திங்கள், 10 அக்டோபர், 2011


புள்ளித் திட்டம் 2011 (இஸ்லாமிய நாகரிகம்) புதிய பாடத் திட்டம்

by Boosary Sallih on Saturday, October 8, 2011 at 9:55pm
பத்திரம் 47 / T / 1

 01) 2 02) 3 03) 4 04) 1 05) 5 06) 1 07) 3 08) 1 09) 3 10) 1

 11) 4 12) 5 13) 2 14) 4 15) 1 16) 1 17) 2 18) 1 19) 5 20) 5

 21) 5 22) 3 23) 3 24) 1 25) 5 28) 1 27) 5 28) 4 29) 2 30) 2

 31) 1 32) 1 33) 3 34) 1 35) 3 36) 2 37) 2 38) 1 39) 3 40) 4

 41) 2 42) 1 43) 2 44) 2 45) 2 46) 1 47) 4 48) 4 49) 1 50) 4




பத்திரம் 47 / T / ii

இப்பகுதி இரு பகுதிகளைக் கொண்டது. பகுதி 1 இலிருந்து இரு வினாக்களையும் பகுதி இரண்டிலிருந்து மூன்று வினாக்களையும் தெரிவு செய்து எல்லாமாக ஐந்து வினாக்களுக்கு விடை எழுதுக.

 பகுதி 1

 (01). 
1) அல் ஹதீஸ், அஸ்ஸுன்னா பதங்கள் தரும் பொருளைத் தெளிவுபடுத்துக.
*மொழிக் கருத்தும் பரிபாஷைக் கருத்தும்
*அல்ஹதீஸ்: செய்தி, புதுமை, புதியது
*அஸ்ஸுன்னா: பாதை, போக்கு, வழிமுறை
*மேற்படி இரு பதங்களும் ஒரே கருத்தில் கையாளப்படுதல் எனினும் சற்று வித்தியாசமாக
*அல்ஹதீஸ்: நபியவர்களது சொல், செயல், அங்க்கீகாரம், குணப்பண்புகள் முதலானவை
*அஸ்ஸுன்னா: நபியவர்களது சொல், செயல், தக்ரீரி சார்ந்த விடயங்கள்
*ஹதீஸை சொல் வடிவம் எனவும், ஸுன்னாவை செயல் வடிவம் எனவும் குறிப்பிடுவர்.

 11) அல்குர் ஆனை விளங்குவதற்கு ஹதீஸ் இன்றியமையாதது என்பதை உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுக.
* தொழுகை, ஸகாத் பற்றிய விளக்கம் (அகீமுஸ்ஸலாத வஆதுஸ்ஸகாத்)
* களவு - கை வெட்டல் விவகாரம் (அஸ்ஸாரிகு வஸ்ஸாரிகது பக்துஊ அய்தியஹுமா)
* இணை வைத்தல்  ஓர் அநியாயம் ( இன்னஷ்ஷிர்க் லழுள்முன் அழீம்)
* ஜும்மாவுடைய நேரம் (இஸா நூதிய லிஸ்ஸலாத் மின் யௌம்......)
* பஜ்ர், காலை நேரம் ( கைதுல் அப்யழ், அஸ்வத்......)
* குர் ஆன் சுருக்கமாகக் குறிப்பிட்ட்வற்றை ஹதீஸ் விளக்கியுள்ளமை, குர் ஆன் பொதுப்படையாகக் குறிப்பிட்டவற்றைஹதீஸ் வரையறை செய்தமை

 111) நபியவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட முறையை விளக்குக.
* பாதுகாக்கப்பட்ட ஒழுங்கு 
# மனனம்
@ அரேபியரின் மரபு
@ நபியவர்களின் மீது காட்டிய அன்பு
@ நபியவர்களின் தூண்டுதல் (பல்லிகூ அன்னீ வலௌ ஆயா)

 # செயற்பாடு
@ நபியவர்களை அடியொட்டி அப்படி அப்படியே பின்பற்ற முயன்றமை
@ நபியவர்களின் கட்டளைகளை (சொல், செயல்) உடனுக்குடன் பின்பற்றியமை

 # எழுத்து, கற்பித்தல்
@ எழுதுவதற்கான தூண்டுதல் ( வலது கையைப் பயன்படுத்துங்கள்! )
@ அபூஷா (ரழி) வுக்கு ஹஜ்ஜதுல் விதா உரையை எழுதிக் கொடுக்குமாறு பணித்தமை
@ தான் மறதியுடையவன் என்று முறையிட்டபோது, எழுதிக் கொள்ளுமாறு பணித்தமை
@ ஸஹீபாக்கள் காணப்பட்டமை

 iv) மௌழூஆத்தான ஹதீஸ்கள் தோற்றம் பெற்றமைக்கான காரணங்களைக் குறிப்பிடுக.
@ தலைப்பு குறித்த சிறு அறிமுகம்
@ அரசியல்
@ ஸிந்தீக்கள்
@ மொழி, இனம், கோத்திரப் பற்று
@ சிந்தனைப் பிரிவு
@ தீவிர சமயப் பற்றும் அறியாமையும்
@ வியாபாரம், பிரபல்ய நோக்கம்
@ அதிகாரிகளைத் திருப்திப்படுத்தல்

 v) ஹதீஸ் கலை வளர்ச்சிக்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் பங்களிப்பை மதிப்பீடு செய்க.
@ ஹதீஸ் துறையில் இமாமவர்களின் ஈடுபாடு
@ தனக்கெனத் தனியான விதிகளை அமைத்துக் கொண்டு ஹதீஸ் தொகுப்பில் ஈடுபட்டமை
@ இஸ்னாத், மத்ன் முதலானவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஸஹீஹான ஹதீஸ்களை இனம்கண்டமை
@ ராவிகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி
# தாரீகுல் கபீர் 42000 ராவிகள்
# தரீக் அஸ்ஸகீர் 16000 ராவிகள்
@ ராவிகள் வரிசையுடன் ஹதீஸ்களை மனனமிட்டிருந்ததுடன் அவற்றியத் தனியான கிரந்தத்தில் கொடுத்தமையும்
# அல் ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்புகாரீ
# அல் முஸ்னத் அல் கபீர்
# பிர்ருல் வாலிதைன்
# அதபுல் முப்ரத்
# கழாயா அஸ்ஸஹாபா
# கிதாபுல் இலல்
# கிதாபுல் குன்ஆ
@ இமாமவர்களது காலம் வரை பல தராதரங்களையுடைய ஹதீஸ்கலீ உள்ளடக்கிய கிரந்தங்களே காணப்பட்டன. 
@ ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் உள்ளடக்கிய ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுத்ததில் இமாம் புகாரீ(ரஹ்) அவர்களே முன்னோடியாவார்கள்.

 (02).
i) ஷீஆக்கள் யாவர்? அவர்களது தோற்றப் பின்னணியை விளக்குக
@ மொழிக்கருத்து: கட்சி, குழு, பிரிவு (ஷீஅது அலீ)
@ பிரயோகம்:
# கலீபா அலி (ரழி) க்கு ஆதரவாக இருந்தவர்கள் முஸ்லிம் வரலாற்றிசிரியர்களால் ஷீஆக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
# நாளடைவில், நபிகளாரின் புதல்வி பாத்மா (ரழி) யின் சந்ததியினருக்கே கிலாபத் உரித்தானது எனக்கூறிப் போராடியவர்கள்
# அப்பாஸியர் காலம் முதல் தமக்கெனத் தனியான கோட்பாடுகள் சிலதை வடிவமைத்துக்கொண்டு அஹ்ல் பைத்தினருக்கே கிலாபத் உரித்தானது என்ற கருத்தைக் கொண்டவர்கள் ஷீஆக்கள் என அழைக்கப்பட்டனர்.
@ தோற்றப் பின்னணி
# அலி (ரழி) கிலாபத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து, அவரை ஆதரிக்கும் குழு ஒன்று இருந்து வந்துள்ளது.
# கர்பலாவில் ஹுஸைன் (ரழி) யின் மரணத்தைத் தொடர்ந்து அஹ்ல் பைத்தினரைத் தீவிரமாக ஆதரிக்கும் குழுவொன்று உருவாகியுள்ளது
# நாளடைவில் ஷீஆக்களின்  அரசியல் சிந்தனை அவர்களின் அரசியல் கோட்பாடாகப் பரிணாமம் அடைந்தது.

 ii) ஷீஆக்களின் பிரதான கோட்பாடுகளைத் தெளிவுபடுத்துக.
@ இமாமிய்யத்
* இமாம்களின் மீதான நம்பிக்கை. 
* இமாம்களை நம்பிக்கை கொள்வது ஈமானின் ஒரு பகுதி. 
* இமாமத் அலி - பாத்திமா வாரிசு
* எல்லாக் காலங்களிலும் இமாம்கள் இருப்பர்

 @ இஸ்மத்
* இமாம் பாவம் செய்யாதவர் / பாவச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்
* இமாம் பரிபூரணமானவர்

 @ தகிய்யா
* ஒருவர் தனது உயிர், உடமை, மானம் முதலானவற்றைப் பாதுகாக்கத் தனது உள்ளத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றை மறைத்து வெளிரங்கத்தில் இதற்கு முரணாக நடப்பது.
* இது உண்மை மறைப்பு எனப்படும்

 @ ரஜஇய்யா
* இமாம்களது மீள் வருகை
* மறைந்துள்ள 12வது இமாம் மீண்டும் வந்து நீதியை நிலை நாட்டுவார்.


iii) ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆக்களிடமிருந்து ஷீஆக்கள் எவ்வாறு வேற்படுகின்றனர் என்பதைக் குறிப்பிடுக.

