ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எமது வீதியை அபிவிருத்தி செய்யும் முயற்சி மீண்டும்! சாத்தியமாகுமா?


கஹட்டோவிட்டாவின்  பிரதான வீதியை 22 அடி வரை அகலமாக்கி விஸ்தரிக்கும் நோக்கில், கடந்த வாரம், அத்தனகல்ல பிரதேச சபை அதிகாரிகளால் அளக்கப்பட்டு, அடையாளங்களும் இடப்பட்டுள்ளன. கஹட்டோவிட்ட சந்தியிலிருந்து, அல் பத்ரியா, மஸ்ஜிதுன் நூர், மஸ்ஜிதுல் பலாஹ் ஆகிய பகுதிகளை ஊடறுத்துச் சென்று ஓகொடபொல பஸ் தரிப்பு வரை, அகலமாகுவதற்கான அடையாளங்கள் இடப்பட்டன.

இந்த நடவடிக்கை பலரது வயிறுகளில் புளியைக் கரைத்திருக்கிறது. ஏற்கனவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதனால் இந்த முன்னெடுப்பு கைவிடப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் இருந்த போதே மீண்டும் இந்த அளக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.குறித்த வீதியை அகலமாக்கி, அதில் பஸ் சேவையை ஆரம்பிப்போம்' என இந்த விஸ்தரிப்புப் பணியை முன்னெடுப்போர் கூறும் அதே வேளை, 'விதியை அகலமாக்கவோ அல்லது பஸ் சேவையை ஆரம்பிக்கவோ விட மாட்டோம்' என மற்றொரு சாரார் கச்சை கட்டிக்கொண்டு நிற்பதாகவும் பேச்சுக்கள் ஆங்காங்கே அடிபடுகின்றன.

2 கருத்துகள்: