ஒரு கல்லூரிப் பட்டமளிப்பு விழாவின்போது வைரமுத்து உதிர்த்த வைர வரிகள் சிலதை இதோ உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:
"இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."
குடிகாரன் ஒருவனின் கல்லறை வாசகம் இது:
"தண்ணீரில் மிதந்தவன்
தரையில் மூழ்கிவிட்டான்."
நடிகை ஒருத்தியின் கல்லறை மீது இப்படி எழுதப்பட்டிருந்ததாம்:
"தயவு செய்து திறந்து பார்த்துவிடாதீர்கள்,
மேக்கப் இல்லாமல் தூங்கிக்கொண்டிருக்கிறாள்."
ஒரு கம்யூனிஸ்ட் தொழிலளியின் கல்லறை வாசகம் இவ்வாறு சுவைபட இருந்ததாம்.
"இங்கும் (புதை குழியில்) கூட
இவன்
கறையான்களால் சுரண்டப்படுகின்றான்."
ஒரு விலைமகளின் கல்லறை வாசகம் எப்படிக் குறும்பாக இருந்தது என்று பாருங்கள்!
"இங்குதான் இவள்
தனியாகத் தூங்குகிறாள்."
இப்படி எழுதப்பட்ட கல்லறை வாசகங்களில், அரசியல்வாதி ஒருவனின் கல்லறை மீது எழுதப்பட்ட
பின்வரும் வாசகத்துக்கே முதலிடம் கிடைத்ததாம். அதையும்தான் வாசித்துச் சுவையுங்களேன்!
"தயவு செய்து இங்கே
கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்துவிடப்போகிறான்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக