வெள்ளி, 17 ஜூன், 2011

A/L வகுப்புகள் பாளிகாவில் ....?

கஹட்டோவிட்ட பாலிகா வித்தியாலயத்தில் அடுத்த வருடம் முதல் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஒரு செய்தி அடி படுகிறது. இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியாமல் போனாலும், இவ்வருட சாதாரண தர பரீட்சையில் சித்தியடையும் மாணவிகளுக்கு, கலைத் துறையில், இந்த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக, காற்றோடு வந்த அந்த செய்தி கூறுகிறது.

பாளிகாவே, இது உன்னால் முடியுமா?




5 கருத்துகள்:

  1. மிஸ்டர் பளிச்! தகவல்களைச் சரியாக அறிந்து கொள்ளாமல் ஒன்று தொடர்பாகச் செய்தி வெளியிடுவது ஊடக தர்மத்தில் எத்தனையாவது அம்சம்??? பாலிகாவி உள்ளா மாணவிகள் இந்த வருடம் ஒ/எல் எடுக்கவுள்ளார்கள் என்று உங்களிடம் அதிபராவது சொன்னாரா? இவர்கள் ஓ/எல் எழுதப் போவதே 2012ல்தான். விடயம் இப்படி இருக்க, அடுத்தவருடம் ஏ/எல் தொடங்க இருப்பதாக நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்????

    "பாலிகாவுக்கு முடியுமா???" என்ற உங்களது தீட்சண்யமில்லாத கேள்விக்கு, முடியாமலில்லை; பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறுவதைத் தவிற வேறு பதிலில்லை.

    பதிலளிநீக்கு
  2. 2012 இல் பாலிகாவில் உயர் தர வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு, பாலிகா மாணவிகள்தான் அவசியம் என்றில்லையே. சா/த எழுதிய ஏனைய பாடசாலை மாணவிகள் வரலாமல்லவா? அவர்களுக்கு உயர் தர வகுப்புக்களை நடாத்துவதில் என்ன தப்பிருக்கிறது?

    அத்துடன், பாலிகாவின் இந்தப் 'பாய்ச்சல்' சரியானது எனவே படுகிறது? சம்பிரதாயத்துக்கு மாற்றமாக பத்ரியாவில் முதலாம் தரத்துக்கு மாணவிகளைச் சேர்த்துக்கொள்ள முடியுமென்றால், பாலிகாவில் மாணவிகளை மாத்திரம் வைத்து A/L ந்டாத்துவதில் தப்பொன்றும் இல்லை. சபாஷ், சரியான போட்டி!

    பதிலளிநீக்கு
  3. mudium, mudium, mudium, thambi , mudium

    பதிலளிநீக்கு
  4. KTJ யின் உத்தியோகபூர்வ வலை தளம்:
    http://kahatowitathowheed.blogspot.com/

    பதிலளிநீக்கு