வியாழன், 9 ஜூன், 2011

கம்பஹா கல்வி வலய தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கஹட்டோவிட்ட பாலிகா சாதனை

மேற்படி போட்டி நிகழ்ச்சிகள் கடந்த மே மாதம் 30ம் திகதி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது தெரிந்ததே. இதன்போது 5 பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு
முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் இதுவரை 12 முதலிடங்களைப் பெற்று சாதனையை நிலை நாட்டிக்கொண்டது. அதிலும் முதலாம் பிரிவில் (தரம் 4,5) முழு மொத்த 7 போட்டி நிகழ்ச்சிகளிலும் இக்கல்லூரி மாணவியர் முதலிடத்தைத் தட்டிக் கொண்டமை சாதனையிலும் சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பெற்றுக் கொண்டோர் விபரம் வருமாறு:

பிரிவு 1
ஆக்கம் - எழுத்து : எம்.என்.தபானி
ஆக்கத் திறன் வெளிப்பாடு : எம்.என்.நிப்லா
பேச்சு : எம்.ஐ.எஃப்.இபாதா
பாவோதல் : பாதிமா ரிஷ்மா
இசையும் அசையும் : யூ.எஸ்.முஷ்பா
வாசிப்பு :  எம்.எம்.எஃப்.முப்லா
நாட்டார் பாடல் : தரம் 5 மாணவியர்

பிரிவு 2
பாவோதல் : எம்.எஃப்.பஸ்ரா
இசை தனி : எம்.ஜே.ஜெஸ்லா
              
பிரிவு 3 
பாவோதல் : எம்.எஃப்.ஸஹீரா
              
பிரிவு 4 
பாவோதல் : எம்.ஐ.எஃப்.ஹாஜரா
கட்டுரை வரைதல் : எஸ்.எச்.எஃப்.ஹுஸ்னா

2 கருத்துகள்: