இலங்கையின் தலைமை நீதிபதி மீது குற்றஞ்சாட்டி, அவரை பதவியில் இருந்து அகற்ற வழி செய்யும் தீர்மானம் ஒன்றை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதிக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் என்ன என்பதை அரசு விளக்கவில்லை.
அதேநேரம் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து அகற்ற வழிசெய்யும் இந்த்த் தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். இதில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
தலைமை நீதிபதியின் நடத்தையும் செயற்பாடும் நாட்டு மக்களின் இறைமையை பாதிப்பதாக அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கேஹலியா ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தீர்மானத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விபரங்களை தற்போதே வெளியிடுவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்கட்சியைச் சேர்ந்த இரான் விக்ரமதுங்க இது குறித்துக் கருத்துக் கூறுகையில், அரசியல் அமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை செல்வதையே இந்த முடிவு காட்டுவதாகக் கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைகளின் நிதி அதிகாரங்களைக் குறைக்கும் சட்ட மூலத்தை தலைமை நீதிபதி தாமதப்பட்டுத்தியமை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பிறகு இலங்கை நீதி சேவை ஆணைக்குழுவின் செயலர் பதவி வகிப்பவரும் தாக்கப்பட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக