இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய சனல்4 ஊடகத்தினால் இந்த ஆவணப்படம் வெளியிடப்படஉள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக இந்தஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.
சனல்4 ஊடகத்தினால் முன்னதாக வெளியிடப்பட்ட கொலைக் களம் ஆவணப்படத்தைத் தொகுத்து வழங்கிய ஜோன் ஸ்னோவ் புதிய ஆவணப்படத்தை வெளியிட உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, இலங்கைக்கு எதிராக சில அமைப்புக்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக