சனி, 24 டிசம்பர், 2011

அல் அக்ஸா தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள்

* கி.பி. 636   இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களால் ஜெரூஸலம் கைப்பற்றப்படுதல் மற்றும் அவர்களுடைய மஸ்ஜித் கட்டப்படுதல்

* கி.பி. 685 உமையா கலீபா
அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களினால் Dome of the Rock இன் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படல்

* கி.பி. 691 Dome of the rock இன் கட்டுமானப் பணிகள் முடிவடைதல்

* கி.பி. 693 கலீபா அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களினால் மஸ்ஜிதுல் அக்ஸாவின் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படல்

* கி.பி. 705 மஸ்ஜிதுல் அக்ஸாவின் கட்டுமான வேலைகள் முடிவடைதல் (அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களின் மகன் கலீபா வலீதின் காலம்)

* 15.07.1099 சிலுவைப் போராளிகளால் ஜெரூஸலம் கைப்பற்றப்படுதல் மற்றும் Dome of the rock ஒரு தேவாலயமாக மற்றப்படுதல், மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு மேல் சிலுவை ஏற்றப்படுதல்

* 02.10.1187 மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களினால் மீட்கப்பட்டு, புனிதத்தலத்தை சுற்றியிருந்த பாரிய குப்பை கூழங்கள் அகற்றப்படல்

* 09.02.1924 ஜெரூஸலம் நகரம் பிரிட்டிஷ் ஜெனரல் Allen என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஹரம் ஷரீப் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படல்

* 16.08.1929 'அல் புராக்' கிளர்ச்சி வெடித்தல்

* 16.07.1948 புனிதத்தலம் இஸ்ரேலியப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, 65 குண்டுகளால் மஸ்ஜிதுல் அக்ஸாவும் Dome of the Rock உம் தாக்கப்படுதல்

* 07.06.1967 இஸ்ரேலியப் படையினரால் ஜெரூஸலம் நகரும் புனித பைத்துல் மக்திஸ் தலமும் ஆகிரமிக்கப்படுதல் (இன்று வரை இந்த ஆக்கிரமிப்பு தொடர்கிறது)

* 11.06.1967 புனித தலத்துக்குக் கீழ் அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்படுதல்

* 15.08.1967 இஸ்ரேலிய இராணுவப் படையின் பிரதான 'ரப்பி'யும் அவரது சகாக்களும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல்

* 21.08.1969 இஸ்ரேல் அரசில் அங்கம் வகித்த அடிப்படைவாத தீவிரவாதக் குழுக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவுஸ்திரேலிய உல்லாசப் பிரயாணியான மைக்கல் ரோஹன் என்பவரால் பள்ளிவாசலுக்கு தீ வைக்கப்படுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக