வியாழன், 22 டிசம்பர், 2011

'பாலிகா'வுக்குக் கிடைத்த அரச உதவிகள் நழுவிச் செல்லவில்லை....

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா பாடசாலையில் கட்டப்பட்டு வருகின்ற மலசல கூடங்கள், கட்டுமானப் பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளன.

இதன் பணிகளை
மேற்பார்வை செய்த அதிகாரிகள், இந்த மலசல கூடத் தொகுதி மிகவும் சிறந்த முறையில் கட்டப் பட்டுள்ளதாக பாராட்டுக்களை அள்ளி வழங்கி உள்ளனர்.

இதன் கட்டுமானப் பணிகள் சற்று தாமதம் அடைந்ததை விமர்சித்து, 'நழுவிச் செல்லும் அரசாங்க உதவிகள்' என்ற தலைப்பில் எமது ஊரின் இணையத் தளமொன்றில் ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

தகவல்: பயாஸ் ஹாஜியார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக