வெள்ளி, 18 மே, 2012

பத்ரியா வசந்தம்

இதென்னடா புது வகை வசந்தம் என்று எமது வாசகர்கள் திகைப்பது தெரிகிறது. வேறு ஒன்றுமில்லை; சமீபத்தில் அரபுப் பிராந்தியத்தில் வெடித்த அரபு வசந்தம் பற்றிக் கேள்விப்பட்டிடுப்பீர்கள் அல்லவா? அது போன்று எமது பத்ரியாவின் உடநிகழ்கால அராஜகங்களையும் அ நியாயங்களையும் தட்டிக் கேட்பதற்கெனத் தோற்றம் பெற்றுள்ள, வீரமும் உணர்வும் மிக்க புரட்சிகரமான ஓர் அமைப்பின் பெயர்தான் இந்த பத்ரியா வசந்தம். வெகு சீக்கிரத்திலேயே இவ்வமைப்பு தனது புரட்சிகர நடவடிக்கைகளை முடுக்கிவிட இருப்பதாக அவ்வமைப்பின் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அப்படி என்னதான் அராஜகமும் அநியாயமும் அங்கு நடைபெறுகின்றன என அதன் தலைவரிடம் கேட்டபோது, அனுமன் வால் போல ஒரு நீண்ட பட்டியலையே எடுத்துப் போட்டார். குறிப்பாக முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கும் இரண்டு முக்கிய ஆசிரியர்கள், நாளொன்றுக்கு 15க்கும் குறைவான பாட வேளைகளையே செய்து வருவதாகவும், இது குறித்து சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர்மாருக்கான கூட்டமொன்றிலும் கல்விப் பணிப்பாளர் ஒருவர் காராசாரமாக வச்சி வாங்கியதாகவும் கூறினார்.

எப்படியோ எகிப்தில் அரபு வசந்தம் ஏற்படுத்திய மற்மலர்ச்சியையும் விழிப்புணர்வையும் போன்று இந்த பத்ரியா வசந்தமும் ஏற்படுத்தினால் சரி.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

நன்றி: அபூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக