ஞாயிறு, 30 அக்டோபர், 2011

எமது ஊரா இது....? வெட்கக் கேடு...!

பாதுகாப்பு அமைச்சின் குற்றத்தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, கஹட்டோவிட்ட மக்கள், தங்களது ஒத்துழைப்பை வழங்குவதில் கரிசனை இல்லாமல் இருப்பதாக நிட்டம்புவ பொலீஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு அதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.


குறித்த கருத்து தொடர்பாக அலசியதில் தெரியவந்த விபரங்கள் இதோ.

போதைப் பொருள் மற்றும் சூதாட்டம் போன்ற குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் குற்றத்தடுப்புப் பிரிவு, ஊர் ஊராகச் சென்று மக்களை அறிவூட்டும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது. இதன் ஓரங்கமாக, எமது கிராம மக்களுடனான ஒரு கலந்துரையாடலுக்காக நிட்டம்புவ பொலீஸ் நிலைய அதிகாரிகள் அண்மையில் வருகை தந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி எமது ஊரைச் சேர்ந்த சில பிரமுகர்களிடம் ஏற்கனவே பொலீஸாரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், எமது ஊர்வாசிகள் சுமார் பத்துப் பேர் மாத்திரமே இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மிகக் குறைவான வருகையைக் கண்டு அதிருப்தியடைந்த பொலீஸ் அதிகாரி, கூட்டத்தை இரத்துச் செய்துவிட்டுச் சென்றுள்ளார். எமது ஊராரின் கரிசனையற்ற போக்கை மிகவும் வேதனையுடன் விமர்சிக்கும் போதே மேற்கண்ட கருத்தை அந்த அதிகாரி கூறியிருந்தார்.

குற்றங்களை ஒழிப்பது தொடர்பில் முன்மாதிரியாகத் திகழ வேண்டிய ஒரு முஸ்லிம் கிராமத்தின் போக்கு எவ்வளவு கவலைக்கிடமாக இருக்கிறது?!
இரண்டு கிலோ அரிசியைப் பெற்றுக்கொள்ள அறிவித்தல் எதுவுமின்றியே முண்டியடிக்கும் எமது மக்கள், ஏன் தான் தங்களது பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வு பற்றிய கரிசனையின்றி இருக்கிறார்களோ.......?!!     

1 கருத்து:

  1. கஹடோவிடவில் நடக்கின்ற நிகழ்வுகளை உடனுக்குடன மொபைல் மூலமாக பெற்றுக்கோள்ள உங்களது மொபைல் இல்
    follow kahatowitalert என டைப்செய்து 40404 எனற இலக்கத்திற்கு SMS அனுப்புங்கள்.
    நன்றி
    கஹடோவிடஅலட்

    பதிலளிநீக்கு