சனி, 5 மே, 2012

வேதாளம் மீண்டும்.................! பத்ரியாவும் பாலிகாவும் இணைக்கப்படலாம்?!

அல் பத்ரியாவையும் பாலிகாவையும் இணைத்து, தனி நிருவாகத்தின் கீழ், தனிப் பாடசாலையாக்கும் முயற்சி மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.

அல் பத்ரியாவின் கல்வி நிலை சில வருடங்களாகவே பின்னடைவை நோக்கிச் செல்வதாகவும், இந்த நிலையை ஓரளவேனும் தடுத்து, பத்ரியாவின் நன்மதிப்பைப் பாதுகாக்க இணைப்பதை விட்டால் வேறு வழி இல்லையென்றும், எனவே, உடனடியாகவே இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மத்திய கல்லூரியாக பத்ரியாவை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் சில ஊர் பிரமுகர்கள் தங்களுக்குள் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

கடந்த ஆறு வருடங்களாக, ஒவ்வொரு வருடமும், இந்த கருத்து முன்வைக்கப் பட்டிருந்தாலும், இம்முறை சற்று ஓங்கிய தொனியில் சொல்லப்படுவதாக சிலர் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

அதே வேளை, 'பத்ரியாவை ஆயிரம் பாடசாலையில் ஒன்றாக்குவோம்' என்ற, அதிபராக இருந்த ஜனாப் ரிஷானின் சூழுரை நிதர்சனமாகாததால், விழுந்தாலும் மீசையில் மண் படாத கதையாக, அதிலும் முதலாம் ஆண்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் காலம் நெருங்கி வரும் சமயத்தில், 'மத்திய கல்லூரி' கதை தந்திரமாக முன்வைக்கப் படுவதாக விபரம் தெரிந்த சிலர் சொல்வதையும் கேட்க முடிந்தது.

ஆசை காட்டி, பாலிகாவுக்கு பிள்ளைகள் வருவதைத் தடுப்பதற்காக, மோசம் செய்யும் இந்த சதி, பாலிகாவில் ஆறாம் வகுப்பு ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் நடைபெறத் தொடங்கிய போதே ஆரம்பித்ததாகவும், இறைவன் உதவியால், பாலிகா தொடர்ந்தும் முன்னேறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், பாலிகாவில் கற்கும் மாணவி ஒருவரின் தாய் கூறினார்.

இவற்றுடன், பின்தங்கிய நிலையில் இருக்கும் பத்ரியாவை முன்னேற்றுவதற்கான வழி வகைகளை தேடுவதை விட்டு விட்டு, இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்துக்கு மிகவும் நெருக்கமான பாடசாலையாக விளங்கும் பாலிகாவை இல்லாமலாக்க முயற்சிப்பது, இறைவனுடன் போர் தொடுப்பதற்குச் சமனான ஒன்று என தாம் நினைப்பதாக, பாலிகா மாணவி ஒருவரின் தந்தை கூறினார்.

1 கருத்து:

  1. உண்மைதான் சகோதரரே.
    கடந்த மாதம் நடைபெற்ற அதிபர்மாருக்கான கூட்டமொன்றில்கூட பத்ரியாவின் வீழ்ச்சி நிலை பற்றியும், ஆசிரியர்களின் அசமந்தப் போக்கு காரணமாக பாடங்கள் நடைபெற்றதிருப்பது குறித்தும் மிகவும் காராசாரமாக அலசப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் வகுப்பு மாணவர்கள் சிலர் திஹாரிய அல் அஸ்ஹரை நோக்கிப் போய்விட்டனர். மற்றும் சிலர் எங்கே செல்வது என்று சிந்தித்த வண்ணமுள்ளனர். அதிபரோ தவறாமல் குத்பா நிகழ்த்த கொழும்பு சென்று விடுகிறார். உதவி அதிபரோ தூங்கி வழிகிறார். இது போதாதென்று பகுதித் தலைவர்களின் அக்கிரமங்கள் வேறு. பிரபல ஆசான்கள் சிலர் ஸ்கூல் நேரத்திலேயே வீட்டுக் கடமைகளை நிறைவேற்றச் சென்றுவிடுகின்றனர். இன்னும் சிலர் தம் மனைவியரோடு சுற்றித்திரிந்துவிட்டு, சரியாக பெல் அடிக்கும் நேரத்துக்கு வந்து ஸைன் பண்ணிவிட்டு எல்லோரையும்போல வீடு சென்று விடுகின்றனர்.
    இந்த அக்கிரமங்களைத் தட்டிக்கேட்க எவரும் முன்வருவதாகவும் தெரியவில்லை. பித்அத், அனாச்சாரம், பெண்வீட்டுச் சாப்படு ஹராம் என்று கூப்பாடு போடுபவர்கள்கூட இந்த அக்கிரமத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா நிற்கிறார்களே! சமூகம், சமூகம் என்று கொக்கரிக்கும் சகோதர இயக்கங்களின் நிலையும் இதுதான் என்பதற்கப்பால், அவர்களில் ஒரு சிலர்தான் இந்த அதர்மத்துக்கு துணை போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.

    ஊர்மக்களே! முதலில் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டுத் த்டுத்து நிறுத்துங்கள். பின்னர் ஒன்று சேர்ப்பது பற்றி யோசியுங்கள். இப்போதைக்கு பாலிகாவை அதன் பாட்டிலேயே விட்டுவிடுங்கள்!!!

    பதிலளிநீக்கு