ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கண்மூடித்தனமான பின்பற்றல்.....

ஒரு தாயும் ஒரு மகளும் சமையலறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். 'சொஸேஜஸை' கழுவி சுத்தப்படுத்திய தாய், அதனை சமைக்கும் பாத்திரத்தினுள் இடும் போது, இரு நுனிகளையும் வெட்டி விட்டாள்.

மகள் கேட்டாள்
, "ஏனம்மா அதன் நுனிகளை வெட்ட வேண்டும்?"

தாய் சொன்னாள், "எனக்கும் தெரியாது. எனது அம்மா, உனது பாட்டி, இப்படித்தான் செய்தார்கள். அது போலவே நானும் செய்கிறேன்.".

சில நாட்கள் கழித்து, மகள் தனது பாட்டி வீட்டுக்கு போனாள். அன்று, பாட்டி 'சொஸேஜஸ்' சமைத்தாள். அப்போது அங்கு வந்த பேத்தி, "எதற்காக 'சொஸேஜஸின்' இரு நுனிகளையும் வெட்டி விடுகிறீர்கள்?" என்று கேட்டாள்.

பாட்டி சொன்னாள், "விசேட காரணங்கள் எதுவும் இல்லை. 'சொஸேஜஸின்' நீளத்தை விட சட்டியின் அகலம் குறைவு. அதனால், சட்டிக்கு ஏற்றதாக நீளத்தை சரிப்படுத்துகிறேன்".

புரிந்து விட்டது!
அகன்ற பாத்திரம் இருந்தும், தனது தாய் செய்த தவறு அவளுக்குப் புரிந்து விட்டது!!
எந்த ஒன்றுக்கும் காரணம் தெரிய வேண்டும் என்ற அவளது ஆர்வத்துக்கு பிரதி பலன் கிடைத்து விட்டது.

அன்று, அவளது டயரியில் அவள் எழுதினாள்,
 'நல்ல வேளை நான் காரணத்தைத் தெரிந்து கொண்டேன். எனது தாயைப் போல் எல்லோரும் இருந்தால், பின்னால் வரும் பரம்பரை, காரணமே தெரியாமல் இந்த விடயத்தை தொடர்ந்திருக்கும். அப்படித் தொடர்ந்தால், எதிர் காலத்தில், சொஸேஜஸுக்கான சமையற் குறிப்பில், அதன் நுனிகளை வெட்டும் விடயமும் இடம்பெற வாய்ப்புண்டு.'

12 கருத்துகள்:

  1. ஏதோ தௌஹீத் கருத்துடையவர்கள் என்பதால் தான் உங்களுடைய பாலர்பாடசாலைக்கு எமது பிள்ளைகளை அனிப்பினோம் போயும் போயும் தௌஹீத்வாதிகளின் பிள்ளைகளை யஹுதிகளின் பிள்ளைகள் என்று சொல்லும் ஒருவரின் கைகளினால் எமது பிள்ளைகளுக்க பரிசில் வழங்கினீா்களே! ஒங்களுக்கெள்ளாம் ஒரு கொள்கை...

    பதிலளிநீக்கு
  2. இந்த நாட்டின் ஜனாதிபதியின் கையினால் உங்கள் பிள்ளைகளுக்கு பரிசில் வழங்கினால் என்ன செய்வீர்கள்? எங்களுக்கு இப்படி அநாமதேய comments அடிப்பீர்களா?....

    நீங்கள் குறிப்பிடும் நபருடன் உங்களுக்கு இருப்பது கொள்கை விரோதமாக எமக்குப் படவில்லை.

    தௌஹீதுடைய கொள்கை சிறந்த முன்மாதிரிகளால் வளர்க்கப் படவேண்டியவை. நீங்கள் கூறும் விதத்தில் நடப்பதாயின், நான் நினைக்கிறேன், பஸ்ஸில் கூட நீங்கள் போக முடியாது.

    பதிலளிநீக்கு
  3. அப்போ பரிசு வழங்கியோர் யூதர்களைவிட மோசமானவர்களா? முதலில் நீங்கள் தௌஹீத் வாதிகளா எனப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கொள்கைக்கு எதிரான ஒருவரின் கையினால் பரிசு பெறுவது தவறு என்பதற்கு, அது இஸ்லாமிய வழி முறைக்கு மாறானது என்பதற்கு, தகுந்த ஆதாரம் எதனையும் முன்வைக்க முடியுமா?

    இல்லா விட்டால், பளிச்! சொன்னது போல் அது கொள்கை சார்ந்த எதிர்ப்பே அல்ல.

    இந்த தௌஹீத் வாதிகளே இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  5. தக்கியாக்காரன்18 டிசம்பர், 2011 அன்று PM 6:30

    மிஸ்டர் பளிச்! உங்கள் தௌஹீத் வாதிகளின் தன்மை என்னவென்று உங்களுக்காவது புரிகிறதா? இப்படி எல்லோரையும் ஒதுக்கி வைக்கும் மெண்டாலிடி அவர்கள் பேசும் ஸுன்னாவிலும் இல்லையே! இஸ்லாத்தின் பரம வைரியான அபூ ஜஹ்லின் இரு ஆண் மக்களை நபியின் புதல்விகள் மணந்திருந்தார்கள் என்ற விடயமாவது இந்த முட்டாள்களுக்குத் தெரியாதா? இவர்கள் கொள்கை வெறி பிடித்தவர்கள்! அதே நேரம் அவர்களோடு சேர்ந்து நடந்த உங்களுக்கும் இது நல்லதொரு பாடமாக இருககட்டும்!!!

    பதிலளிநீக்கு
  6. உண்மையான தௌஹீத்காரன்18 டிசம்பர், 2011 அன்று PM 7:32

    உங்கள் பிள்ளைகளுக்கு மூன்று பேர்தான் பரிசு கொடுத்தார்கள். ஒருவர் முஹம்மத் ஸேர், அடுத்தவர் அவரது சகோதரர் ஸாலி ஸேர், மூன்றாமவர் ரஸ்ஸாக் மௌலவி. இவர்களில் யார் கூடாதவர்? எந்த வகையில் கூடாதவர்? இதற்கு குர் ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் இவர்கள் ஆதாரம் காட்டட்டும்!

    பதிலளிநீக்கு
  7. பெயரின்றிக் கருத்துக் கூறிய கருத்தற்றவருக்கு!

    தௌஹீத் பிள்ளைகளுக்கு ரஸ்ஸாக் மௌலவி பரிசு கொடுத்தது தவறு என்று கூறுவதற்கு, உங்களது சொந்தக் குரோதத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு குர்ஆன், ஸுன்னாவிலிருந்து ஆதாரம் காட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. Mr. Palich, அறிவற்ற, கொள்கையென்றால் என்ன்வென்றே புரியாத இந்த மூடர்களின் வாதங்களுக்கு நீங்கள் பதில் கொடுக்கத் தேவையில்லை. இவர்களின் உளரல்கள் முழு தௌஹீத் கொள்கையினதும் கருத்தல்ல என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதை எழுதும் நானும் தஃவா கொள்கையுடையவன்தான். அங்கு இப்படி மனிதர்களை ஒதுக்கி வைக்குமாறு போதிக்கப்படுவதில்லை. வைர நெஞ்சம் கொண்ட வன்மம் பிடித்தவனையும் வண்ணமாய்த் தனது வட்டத்துக்குள் வைத்திருக்க மேற்கொள்ளும் முயற்சியே உண்மையான அழைப்புப் பணியாகும். எனவே, எவனோ / எவளோ ஒரு வீம்பு பிடித்தவனி/ளின் வெற்று வார்த்தைக்காக தஃவாவையோ அல்லது அது சார்ந்தவர்களையோ குறை சொல்லவேண்டாம். இதனை இத்தோடு விட்டுவிடுங்கள்!!!

    பதிலளிநீக்கு
  9. மன்னியுங்கள்! மறந்துவிடுங்கள்!!

    மன்னிப்பதும், மறந்துவிடுவதும் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகள் என அல்லாஹ் அல்குர் ஆனூடாடாக ஆணையிடுகிறான். இஸ்லாத்தின் பரம வைரிகளையெல்லாம் நபியவர்கள் மன்னித்தார்கள். இதற்கு நபியவர்களின் வாழ்க்கையில் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். எனவே குர்ஆனை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள நாமும் இந்தப் பண்புபகளைக் கடைப்பிடிப்போமாக!

    "உங்களில் அல்லஹ்விடத்தில் மிகவும் விருப்புக்குரியவர் கோபத்தை விழுங்கிக்கொள்பவரும் மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்துக்கொள்பவருமே." (அல்குர்ஆன்)

    பதிலளிநீக்கு
  10. சகோதரர் அப்துல்லாஹ்வின் கருத்துத்தான் எங்களதும் கருத்து. எமது தளத்தின் கருப் பொருள்களாக அமைந்திருப்பவற்றுள் ஒன்று 'சக வாழ்வு'. எனவே, இங்கு யாரையும் குத்திக்காட்டுவதோ, குறை கூறுவதோ, இழிந்துரைப்பதோ நோக்கமல்ல.

    தூர நோக்கோடு சிந்தித்து, செயலாற்ற எல்லோரும் முன் வர வேண்டும்.எமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை முன்வைப்பதை விட்டும் தவிர்ந்து, எல்லோரையும் அரவணைக்கும் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  11. நிச்சயம் நாங்கள் யஹூதிகளுக்கு மாறு செய்கிறோம் (ஹதீஸை பின்பற்றுகிறோம்)

    அவர்கள் சூரியனை ஆராய்கிறார்கள் நாங்களோ இன்னும் சூனியத்தை தான் ஆராய்கிறோம்.

    அவர்கள் ஒற்றுமையாக நின்று எங்களை எதிர்கிறார்கள், ஆனால் அவர்களை எதிர்ப்பதில் கூட எங்களுக்குள் ஒற்றுமையில்லை.
    ...
    அவர்கள் அதிகம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள் நாம் அதனை குறைவாகதான் செய்கிறோம்.
    I like these verses

    பதிலளிநீக்கு
  12. This is an example for problem creating family

    பதிலளிநீக்கு