திங்கள், 26 டிசம்பர், 2011

K.P. கோத்திரத்தின் ஒன்றுகூடல்

எமது கிராமத்தின் மதிப்பு மிக்க கோத்திரமான K.P. கோத்திரம், அதன் நான்கு தலைமுறையினரையும் கூட்டி, 25.12.2011 ஞாயிரன்று ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தது. பரந்தும் பிரிந்தும் செல்லும் குடும்பங்களை ஈர்த்து, ஒன்றிணைக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்த கோத்திரத்தின் 38 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். K.P. கோத்திரத்தின் முதலாவது தலைமுறை உறுப்பினர்களான, K.P. ரவூப் அவர்களின் பிள்ளைகளும் மருமக்களும் பிரதம அதிதிகளாக இங்கு கௌரவிக்கப் பட்டனர்.

இரத்த உறவுகளை ஒன்றிணைத்த இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வில், K.P. கோத்திரம் கடந்து வந்த பாதை, அது பட்ட கஷ்டங்கள், அதன் வெற்றிகள் மற்றும் இந்த வெற்றிகளால் இந்த ஊருக்கு ஏற்பட்ட நன்மைகள் போன்ற பல விடயங்களுடன் அதன் நீண்ட வரலாறும் அலசப்பட்டன. அத்துடன் சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோருக்குமான நிகழ்ச்சிகள், போட்டிகள் என்பன நடாத்தப்பட்டு, இந்த மகிழ்ச்சி, பன்மடங்காக மெருகூட்டப்பட்டது.

குடும்பங்களிடையே புரிந்துணர்வையும் சகவாழ்வையும் ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான ஒன்றுகூடல்கள் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும். இவை சமூக ஒற்றுமைக்கான அத்திவாரங்கள் என்ற வகையில், அடிக்கடி இடம்பெற வேண்டும் என்பதும் முக்கியமாகும்.

10 கருத்துகள்:

  1. கஹடோவிட வாழ் குடும்பங்களே! கோத்திரங்களே! வாருங்கள், நாமும் இந்தக் கே. பீ கோத்திரத்தைப் போல எமது குடும்பங்களை ஒன்றிணைத்து ஒற்றுமைப்படுவோம்!

    பதிலளிநீக்கு
  2. What's the use of the blog, if you are not following hot matters?

    Why didn't you say anything about the A/L results?

    One of the students from AL ADRIYA has got 3 'A's.

    Try to collect the other details and publish.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டப்படவேண்டிய விடயம் தான் குடும்பங்களுக்கு இடையிலான ஒன்றுகூடல்கள். இது பாரம்பரியமாக எமது ஊரிலே வீடுகளில் இடம்பெற்று வந்த ஒன்று தான், புதிதாக வந்த சிலர் அதனை கந்திரி கொடுக்கிறார்கள் என்று சொல்லி திட்டி தீர்க்கிறார்கள், அதுமட்டுமன்றி இவ்வாறு செய்கின்ற விருந்துகளை மூட நம்பிக்கைகள், வீணான செலவு என்றெல்லாம் சொல்லுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் குடும்ப அங்கத்தவர்களுக்கு இடையில் உள்ள பல தேவைகளை கடன் பிரச்சினைகள்,பொருளாதார கஷ்டங்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு நல்ல வினைத்திறன்மிக்க ஆலோசனைகளை பெறக்கூடியதாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. கஷ்டோவிட்டியான்30 டிசம்பர், 2011 அன்று 9:46 PM

    -நேம்லஸின் ஏ.எல். பெறுபேறு தொடர்பான கருத்து முற்றிலும் தவறானதாகும். பெறுபேறு தொடர்பாக நாடே குழம்பிப்போயுள்ள நிலையில், எப்படி அய்யா பெறுபேற்களை வெளியிடுவது? இதில் உள்ள பிறிதொரு விடயம் என்னவெனில் மூன்று ஏ சித்தி பெற்றவர்கள் இங்கு எவரும் இல்லை என்பதுதான்.

    கே.பீ. குடும்பம் குழப்பக்காரக் குடும்பம் என்று கூறுகின்ற பெயரில்லாதவரின் வார்த்தைகள் உண்மைக்குப் புறம்பானது மாத்திரமன்றி சொந்தக் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டதுமாகும். அப்படியானால், இப்படிச் சொன்னவரின் குடும்பம்கூட ஊரிலும், குடும்பங்களிலும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருந்த குட்ம்பம்தான். யோவ், எந்தக் குடும்பத்தில்தானய்யா பிரச்சினை இல்லை. தனி நபர் ஒருவரோ, ஒரு குடும்பமோ, ஒரு குழுவோ யார்தான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அதை ஏற்று அங்கீககரிக்கும் மனப்பக்குவம் மனிதன் என்ற வகையில் எல்லோரிடமும் இருத்தல் அவசியம். எனவே, யார் செய்தார்கள் என்பதைப் பார்க்காமல், நல்ல அம்சங்களை ஏற்கப் பழகுவோம்.

    இந்த ஒன்றுகூடலின்போது இடம்பெற்ற ஒரு விடயத்தை கூறாமல் இருக்கவும் முடியாது. கே.பீ. கோத்திரத்தார் நல்லதொரு நோக்கில் கூடியபோதும், அவர்களுக்குள்ளேயே முக்கியமாமான ஓரிருவர், இந்த நிகழ்வை, பித்-அத் எனக் கூறி-விமர்சித்துக் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டார்களாம். இதில் சுவரசியமான விடயம் என்னவெனில், புது விடயங்களுக்கெல்லாம் பித்-அத் பத்வாக் கொடுக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர்கூடக் கலந்து சிறப்பித்தார் என்பதுதான். இது என்னவகையான மார்க்கம் என்றுதான் எனக்கும் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. விளங்கும் சுனங்கும். யார் ஆது பித்அத் என்று பின்வாங்கியது. மேலும் யார் அந்த பத்வாக் கம்பனியில் வேலை செய்யும் நபர்? இந்த பித்அத் பத்வாக் கம்பனியில் வேலை செய்யும் பலர் பகிரங்கமாக சிகரட் பிடிக்கிறார்கள். அதற்கு அந்த நிறுவனம் இன்னும் பத்வா வழங்கவில்லையோ தெரியாது...!

    பதிலளிநீக்கு
  6. It is great that even one person has raised this issue. Really, lot of people are curious to know the base (proof) to refrain from such a good gathering. If those who refrained can forward an unshakeable reason, then it is good for all of us follow rather than keeping the proof within themselves

    பதிலளிநீக்கு
  7. anyway, this is start from sadakathulla family. his great son wafa shazuli starts this get to gather. alhamdhullillah.

    பதிலளிநீக்கு
  8. குடும்பங்களின் ஒற்றுமை வெருமனே சாப்படிலும் கூத்திலும் இருந்தால் அதட்ர்காக இவ்வலவு பாராட்டுகளும் கோசங்களும் அவசியமே இல்லை. ஒற்றுமயின் குர் ஆனியப் பார்வயை முன்வைக்க முடியாமல் போன மூன்று மௌலவிகளும் இனியாவது சிந்திக்க வேண்டும். அது மட்டுமல்ல. பித் அத் என்று சொன்னதாக சொல்லப்படுபவர் சொல்லவே இல்லை என்று சத்தியம் செய்கிராராம். அவதூறுகளுக்கு பயந்து கொல்லுங்கள் kp குடும்பத்தாரே.மற்ரொறு ஸ்கோதரரும் இதே போன்று கவலைப்பட்டaர். ப்டித்த குடும்பமாமே!!!!!!!!!!!!!!!!
    பார்த்து நடக்கக் கூடாதோ????????????? = வெளியூரான்=

    பதிலளிநீக்கு
  9. அறியாமல் உளறும் பெயரில்லாதவருக்கு28 ஜனவரி, 2012 அன்று 9:16 AM

    இவ்வாறு ஒற்றுமையைப் பற்றிக் கவலைப்படும் சகோதரரின் / சகோதரியின் குடும்பத்திலும் இரு முறை இவ்வாறான ஒன்றுகூடல்கள் நடைபெற்றதை ஊரே அறியும். ஆனால் அந்தக் குடும்பத்திலும் இந்தக் கணம் வரை இரண்டு பேர் முகம்பார்த்துக் கதைக்காமல் இருக்கிறார்களே! இந்த முறுகலை நீக்கி வைப்பதை விட்டுவிட்டு அடுத்தவனின் விடயத்தில் ஏன்தான் மூக்கை நுழைக்கிறார்கலோ?? கே.பீ குடும்பத்தில் இன்னும் ஒற்றுமை குலையவில்லை. எனவே முதலில் உங்கள் குடும்பத்து ஒற்றுமையைப் பாருங்கள். அவதூறு தொடர்பான கருத்துக்கான பதில்ஐ பிறிதொரு சந்தர்ப்பத்தில் தர முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு