் வரையில் யார் யாரோவெல்லாம் தொழுகை நடாத்துகின்ற நிலை எமதூரில் உள்ளது. பல வேளைகளில், குர்ஆனை தப்பு தப்பாக ஓதக் கூடியவர்கள் கூட தொழுகை நடத்துகிறார்கள். இவர்களின் பின்னால் குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த பலர், அதிலும் மௌலவிமார்கள் கூட, மஃமூம்களாகத் தொழ வேண்டிய நிலை இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

"உங்களில் குர்ஆனை நன்றாக ஓதக் கூடியவரை தொழுகைக்கு இமாமாக நியமித்துக் கொள்ளுங்கள்" என்று தெளிவான கட்டளைகள் இருக்கும் போது, இந்த நிலை ஏன் இன்னும் தொடர்கிறது? ஏன், எமதூரில் ஒழுங்காக ஓதக் கூடியவர்கள் இல்லையா? அல்லது, ஓதக் கூடியவர்கள் ஜுப்பா அணியவில்லை என்பதனாலா? அப்படியும் இல்லையென்றால், 'எங்களுக்குத் தேவையானோரைத்தான் நாம் தெரிவு செய்வோம்' என்று நிருவாகிகள் இறுமாப்புடன் செயல் படுகிறார்களா?

பள்ளிவாசல் அல்லாஹ்வின் இல்லம். தொழுகை அவனுக்காக. மேலே சொன்ன கட்டளை கூட அவனது வழி காட்டலே. அப்படியிருக்க, தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக ஒரு பிரதான அமலை நாம் அலட்சியப் படுத்தலாமா?

ஊரான்