*அஹ்லுஸ்ஸுன்னா பிரிவினர், ஸஹாபாக்களால் அறிவிப்புச் செய்யப்படும் ஹதீஸ்களை எத்தகைய வேறுபாடுமின்றி ஆஎற்றுக் கொள்வர். ஆனால், அஹ்லுஷ்ஷீஆப் பிரிவினர் அஹ்லுல்பைத்தினரினதும் அவர்களுக்குச் சாதகமான கருத்துடையவர்களின் (இமாம்கள்) ஹதீஸ்களை மட்டுமே ஏற்றுக் கொள்வர்.

 iv) ஷீஆக்களின் இமாமிய்யா, ஸைதிய்யா பிரிவினரை அறிமுகப்படுத்துக.
 இமாமிய்யா (இன்றைய ஈரானியர்):
# ஷீஆக்களில் தீவிரமான பிரிவினர். இவர்கள் அலி-பாதிமா சந்ததியினருக்கே கிலாபத் தலைமை அமைய வேண்டும் என்பர். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாக இமாமிய்யத்தைக் கருதுவர். 
# இமாமிய்யத்தை நுபுவ்வத்தோடு சேர்த்துக் கொள்வர். 
# இமாம்களை மஃஸூம்களாகக் கருதுவர். 
# எல்லாக் காலங்களிலும் இமாம் இருந்தே ஆக வேண்டும் என்பது இவர்களின் கருத்தாகும். 
# 12 இமாம்கள். இமாம்களை வலி எனவும் குறிப்பிடுவர். 
# ஹிஜ்றி 264ல் சாமிராவில் மறைமுகமாகிவிட்ட 12வது  இமாமை, இமாம் அல்முன்தளிர் என்று குறிப்பிடுவதுடன், அவர் மறுமை நிகழ முன் மீண்டும் வந்து உலகில் நீதியை நிலைநாட்டுவார் எனவும் குறிப்பிடுவர்.
 # இவர்கள் முதல் கலீபாக்களையும், ஆயிஷா, அபூஹுரைரா போன்றோரையும் சபிப்பதுடன் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் எனவும் குறிப்பிடுவர்.

 12 இமாம்கள்
அலி, ஹஸன், ஹுஸைன், ஸைனுல் ஆபிதீன் அல் பாகிர், ஜஃபர் அஸ்ஸாதிக், மூஸா அல்காழிம், அர்ரிழா, முஹம்மத் அல் ஜவாத், அலி அல் ஹாதி, ஹஸன் பின் அஷ்கர், முஹம்மத் (அல் முன்தளிர்)

 ஸெய்திய்யா
# இவர்கள் இமாமிய்யாக்களுக்கு மாற்றமானவர்களாவர்
# ஸெய்த் பின் அலி பின் ஸெய்னுல் ஆபிதீனைப் பின்பற்றுபவர்கள்
# இன்று யமன் நாட்டில் அதிமாக வாழ்கின்றனர்
# மிதமான போக்குடைய இவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு நெருக்கமானவர்கள்
# முதல் மூன்று கலீபாக்களை இவர்கள் சாடுவதில்லை
# கிலாபத்துக்கு, நேர்மையான எவரும் வர முடியும் ஆயினும் அஹ்லுல் பைத்தினரிலிருந்து கலீபாக்கள் வருவது சிறப்பானது.
# அல்குர் ஆனை ஏற்றுக்கொள்வர்
# இவர்கள் நீதியான ஆட்சியைப் பெற்றுக் கொள்ள உமையாக்களோடு போராடினர். இமாம் ஸெய்த் மேற்படி போராட்டமொன்றிலேயே வபாத்தாகியுள்ளார்.
# இமாமகள் வாரிசடிப்படையிலன்றி தெரிவு அடிப்படையில் செய்யப்படவேண்டும் 
# ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இமாம்கள் இருக்கவும் முடியும்
# இமாம்கள் சாதாரண மனிதர்களைவிட உயர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் ம்ஃஸூம்களாகமாட்டார்கள்

 v) ஷீஆக்களதும் காரிஜ்களதும் அரசியல் கோட்பாடுகளை ஒப்பு நோக்குக.
 @ ஷீஆ
# ஆட்சி - வாரிசுரிமை ஒழுங்கில்
# அலி - பாத்திமா சந்ததியிலிருந்து ஆட்சியாளர்கள் வருவர்
# இமாம்கள் மஃஸூம்கள்
# ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள்


@ காரிஜ்
# ஆட்சி - மக்கள் தேர்வு
# தகுதியுள்ளவர்கள் எவரும் ஆட்சியாளராக வரலாம்
# தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்
# ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதை பாவமெனக் கருதியோர்

 (03).
i) அழகியல் பற்றிய இஸ்லாமிய எண்ணக்கருவைத் தெளிவுபடுத்துக.
# இஸ்லாம் இயற்கை மாற்றம் என்ற வகையில் அழகை அங்கீகரித்துள்ளது
# குர் ஆன், ஹதீஸ் பிரயோகங்கள் (ஹுஸ்ன், ஜமால், ஸீனத்.............)
# அழகியலை தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை இஸ்லாம் ஆதரிப்பதில்லை
# அழகு சகல அம்சங்களிலும் புலப்படவேண்டும் என்பதை இஸ்லாம் விரும்புகின்றது.
  (அழகிய கடன், அழகிய வரலாறு, அழகிய படைப்பு, அழகிய பண்பு, அழகிய படைப்பு............)

 ii) இஸ்லாமிய உலகில் எழுத்தணிக்கலையின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுக.
# லகமைட்ஸ் ஆட்சியில் ஹிரா / அன்பார் பிரதேசத்தில் அரபு எழுத்துக்கள் தோற்றம் பெறுதல்
# அரபு எழுத்துக்கள் அரேபிய வர்த்தகர்களூடாக ஹிஜாஸில் அறிமுகமாதல்
# நபியவர்கள் காலத்தில் அல்குர் ஆன் எழுதப்பட்டபோது அதனை அழகாக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டமை
# ஆரம்பமாக கூபி எழுத்துக்கள் பிரயோகிக்கப்பட்டமை
# சிற்பம், ஓவியம் போன்றன இஸ்லாம் வெறுத்த அம்சங்களாக இருந்ததனால், முஸ்லிம்கள் தமது அழகியல் உணர்வை வெளிபடுத்தும் ஊடகமாக அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தியமை

 iii) எழுத்தணி வகை நான்கைக் குறிப்பிட்டு அவற்றின் வடிவமைப்புக்களை விபரிக்க
@ எழுத்தணி வகை
* கூபி
* நஸ்க்
*ஸுலூஸ்
* ரிக்ஆ
* நஸ்தாலிக்
* முஹக்கிக்
* ஹத் பாபுரி
* ரைஹானி

 @ வடிவமைப்புக்கள்
# கூபி
* நேர்கோடுகள், கோணங்கள் அதிகம்; புள்ளிகள், உயிர்க்கோடுகள் அற்றவை

 # நஸ்க்
* வட்டமானவை, புள்ளிகள், உயிர்க்குறிகள் உண்டு, இலகுவாக வாசிக்கலாம்.

 # ஸுலூஸ்
* தடிப்பமானது, நேர்கோடுகள், கோணங்கள் கொண்டவை, தலைப்பு இடவும் அலங்கார வேலைகளுக்கும் ஏற்றவை

 # ரிக்ஆ
* சிறியவை, தடிப்பற்றவை, புள்ளிகளற்றவை, வளைகோடுகள் அதிகம், எழுத்துக்களின் இறுதி வட்டமாக இருக்கும்.

 # ரைஹானி
* தடிப்பற்றவை, நேர்கோடுகள், கட்டிரை உள்ளடக்கத்துக்கு ஏற்றவை

 & நடைமுறையில் பாவனையில் உள்ள எழுத்து "நஸ்கி" எழுத்தாகும்.

 iv) மஸ்ஜித் கட்டடக்கலையின் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
1. குப்பா
2. மினாரா
3.மின்பர்
4.மிஹ்ராப்

 அறபு எழுத்தணி, அறபெஸ்கியூ எழுத்தலங்காரங்கள் காணப்படும்.
உருவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

 v)அல் ஹம்றா மாளிகையின் சிறப்பம்சங்களை விவரிக்க.
ஸ்பெய்னின் இயற்கை அழகு மிகுந்த இடத்தில் காணப்ப்படுகின்றமை.

 பிரதான அம்சங்கள் 
1. நீதியின் வாயில்
2. தூதுவர் மண்டபம்
3. மீன் நீர்த் தடாகம்
4. சிங்க மண்டபம்
5. இரு சகோதரிகள் மண்டபம்

அழகு
நிறப்பொருத்தம்
விகித சமப் பொருத்தம்
மாபல் அலங்காரம்
எழுத்தணி அலங்காரம்
msbooosary@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக