கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகள், ஏனைய சிங்கள பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது, கல்வித் துறையில் மிகவும் பின்தங்கி அதல பாதாளத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
வெயாங்கொட Siyane College of Education கேட்போர் கூடத்தில், லசந்த அலகியவன்ன மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அத்தனகல்ல கல்வி வலயத்தில் 2011 ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான பாராட்டு விழாவின் போதே கவலை தரும் இந்த நிலை அவதானிக்கப்பட்டது.
இன்று (04.12.2011) இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன உரையாற்றும் போது தெரிவித்த சில புள்ளி விபரங்களின் சாராம்சத்தையும் எமது அவதானத்தில் பெறப்பட்ட சில புள்ளி விபரங்களையும் கீழே தருகிறோம்.
- இவ்வருட புலமைப் பரீட்சையில் தேசிய மட்டத்திலான சித்தியடைவு வீதம் 11%.
- அத்தனகல்ல தொகுதி மட்டத்தில் சித்தியடைவு வீதம் 19%.
- அத்தனகல்ல தொகுதியில், சித்தியடைந்த மாணவர்கள் ஆகக் குறைந்தது ஒருவரையாவது கொண்ட பாடசாலைகள் 29.
- இவற்றுள் முஸ்லிம் பாடசாலைகள் 04.
- எமது தொகுதியில் மாணவர் ஒருவர் பெற்ற அதி கூடிய புள்ளி 191. இவர் St. Mary's College ஐச் சேர்ந்தவர்.
- கூடுதலான சித்தியடைந்த மாணவர்களைக் கொண்ட பாடசால St. Mary's College. மாணவர் எண்ணிக்கை 59
- அதி கூடிய சித்தியடைவு வீதத்தைப் பெற்ற பாடசாலை Hiripitiya Maha Vidyalaya. அடைவு வீதம் 40.67%. சித்தியடைந்த மாணவர்கள் 53.
இனி எமது சமூகத்தின் நிலை.....
- அத்தனகல்ல தொகுதியில் சித்தியடைந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 448. அதில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 25. வீதம் 5.58%.
- கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்
- சித்தியடைவு வீதம் - 11.36%
- தொகுதியில் நிலை - 18
- சித்தியடைந்த மாணவர் எண்ணிக்கை - 5
- அதி கூடிய புள்ளி - 180
- உடுகொட அரஃபா ம.வி.
- சித்தியடைவு வீதம் - 10.81%
- தொகுதியில் நிலை - 20
- சித்தியடைந்த மாணவர் எண்ணிக்கை - 4
- அதி கூடிய புள்ளி - 172
- கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி.
- சித்தியடைவு வீதம் - 7.69%
- தொகுதியில் நிலை - 23
- சித்தியடைந்த மாணவர் எண்ணிக்கை - 3
- அதி கூடிய புள்ளி - 166
- திஹாரிய அல் அஸ்ஹர் ம.க.
- சித்தியடைவு வீதம் - 5.73%
- தொகுதியில் நிலை - 26
- சித்தியடைந்த மாணவர் எண்ணிக்கை - 11
- அதி கூடிய புள்ளி - 182
கவலை தரும் மேற்படி புள்ளி விபரங்கள் ஒரு புறம் இருக்க, இந்த விழாவுக்கு கஹட்டோவிட்ட அல் பத்ரியா மற்றும் பாலிகா பாடசாலைகளின் அதிபர்கள் வருகை தராமை, எமது சமூகத்தின் கல்வியில் அவர்கள் எவ்வளவு அக்கறையுடன்(?) இருக்கிறார்களளென்பதைக் காட்டுகிறது.
"தலைமை என்பது மதிப்போடு அழைக்கப் படுவதற்காக அல்ல; மாறாக, அது தமக்குக் கீழ் வருகின்ற சமூகத்தை மேம்படுத்துவதற்காக" என்பதை இவர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ?!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக