மேற்படி பாதையைப் புனரமைக்கும் பணி ஆரம்பமாகியிருப்பது குறித்து பொது மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்பணி எப்போதோ ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டியதொன்றாக
இருந்தாலும், இன்றாவது ஆரம்பிக்காப்பட்டிருப்பது குறித்து எல்லோரும் மகிழ்ச்சியடைவோம். வாழ்க மக்கள் பணி! இது போன்ற "ஃபர்ழ் கிபாயா"வான சமூகப் பணிகள் எமதூரில் ஏராளமுள்ளன. இவற்றை நிறைவேற்றுவது அவரவர் தகுதிக்கேற்ப ஔவொருவரதும் கடமையாகும். இத்தகைய சமூகப் பணியாளர்களை அல்குர்ஆன், " .. அல்லாஹ்வை ருகூஃ செய்தும் ஸுஜூது செய்தும் வழிபடும் அவர்கள் நற்பணிகளையும் செய்பவர்களாவர்" எனச் சிலாகித்துப் பேசுவது நோக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக