சனி, 25 பிப்ரவரி, 2012

பிரபஞ்சம், வாழ்வு , மனிதன் பற்றிய இஸ்லாமிய உலக நோக்கு

இந்தப் பிரபஞ்சம், இதில் மனிதனின் நிலை, மனித வாழ்க்கையின் குறிக்கோள் எனும் இந்த மூன்று அம்சங்களையும் இணைத்துத்தான் உலக நோக்கு என்பர்.

நான் யார்?
நான் எங்கிருந்து வந்தேன்?
இந்தப் பிரபஞ்சத்தின் நோக்கம் என்ன? இதன் இறுதி முடிவு யாது?
மனித வாழ்க்கையின் நோக்கமென்ன?
மனித் வாழ்க்கையின் இறுதிப் பயணத்தின் முடிவு யாது?
முதலான அடிப்படை வினாக்கள் இந்தத் தலைப்போடு தொடர்புற்றிருக்கின்றன.

எனவே சுருக்கமாகக் கூறுவதானால், இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில் மனிதனின் நிலை பற்றியும், அதில் மனித வாழ்க்கையின் குறிக்கோள் பற்றியும் அலசுவதை உலக நோக்கு எனலாம்.

இந்த அடிப்படை வினாக்களுக்கு ஔவொரு சமூகமும், கொள்கையும், தனிமனிதனும் முன்வைக்கின்ற விடையை அடிப்படையாகக் கொண்டதாகவே அவரவரது உலக நோக்கு அமையும். இந்தவகையில் மேற்கூறப்பட்ட வினாக்களுக்கான விடையை இஸ்லாமியக் கண்ணோக்கில் முன்வைக்கும்போது அது இஸ்லாமிய உலக நோக்காக அமைகின்றது.

உண்மையில் ஒருவன் இப்பிரபஞ்சத்தை எவ்வாறு நோக்குகிறான், அதில் அவனது நிலையை எவ்வாறு நோக்குகிறான், அவனது வழ்க்கையின் குறிக்கோளை எந்த வகையில் புரிந்து வைத்துள்ளான் என்பதைக் கொண்டே; உலகத்தில் அவனது வாழ்க்கையின் தன்மை, அவனது செயற்பாடு, அவனது நடைமுறை முதலாம் அனைத்தும் அமையும். எனவே, உலக நோக்கு என்பது ஒவ்வொரு தனிமனிதனைப் பொறுத்தவரையிலும், ஒவ்வொரு சமூகத்தைப் பொறுத்தவரையிலும் மிகவும் முக்கியமானதாகும்.

பிற மதங்கள், கொள்கைகளின் கண்ணோக்கில் உலக நோக்கு

மனித் சமூகத்தின் நீண்டகால வரலாற்றை எடுத்து நோக்கினால்; பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, மனித வாழ்க்கையின் குறிக்கோள் பற்றிக் காலத்துக்குக் காலம் பல விளக்கங்கள் தோன்றியிருப்பதைக் காணமுடிகிறது. பிறிதொரு வகையில் கூறுவதானால், உலகத்தில் பல உலக நோக்குகள் இருந்து வந்துள்ளன. அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.

1. புராதன காலம் அல்லது வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வரலாற்றில் மனிதனது நாகரிக முதிர்ச்சி குறைவடைந்திருந்த காலத்தில், அவனது அறிவு முதிர்ச்சியடையாதிருந்த காலப்பிரிவில்
இந்தப் பிரபஞ்சத்தை நோக்கிய மனிதன், அதனை ஒரு மர்மம் மிக்கதாய் பயத்தோடும் அச்சத்தோடும் நோக்கினான். அதன் விளைவாய் மூட-நம்பிக்கைகளும் பயத்தோடு கொண்டமைந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் தோன்ற ஆரம்பித்தன.

2. புராதன பாரஷீக மதத்தினரும் சீனரும்

இவர்கள் இருளுக்கும் ஒளிக்கும் இடையில், நன்மைக்கும் தீமைக்கும் இடையில் போராட்டம் நடைபெறும் கள்மாக இப்பிரபஞ்சத்தை நோக்கினர்.

அ) பாரசீக மதத்தினர்
ஸோராஸ்டர் எனப்படும் நெருப்பு வணங்கிகளான இவர்கள் 'AHROMARZA AMGRAAMAINEE' என்ற ஒளி, இருள் எனும் இரண்டு சக்திகளுக்கிடையே அல்லது இரு பெரும் தெய்வங்களுகிடையே நடைபெறுகின்ற போராராடம்தான் உலக வாழ்க்கை என்று கூறினர்.

புராதன சீனர்
"YING & YANG அதாவது Light & Darkness - ஒளி, இருள் எனும் இரண்டு சக்திகளுக்கிடையே நடக்கின்ற பொராட்டம்தான் "உலகம்" என்று இவர்கள் கூறினர்.

3. பௌத்தம்

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சிருஷ்டிகளைப் பற்றியோ பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியோ  பௌத்த சிந்தனை எதுவுமே கூறவில்லை. ஆனால் பிரபஞ்சத்தில் மனிதன் தனது முற்பிறப்பின் கர்ம வினைகளை அனுபவிப்பதர்காகவே பிறப்பெடுத்திருக்கின்றான் என்றும், வாழ்க்கை என்பது துக்கமும் கோபமும் நிறைந்தது என்றும் இந்தத் துக்கத்துக்குக் காரணம் அவனது ஆசைகள் என்றும் அந்த ஆசைகளை அடக்கித் துக்கத்திலிருந்து மீட்சி பெறுவதில்தான் வழ்க்கையில் அவனது வெற்றியும் நிறைவும் தங்கியிருக்கின்றன என்றும் அது குறிப்பிடுகிறது.


4. கிறிஸ்தவ மதம்

இம்மதம் உலகத்தில் முதல் மனிதன் ஆதத்தின் பாவத்தைச் சுமந்து கொண்டு மனிதன் பிறந்ததாகக் குறிப்பிடுகிறது. அந்தப் பாவக் கறையைக் கழுவி மனிதனைத் தூய்மைப் படுத்துவதற்காக வந்த இறைவனைன் குமாரரான இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால்தான் அந்தப் பாவக் கறை கழுவப்பட்டு புனிதமடையும் நிலை ஏற்படுமென்றும் இம்மதம் குறிப்பிடுகிறது.

5. மதத்துக்கும் அறிவியலாளர்களுக்கும் இடையே மத்திய காலத்தில் ஏற்பட்ட மோதலின் விளைவு

மத்திய காலப் பிரிவில் ஐரோப்பாவில்  கிறிஸ்த்வத்துகும் விஞானிகளுக்கும் இடையே பெரும் மோதல்கள் இடம்பெற்றன. பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்த விஞ்ஞானிகளையும் சிந்தனையாளர்களையும் கிறிஸ்தவக் கோயில் அல்லது மதம் அடக்கி ஒடுக்கியது. அவர்களது சிந்தனைக்குத் தடை விதித்தது, சிந்தித்த, ஆராய்ச்சி செய்த   ஒரே காரணத்துக்காக விஞானிகளும் அறிவியல் மேதைகளும் கொடும் தண்டனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இந்த நிலையிலேயே அறிவுக்கு அதிராக எழுந்த  கிறிஸ்தவக் கோவிலின்  எதிரான போராட்டம் மதத்துக்கு எதிரானதாக் கிளம்பி அதனடியாக ஐரோப்பாவில் பகுத்தறிவு வாதம், சடவாதம் போன்ற மதத்துக்கு எதிரான கொள்கைகள் தொன்ற ஆரம்பித்தன. அந்தக் கொள்கைகளை மையப்படுத்தித்தான்  அப்போதே "இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் மத்திய நிலையில் மனிதன் இருக்கிறான்" என்ற கருத்தியலைக் கொண்ட மானுடவியல் (Humanism) எனும்  கோட்படு தோன்ற ஆரம்பித்தது.

உலகத்தின் மத்திய நிலையில் இருக்கும் இறைவனை அக்ற்றிவிட்டு மனிதனுக்கும் மனிதனது பகுத்தறிவுக்கும் மனிதனது ஆளுமைக்கும் இடமளிக்கின்ற சடவாதமும் உலோகாயதவாதமும் தோன்றியதோடு நில்லாது அவற்றின் கண்ணோக்கிலேயே அந்த அறிவியலாளர்கள் உலகையும் பிரபஞ்சத்தையும் அணுகினர்.

இந்த உலகம் என்பது எவராலும் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்று அல்ல; அது இயற்கையாகவே தோன்றியதாகும். இந்த உலகின் மத்திய நிலையில் மனிதன் இருக்கிறான். அவனது பகுத்தறிவும் சிந்தனையும்தாம் உயர்ந்தவை, மகோன்னதமானவை என்றுகூறி "MAN CENTERED UNIVERSE" - "மனிதன் மத்திய நிலையில் இருகிறான்" என்ற மனிதனை மத்தியமாகக் கொண்ட பிரபஞ்சக் கோட்பாட்டை அவர்கள் அறிமுகப்படுத்தினர். இதனடியாக வளர்ச்சியடைந்ததுதான் இன்றைய நவீன மேற்கத்திய நாகரிகமாகும்.


இஸ்லாமிய உலக நோக்கு

எனவே இவ்வாறாக உலகத்தில் காலத்துக்குக் காலம்; இந்த உலகம், அதில் மனிதனுடைய நிலை, அவனது வாழ்க்கையின் குறிக்கோள் முதலானவை பற்றி வித்தியாசமான கருத்தியல்களும் தத்துவங்களும் தோற்றம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இந்தப் பின்புலத்திலேயே இஸ்லாத்தின் உலக நோக்கு எந்த வகையில் அமையப் பெற்றுள்ளது என்பதை மட்டுமன்றி ஏனைய உலக நோக்குகளில் இருந்து எந்த வகையில் இஸ்லாமிய உலக நோக்கு வேறுபட்டுத் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது என்பதையும் இனி நாம் நோக்குவோம்.

இஸ்லாம் இப்பிரபஞ்சத்தையும் அதில் மனிதன் வகிக்கின்ற நிலையையும் மனித வாழ்க்கையின் குறிக்கோளையும்
இஸ்லாமிய உலக நோக்கு என்பது மனிதச் சிந்தனையின் விளைவுமல்ல; மனிதனது பகுத்தறிவின் அறுவடையுமல்ல. மாறாக அது இறைத்தூதின் அடியாக - வஹீயின் ஒளியில் எழுந்ததாகும். இந்த அம்சம்தான் இஸ்லாமிய உலக நோக்கை ஏனைய உலக நோக்குகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

இஸ்லாமிய உலக நோக்கின் சிறப்பியல்புகள்

சத்தியத்தையும் யதார்தத்தையும் கொண்ட இந்த உலக நோக்கில் சந்தேகமோ சபலமோ இல்லை. தெய்வீக வார்த்தைகளினாலான இந்த உலக நோக்கு சத்தியமனது உண்மையானதும் காலத்தால் மாறாததும் நித்தியமானதுமாகும்.

இஸ்லாமிய உலக நோக்கு முழுமையானது நிறைவானதுமாகும்.இதில் எத்தகைய குறைபாடுகளோ தவறுகளோ இல்லை. அனைத்தையும் பொதிந்த உலக நோக்காக இது இருக்கிறது.

இந்த உலக நோக்கு இறைவனை மையமாகக் கொண்டதாகும். மாறக இது ஐரோப்பாவைப்போல்   மனிதனின் பகுத்தறிவுக்கும் சிந்தனைக்கும் அழுத்தம் கொடுத்து   மனிதனை மையப்படுத்துவதில்லை. இஸ்லாமிய உலக நோக்கில் இந்தப் பிரபஞ்சத்தின் மத்திய நிலையில் இறைவன்  இருக்கிறான். இதனாலேயே இஸ்லமிய உலக நோக்கு; "IT IS THE GOD CENTERED UNIVERSE: NOT THE MAN CENTERED UNIVERSE" என்றழைக்கப்படுகிறது.

எனவே இஸ்லாமிய உலக நோக்கு அல்லாஹ்தான் இந்தப் பிரபஞ்சத்தை ஒன்றுமில்லாத நிலையிலிருந்து சிருஷ்டித்தான். அவனே இதனைப் பரிபாலிப்பவனும் வழி நடாத்துப்வனுமாவான் என்றுஅல்லாஹ்வுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் மத்திய நிலையை வழங்கியது.

இஸ்லாமிய உலக நோக்கு மனித வாழ்க்கை முழுவதற்கும் ஓர் ஆத்மீகப் பெறுமானத்தை வழங்குகிறது.


இந்தப் பிரபஞ்சத்தை இஸ்லாம் எவ்வாறு நோக்குகிறது?


அடிப்படையில் இந்த உலகம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து படைக்கப்பட்டது. இந்த உலகத்துக்கு ஓர் ஆரம்பம் உண்டு என்பது பிரபஞ்சம் பற்றிய இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

"வானங்களையும் பூமியயும் படைத்து; இருளையும் வெளிச்சத்தையும் அதில் ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" (அல்-அன்ஆம்)

"அவந்தான் இரவையும் பகலையும் படைத்தான்; அத்துடன் சூரியனையும் சந்திரனையும்கூட அதில் அவன் உண்டாக்கினான். இப்படி அனைத்தையும் அவனே படைத்தான்." (ஹூத்)

"ஔவொரு பொருளுக்கும் ஓர் அளவை, ஒரு விதியை, ஒரு பிரமாணத்தை அவனே வைத்தான்." (அல்-குர்ஆன்)

ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து இந்த உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் அல்லாஹ் படைத்தது மட்டுமன்றி அந்த ஒவ்வொன்றுக்கும்  ஒரு விதியையும் ஏற்படுத்தினான்.

"வானங்களையும் பூமியையும் ஒரு சத்தியத்தின் அடிப்படையில் அவன் படைத்திருக்கிறான்." (அல்-குர்ஆன்)

"அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன்" (அல்-குர்ஆன்)


"அவன் ஒன்றை உருவாக்க நாடினால் "ஆகு" என்றால் ஆகிவிடுகிறது. (அல்-குர்ஆன்)

இந்த அல்குர் ஆன் வசனங்கள்; பிரபஞ்சம் என்பது ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து அல்லாஹ்வினால் சிருஷ்டிக்கப்பட்டதாகும். இதனை அல்லாஹ் படைத்து அதன் ஔவொரு பொருளும் எந்த வகையில் இயங்க வேண்டும் என்ற விதியையும் ஒருகட்டுக்கோப்பையும் ஒரு பிரமாணத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்பதை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றன.


இந்தப் பிரபஞ்சம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை என்பது பிரபஞ்சம் பற்றிய இஸ்லாத்தின் பிறிதோர் அடிப்படையாகும். இந்தப் பிரபஞ்சத்தின் பின்னால், அதிலுள்ள சிருஷ்டிகளின் பின்னால் ஓர் இலட்சியம் இருக்கிறது.

"வானங்கள் பற்றும் பூமியை நாம் சத்தியத்தின் அடிப்படையிலேயே படைத்துள்ளோம். (அல்-குர்ஆன்) எனும் இந்த வசனத்தின் கருத்து, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் ஒரு நோக்கத்தின் அடிப்படையிலேயே இறைவன் படைத்துள்ளான் என்பதாகும்.

பிரபஞ்சப் படைப்பினங்களின் பின்னாலுள்ள அதிசயங்களைப் பற்றிச் சிந்தித்து ஆராய்கின்றவர்கள் ஈற்றில் பின்வரும் முடிவுக்கே வருவதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

"எங்கள் இரட்சகா! நீ எந்த ஒன்றையும் வீணுக்காகப் படைக்கவில்லை...." இந்த வசனமும் படைப்பினங்களின் பின்னால் ஓர் இலட்சியம் இருக்கின்றது என்பதைப் புலப்படுத்துவதாய் உள்ளது.


பிரபஞ்சம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது மற்றுமோர் அடிப்படையாகும். அந்த இயக்கம் குறிப்பிட்ட ஒரு நியதியின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கிறதேயன்றி குருட்டு வாதங்களின் அடிப்படையிலல்ல என்பது நோக்கத்தக்கதாகும். முழுப் பிரபஞ்சமும் இயக்க நிலையில் இருக்கின்றது பின்வரும் அல்குர்ஆன் வசனம் நிரூபிக்கின்றது.

"சூரியன் அதற்கு விதிக்கப்பட்ட வரையறைக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது.இதுதான் உமதிறைவன் அதற்கு ஏற்படுத்திய  நியதியாகும். சூரியனால் சந்திரனை அடைய முடியாது; இரவால் பகலை முந்த முடியாது; ஔவொன்றுன் அதற்கு விதிக்கப்பட்ட வரையறைக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது." (அல்-குர்ஆன்)


பிரபஞ்சத்தில் இறைவனின் நிலை






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக