இன்றைய தினம் (15.05.2010) கலகெடிஹேன மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற, கோட்ட மட்டத்திலான மானிட விஞ்ஞான தினப் போட்டிகளில் எமது அல் பத்ரியா சார்பில் எந்த ஒரு மாணவரும் பங்கு பற்றவில்லை என்ற அதிர்ச்சி தரும் செய்தி "பளிச்"சுக்குக் கிடைத்துள்ளது.
சமீப காலம் வரை பாடசாலை மட்டப் போட்டிகளில் பிரகாசித்ததன் மூலம் 'சின்ன யாழ்ப்பணம்' என கம்பஹா மாவட்டத்திலேயே பெயர் பெற்றிருந்த எமது அல் பத்ரியா, இன்றைய போட்டிகளுக்கு மாணவர்களை பங்கு பற்றச் செய்யாமை மிகவும் கவலை தருகிறது. அதே நேரம், எமது பாலிகாவைச் சேர்ந்த மாணவிகளாவது பங்கேற்றிருப்பது சற்று ஆறுதல் தருகிறது.
கலகெடிஹேன மகா வித்தியாலயத்தில் எமது பத்ரியா மாணவர்களைக் காணாத ஏனைய பாடசாலை மாணவர்கள், 'இம்முறை தமக்குத்தான் வெற்றி' என்று கூடப் பேசிக் கொண்டார்களாம்.
பத்ரியாவே, நீ பாதை மாறிச் செல்கிறாயா? மாணவர்களின் திறமைகளை தட்டி எழுப்பிப் பிரகாசிக்கச் செய்ய வேண்டிய நீயே, அவர்களைப் போட்டிகளில் பங்கு கொள்ளச் செய்யாமலிருப்பது நியாயமா?
விஞ்ஞானப் பாட ஆசிரியருக்குக்க கூட இப்படியொரு நிகழ்ச்சி நடந்தது தெரியுமோ தெரியாது..!
பதிலளிநீக்கு