வெள்ளி, 20 ஏப்ரல், 2012

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

“நாம் எடுக்கும் முடிவுகளே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன” என்பது முதுமொழி. 

 பெரும்பாலும் இது உண்மையாகத்தான் இருக்கும். 

நாம் இப்போது எடுக்கும் முடிவுகளின் பிரதிபலிப்பாகத்தான் நமது எதிர்காலம் இருக்கும். 

நம்முடைய வாழ்க்கையில் எடுக்கும் முக்கியமான முடிவு நமது கல்வியைப் பற்றிச் செய்யும் முடிவே. 

ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு கல்வி, தொழில் ஆகியவை குறித்து சரியான முடிவெடுப்பதில் சிரமம் இருக்கிறது. 

இதற்கு முக்கிய காரணம் அவற்றைப் பற்றி நமக்குப் போதிய தகவல்கள் தெரியாததே. 

இந்த மாபெரும் குறையைத்தான் எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? என்ற இந்தப் புத்தகம் தெளிவுபடுத்த முயற்சிக்கிறது. 

தனது எதிர்கால கல்வி/தொழில் ஆகியவை பற்றித் தெளிவாக முடிவெடுக்கும் அளவுக்கு தகவல்கள் இந்தப் புத்தகத்தில் பொதிந்து கிடக்கின்றன. 

இந்தப் புத்தகத்தின் முதன்மையான நோக்கமே கிராமப்புற மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான். 

நகரத்தில் வாழும் தமது சக மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவர்களுக்குப் போதிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

மேலும் இணையம் பயன்படுத்தும் வசதியில்லாத மாணவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2 கருத்துகள்: