சனி, 31 மார்ச், 2012

கருத்து வேறுபாடு ஒரு சாபமா?

அறிவுபூர்வமாக நோக்கினால், இல்லை என்பதுதான் இக்கேள்விக்கான பதிலாகும். ஆனால் சமீப காலமாக எமது சமூகத்தை வழி  நடாத்திச் செல்லவேண்டிய நிலையிலுள்ள ஆலிம் உலமாக்கள் முன்வைத்துச் செல்கின்ற கருத்துக்களைப் பார்கின்ற போது இப்படித்தான் நினைக்கத் தொன்றுகிறது.

வியாழன், 29 மார்ச், 2012

ஆப்கானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடிகள் கைது!



   பெண்களைப் போல் உடை உடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்த இரண்டு தலிபான் தீவிரவாதிகள் பிடிபட்டனராம்.
ஆப்கானிஸ்தான் லக்மான் மாநிலத்தில்

செவ்வாய், 27 மார்ச், 2012

ஜீ. ஸீ. ஈ. (சா./த) பரீட்சைப் பெறுபேறுகள் 2011

CONGRATS!
நேற்று வெளியிடப்பட்ட குறித்த பரீட்சைப் பெறுபேறுகளின்படி எமது கம்பஹா பிராந்தியம் முன்னனியில் திகழ்வதாக செய்திகள் கிடைக்கின்றன. கம்பஹா ரத்னாவலி பாலிகாவில் 110 பேர் 9 A எடுத்துச் சாதனை புரிந்துள்ளனர். எமது அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் 9 A சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சனி, 24 மார்ச், 2012

பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு (அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி)

உலகில் நீண்ட நெடும் காலமாக ஆணாதிக்கமே நிலவி வருகின்றது பெண்கள் மிக மோசமாக நசுக்கப்பட்டு வருகின்றனர் அவர்களில் அடிப்படை மனித உரிமைகள் கூட பல போது மறுக்கப்படுகின்றனளூ பெண்களை அடிமைப்படுத்தும் மனோபாவமே பெரும்பாலான ஆண்களிடம் மிகைத்து காணப்படுகின்றது. இவை எல்லாம் பெண்களின்

இலவச பரிசோதனை - எமது தாய்மார் உதாசீனம்!

எமது ஊரில் அமைந்துள்ள 'தாய்மார் மற்றும் குழந்தைகள் நல கிளினிக்' இல், தாய்மார்களுக்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச பரிசோதனையை, எமது 'தாய்மார்' உதாசீனம் செய்துள்ளதாக கிளினிக் நிலைய அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

வெள்ளி, 23 மார்ச், 2012

முகலாயர் ஆட்சிக்காலம் (கி.பி.1526-1858, ஹி.932-1274)

புகழ் மிக்கதோர் ஆட்சி மரபினை இந்தியாயாவில் நிலை நாட்டிய பெருமை முகலாயரையே சாரும். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களது ஆட்சியின் பொற்காலமாக முகலாயரது ஆட்சிக்காலம் கருதப்படுகிறது. சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தில் பெரும் பகுதி முழுவதையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். இவர்கள் இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்கு தமது பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

வியாழன், 22 மார்ச், 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி- ஆதரவு 24; எதிர்ப்பு 15!

UNHRC
 ஐநாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 21 மார்ச், 2012

பத்ரியா - அதிபர் - KESQ...............????

கஹட்டோவிட்ட அல் பத்ரியா பாடசாலைக்கு ஆளுமை மிக்க ஒரு அதிபரின் தேவையை சுட்டிக்காட்டி, அண்மையில், ஒரு துண்டுப் பிரசுரம், ஊரின் பெரும்பாலானோருக்கு தபால் மூலம் அனுப்பப் பட்டிருந்தது.

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

1. வெட்கம் :- ( Shyness )
ஒரு தொழிலை செய்யும்பொழுதோ ,அல்லது ஒரு செயலை
செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அதில் தொல்விடைந்தால்
மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப் பட்டால்
முன்னேறமுடியாது.

திங்கள், 19 மார்ச், 2012

ஆரோக்கியமான குடும்பம் அமைவதற்கு..........

ஓர் ஆரோக்கியமான குடும்பம் அமைவதற்கு மூன்று பிரதான விஷயங்கள் அடிப்படையானது ஆகும். அவை:

1. திருமணம்

2. அன்பு

சனி, 17 மார்ச், 2012

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களை ஜெனீவாவுக்கு அனுப்புகிறது அரசு?

(கெலும் பண்டார -  from MIRROR)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வெள்ளி, 16 மார்ச், 2012

பாலிகாவின் புதிய அதிபருக்கு..........

கம்பஹா மாவட்டத்தின் ஒரே முஸ்லிம் பெண்கள் பாடசாலையான 'கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின்' அதிபராக நீங்கள் நியமனம் பெற்று வந்துள்ளீர்கள். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.......

இலை (வைரமுத்து)

நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

புதன், 14 மார்ச், 2012

ஏகத்துவம்

ஏகவார்த்தை யுத்தம்!

ஒற்றைச் சொல் பதித்த
உயிர் மூச்சுச் சத்தம்!

சரியான மனங்களைக்
கொள்ளையிட்ட கொள்கை!

சரியான தனங்களைக்
கொல்லையிலிட்ட வெல்கை!

சத்தியம் சாத்தியமாகும்
நித்திய நிலை!

சித்தியடைய ஓரேகத்துவவாதிக்குச்
சத்திய வலை!

ஞாயிறு, 11 மார்ச், 2012

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

கொடுக்கும் உயர்ந்த கரம், வாங்கும் தாழ்ந்த கரத்தை விடச் சிறந்தது

ஒரு முறை பெரியார் ஷகீக் அல் பல்கீ வியாபார நோக்கமாக ஒரு பயணம் மேற்கொண்டார். தனது பயணத்துக்கு முன்னால் தனது நண்பர் அறிஞர்  இப்ராஹீம் இப்னு அத்ஹமைச் சந்தித்துப் பிரியாவிடை பெற்றுக் கொண்டார். இவரது இந்தப் பயணம் நீண்ட நாள் பயணமாகவே அமைய இருந்தது. ஆனால்

திங்கள், 5 மார்ச், 2012

இலங்கையின் எயிட்ஸ் நிலவரம்

இலங்கையில் மூவாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாக அறிவித்துள்ள எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவினர், எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்கு உளானவர்கள் பல்வேறு பால்வினை நோய்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் பரவியுள்ளதால் இந்த நோய் ஏனையவர்களையும் மிக
இலகுவாகத் தாக்கும் அபாயம் இருப்பதாக விடுத்துள்ள எச்சரிக்கை, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வெள்ளி, 2 மார்ச், 2012

முஸ்லிம் ஸ்பெய்ன் வரலாறு


முஸ்லிம்களது படையெடுப்பின்போது ஸ்பானியாவின் சமூக, அரசியல் நிலை

ஐபீரியத் தீவகற்பத்தை (ஸ்பெய்ன்) முஸ்லிம்கள் "அந்தலூஸ்' என அழைத்தனர். அத்தீவகற்பத்துக்கு அந்தலூஸ் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு இரண்டு காரணிகளை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர்.

1. நபி நூஹ் அவர்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான அந்தலூஸ் என்பவரின் வாரிசுகள் அங்கு வாழ்ந்தமை.
2. அங்கு வாழ்ந்த மிலேச்சக் குணங்களைக் கொண்ட மக்களைக் குறிக்க "வண்டல்ஸ்" (VANDALS) எனும் பதம் பயன்படுத்தப்பட்டது. இப்பதத்தில் இருந்தே அந்தலூஸ் என்ற பதம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்று இப்னு கல்தூன் போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

வியாழன், 1 மார்ச், 2012

நேரம் நெருங்கிவிட்டது

இன்று நாம் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம், ஆனால் நாளை நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். மக்கள் போற்றும் நல்ல அங்கீகாரத்தோடு வாழ வேண்டும். யாரும் பிடிக்காத நமக்கான ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படிதான் எதிர்காலத்தைப்