ஸலாம் எனும் பதம் உண்மையில் சாந்தி, சமாதானம் எனும் கருத்துகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும் சமனிலை எனும் கருத்தும் அதற்கு உண்டு என்பதை அறபு மொழி நிபுணர்கள் அறிவர். யதார்த்தத்தில் சாந்தி சமாதானம் என்பன கூட சமனிலை எனும் ஆழ்ந்த கருத்தையே உணர்த்தும் என்பதையும் சிந்தனைத் தெளிவு உள்ளவர்கள் சிறப்பாக உணர்ந்துகொள்வர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களிடையே பிரச்சினை ஏற்படுகிறது என்பதன் பொருள் அவர்களிடையே சமாதானம் இல்லாமையே என்பது வெளிப்படை உண்மை. பிரச்சினையில் சம்பந்தப் பட்டவர்கள் தத்தமது கடமைகளில் , பொறுப்புகளில் தவறுவிடும்போதுதான் இந்த நிலை ஏற்படுகிறது . அதாவது தனக்குறிய கடமையை குறைவகவோ அல்லது மேலதிகமாகவோ நிறைவேற்ற விளையிம்போதுதான் பிரச்சினை தலைகாட்ட ஆரம்பிக்கிறது.
அதாவது நிர்நயிக்கப்பட்ட அளவைவிட கூடுவது அல்லது குறைவதுதான் குழப்பத்தின் மூலம். எனவே குழப்பம் அல்லது பிர்ச்சினை நீங்கவேண்டுமாயின் (சாந்தி சமாதானம் ஏற்பட வேண்டுமாயின்) தனக்குறிய நிர்ணயிக்கப்பட்ட அளவை கூடாமலும் குறையமலும் பேணவேண்டியது அத்தியாவசியமாகும். மற்றொரு வார்த்தையில் சொல்வதானால் தனக்குறிய விடயங்களில் சமனிலயைப் பேணவேனண்டும்.
இந்த அடிப்படையில் சமாதானம் நிலவ சமனிலை அவசியம் என்பது தெளிவாகியிருக்கும். அதேபோல் சமனிலைதான் சமாதனம் என்பதும் புலனாகியிருக்கும்.
இன்ஷா அல்லாஹ் மேலும் சில விளக்கங்களுடன் மீண்டும் பதியும்வரை ...
அனைவருக்கும் சாந்தி எனும் சமனிலை அல்லாஹ்வின் புற்த்த்இல் இருந்து கிடைக்க வேண்டும் என வேண்டி விடைபெறுகிறேன்.
நன்றி.
வஸ்ஸலாம்.
Aboo Azma
தொடருமா இந்தப்பணி??????
பதிலளிநீக்குWhy? Don't you like it if we continue in this fashion? We hope we can continue this good work without any problems, Insha Allah. We look forward your visit to this site very often. That will help us developing & continuing this site.
பதிலளிநீக்குAnyhow, we thank you for your visit & the comment you posted.