வெள்ளி, 16 செப்டம்பர், 2011

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன. பரீட்சை நடைபெற்று ஒரு மாதத்துக்கு முன்னரே பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்த பரீட்சை ஆணையாளர் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

 எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

அதி கூடிய புள்ளியாக அல் பத்ரியாவில் ஒரு மாணவன் 166 உம், பாலிகாவில் இரு மாணவிகள் 180 உம் பெற்றுள்ளனர். அகில இலங்கை மட்டத்தில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளி 195. இந்த அதி கூடிய புள்ளியைப் பெற்ற மூவருள் ஒருவர் முஸ்லிம் சமூகத்தை பிரதி நிதித்துவப் படுத்துவது எமக்கு மற்றொரு மகிழ்ச்சி.

3 கருத்துகள்:

  1. ஊஊஊராஆஆஆஆன்ன்ன்ன்ன்ன்ன்16 செப்டம்பர், 2011 அன்று 5:19 PM

    இதிலும் பத்ரியாவுக்குத் தோல்வியா? பத்ரியாவின் உயர் தரப் பெறுபேறுகளாவது நல்ல முறையில் வேஅ என் நல் வாழ்த்துக்கள். பாலிகா ஏதோ தட்டுத் தடுமாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் பத்ரியாவின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. உயர் தர வகுப்புக்களைப் பேருக்கு வைத்துக்கொண்டிருகிறார்களாம். பாடங்களை நடாத்த ஆசிரியர்கள் வகுப்புக்களுக்கு வருவதில்லையாம். இதனால் மாணவர்கள் வகுப்புக்களில் இல்லையாம் இதனால் .............. இப்படி என்னென்னவோ.. டை கட்டிய அதிபர் பூமரம் நடுவதிலும் பெய்ன்ட் அடிப்பதிலும் காலம் கடத்துவதை விட்டுவிட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை எடுக்க முயற்சிப்பதே தற்போதைய தேவையாகும். இதன் கருத்து பாலிகாதான் சிறந்தது என்பதல்ல. அங்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அங்கு ஆச்இரியர்கள் பாடசாலை வளவிற்குள் மஸ்ஜித் இருந்தும் அங்கு தொழாமல் பக்கத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் சென்று தொழுது வருகிறாகள். இதில் வேடிக்கை என்னவென்றால் ழுஹா, இஷ்ராக், ழுஹரின் முன்-பின் ஸுன்னத்துக்கள் என்று அனைத்துத் தொழுகைகளையும் தொழுதுவிட்டு வந்துதான் வகுப்புக்களின் பாடம் எடுக்கிறார்கள் என்பதுதான். மார்க்கபற்று நிரம்பப் பெற்ற ஆசிரியர்களை பாலிகா கொண்டுள்ளது என்றாவது சந்தோசப்பட்டுக் கொள்வோம். பாவப்பட்டட்ட ஜென்மங்கள்!

    பதிலளிநீக்கு