ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சர்வதேச சிறுவர் தினம்


ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் என 1979 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .அன்றிலிருந்து இன்றுவரை அன்றைய நாள் சர்வதேச சிறுவர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது .
அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் நாடளாவிய ரீதியில் எமது சிறுவர்கள் பல துஷ்பிரயோகங்களுக்கும்  துன்பங்களுக்கும்  உள்ளாக்கப்பட்டுகிறார்கள்.சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் ,அவர்களை வேலைக்கு அமர்த்தல் ,சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுத்தல் என பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் எமது குழந்தைகளை வீட்டினில் இருந்தவாறே நாம் துஷ்பிரயோகம் செய்வதுதான் இன்றைய காலத்தில் மிகவும் துன்பமான விடயமாக காணப்படுகிறது .ஒவ்வொரு பெற்றோரும்  அங்கே போகாதே , இங்கே போகாதே ,அவன் கூட சேர்ந்துதான் நீ கெட்டு போய் விட்டாய் என்று கூறி வீட்டினில் இருத்தி தொலைக்காட்சி முன் அமர்த்தி தமது குழந்தைகளை தாமே துஸ்பிரயோகம் செய்கின்றனர் .இவ்வாறு பெற்றோர்களை கூட ஏமாற்றும் தந்திரோபாயம் சிகரட் கம்பனிகளுக்கு நன்றாக  தெரிந்துள்ளது .  
அம்மாவை கேட்டால் என் மகன் திரைப்படம் பார்ப்பதில்லை காட்டூன் மட்டும் தான் பார்ப்பேன் என்று கூறுவார்.அது மட்டும் அல்லாது  அவர் குழந்தை காட்டூன் வடிவமாக தன்னை வடிவமைத்து  விளையாட தாய் அதை பார்த்து ரசிப்பார்  .சிறுவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் பார்த்து ரசிக்க அழகுதான் ஆனாலும் காட்டூன் கதாபாத்திரங்களை விலை கொடுத்து வாங்கும் சிகரட் கம்பனிகள் அதன் மூலமாக  தமது  எண்ணங்களை விரைவாகவே குழந்தைகள் மத்தியில் விதைத்து  விடுகிறார்கள் .சிறுவயதில்  இருந்தே குழந்தைகளை ஏமாற்ற  ஆரம்பித்து விடுகிறார்கள் இந்த உண்மை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இலகுவில் புரிந்து விடுவதில்லை.காட்டூன்  இல் தோன்றும் கதாபாத்திரங்களை பார்த்து ரசிக்கும் சிறுவன் அதன்  செயற்பாடுகளை  தானும் விரும்பி செய்யும் போது சில காலங்களின் பிற்பாடு அவன் அந்த செயற்பாடுகளையே விரும்பி ஏற்ப்பவன் ஆகிறான் .
இந்த உண்மைகள் தெரிந்த சிகரட் கம்பனிகள் காட்டூன் கதாபாத்திரங்களை மட்டும் அல்லாது திரைப்பட நடிகர்களை கூட விலை கொடுத்து வாங்கி  திரைப்படங்கள் மூலமும் திரைப்பட பாடல்கள் மூலமும் தமது விளம்பரங்களை  கவர்ச்சிகரமாக காட்டி சிறுவர்களை ஏமாற்றும் வித்தையை முன்னெடுத்து செல்கிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக