திங்கள், 21 மே, 2012

இரு தலைக் கொல்லி எறும்பு

இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பது வேறு யாருமல்ல. எமது வாசகர்கள் பெரும்பாலும் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பவர் நமது ஜனாதிபதி ராஜபக்ஷ என்றே நினைப்பார்கள். ஆனால் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது எமது பிராந்தியத்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான ஒரு பாடசாலையின் ஓர் அதிபரைப் பற்றியே. அரபு வசந்தம் போல் தனது பாடசாலையிலும் ஏற்பட்டு எகிப்திய நாசகாரியும் சர்வாதிகாரியுமான முபாரக்கைப்போல தானும் விரட்டப்பட்டுக் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவேனோ என்ற அச்சத்தில் வாழும் இந்த அதிபருக்கு, தான் இதுவரை சொல்லி வந்த பெரும் பொய்கள் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனவாம். வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தானே ஆகவேண்டும்? இதுவல்லவோ இறை நீதி? நியதி?  அறுக்கட்டும்! நன்றாக அறுக்கட்டும்!!



இன்னும் தலைப்புக்கே வரவில்லையே என்று ஆதங்கப்படுகிறீர்களா? இதோ வந்துவிட்டேன். அதாவது இந்த ONE AND ONLY அதிபர், நான்கு மாத லீவிவில் சென்றுள்ளதாகவும் ஐந்தாவது மாதம் வருவதாகவும் ஆசிரியர்களையும், எஸ்டீஎஸ்ஸையும், அப்பாவி ஊர் ஜனங்களையும் ஏமாற்றிவிட்டு ஒருவருட லீவில் தனிப்பட்ட ஒரு கோஸுக்காகச் சென்றது பலருக்குத் தெரியாத பகிரங்க ரகசியம். இவரின் இந்த வார்த்தையை நம்பி பதில் கடமை புரிய வந்த அந்த வயஸாலி மனிஷன், குறித்த பதவியில் அலுத்துப் போய் பதவி துறக்க முனைகின்றார் என்ற செய்தி அந்த அதிபர் மகானுக்குக் எப்படியோ கிடைத்திருக்கிறது. விடயமறிந்து கலங்கிப் போன அதிபர் திலகம், தான் ஒரு கோஸில் இருப்பதையும் மறந்து, அந்தக் கோஸுக்கு லீவு போட்டுவிட்டு இன்றைய தினம் நீண்ட நாட்களுக்குப் பிறகு டை சகிதம், தனக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட  உல்லாச நாட்காலியில் "அம்போ" என வந்து அமர்ந்துகொண்டாராம்.

இரு தலைக் கொல்லி எறும்பு?

அதிபர் பதவியை பாதுகாக்க முனைந்தால் கோஸுக்குச் செல்ல முடியாது; கோஸுக்குச் சென்றால் அதிபர் பதவி??? புரிஞ்சுதா??

குறிப்பு:
அவர் கதிரையில் அமர்ந்தாலும் இந்த வருடம் முடியும் வரை உத்தியோக பூர்வமாக பாடசாலை விவகாரங்களில் எந்த ஒன்றும் செய்ய முடியாது என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ??? அது அவருக்கும் தெரியாதே............

இவரின் பின்னால் இருந்து கூஜாத் தூக்கியவர்களும் முதுகு சொறிந்தவர்களும் அடிவருடிகளும் எங்கே ?? அவர்களாவது வந்து, ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் பாடசாலையைக் கவனிக்கக் கூடாதா என்று பொது சனங்கள் அங்கலாய்க்கின்றனர்.

அநியாயக்கார ஆட்சியாளன் இவ்வாறான தண்டனைகளுக்கு உள்ளாவது இறை நியதியாகும். பின்னால் இருப்பவர்களும்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக