புதன், 21 மார்ச், 2012

பத்ரியா - அதிபர் - KESQ...............????

கஹட்டோவிட்ட அல் பத்ரியா பாடசாலைக்கு ஆளுமை மிக்க ஒரு அதிபரின் தேவையை சுட்டிக்காட்டி, அண்மையில், ஒரு துண்டுப் பிரசுரம், ஊரின் பெரும்பாலானோருக்கு தபால் மூலம் அனுப்பப் பட்டிருந்தது.


கட்டார் நாட்டில் தொழில் புரியும் எமதூர் சகோதரர்களால் தோற்றுவிக்கப்பட்ட KESQ என்ற அமைப்பினாலேயே இந்த துண்டுப் பிரசுரம் தயாரிக்கப் பட்டிருந்தது.

இந்தப் பிரசுரத்தை தனக்கு எதிரானதாகக் கருதிக் கொண்டுள்ள, முன்னாள் அதிபரும் தற்போது பயிற்சி நெறி ஒன்றுக்காக விடுமுறையில் இருப்பவருமான ஜனாப் ரிஷான், குறித்த அமைப்பின் பிரதிநிதிகளோடு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு, இரண்டு நாட்களுக்கு முன் ஒரு இரவில், பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த சந்திப்பின் போது, 'அல் பத்ரியாவுக்கு அதிபர் ஒருவரின் தேவை தற்போது இல்லை எனவும், பாடசாலை சகல துறையிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது' எனவும் வலியுறுத்தியுள்ள அவர், பாடசாலைச் சுற்றாடலைப் போய் அவதானிக்கும் படி அந்தப் பிரதிநிதிகளுக்குக் கூறியதுடன், அதிபர் ஒருவரைப் பெறுவதற்காக உதவுவதை விட்டு விட்டு, பாடசாலையின் பௌதிக வளங்களை விருத்தி செய்ய உதவுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், பாடசாலைக்கு உதவுவதற்காக முன்வந்த அந்த அமைப்பு, "சிறந்த அதிபர் ஒருவர் இல்லாத குறையை, SDS உட்பட, பலரும் முன் வைத்ததனாலேயே இந்த நடவடிக்கையில் இறங்கியதாகவும், 'சிறந்த ஒரு அதிபர் பாடசாலைக்கு இருக்கிறார்' என்றிருந்தால் தமது முன்னெடுப்பைக் கைவிடுவதாகவும்" கூறி ஒதுங்கிக் கொண்டதாகவும் தெரிய வருகிறது.

இது இப்படியிருக்க, வழமை போல், இந்த பிரசுரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் என்று யார் யாரையோ பற்றி சந்தேகங்களும் வெளியிடப்பட்டிருந்தன. அத்துடன், பத்ரியா SDS இன் உதவியையும், ஊராரின் ஒத்துழைப்பையும் நாடி வெளியிடப்பட்டிருந்த இந்த துண்டுப் பிரசுரத்தின் நோக்கமும் நிறைவேறாமல் போய்விட்டது.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், பலராலும் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளை கீழே தருகிறோம். விடை காண முயன்று பாருங்கள்.

  • பத்ரியாவுக்கு ஆளுமை மிக்க ஒரு அதிபர் தேவையா? இல்லையா?
  • தேவையென்றால், இப்போது உள்ளவருக்கு ஆளுமை இல்லையென்று அர்த்தமா?
  • இப்போது இருக்கும் அதிபர் யார் - ஜனாப் ரிஷானா? அல்லது ஸலாம் மௌலவியா?
  • விடுமுறையில் இருக்கும் ஒருவர், எப்படி அதிபர் ஸ்தானத்தில் இருக்க முடியும்?
  • ஆளுமை மிக்க அதிபர் ஒருவர் வந்தால், அது தவறா?
  • அல் பத்ரியா சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதா?
  • பௌதிக வளங்களில் அபிவிருத்தி கிடைத்துள்ளதா?
  • பௌதிக வளங்களின் விருத்தியினால், பாடசாலை ஒன்று வெற்றி நடை போடுகிறது என்று சொல்லலாமா?
  • ஆசிரியர்களின் வருகை திருப்தியாக இருக்கிறதா?
  • மாணவர்களின் பெறுபேறுகள் சிறப்பாக இருக்கின்றனவா?
  • ஆண் மாணவர்கள் ஏன் பின்தங்கி இருக்கிறார்கள்? அவர்களிடம் திறமை இல்லையா?
  • ஆண் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
  • மாணவர்களின் ஒழுக்கம் சிறப்பாக இருக்கிறதா?
  • எல்லா வகுப்புகளுக்கும் பாடங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா?
  • ......................................... ?
  • ??????????????????????????????????????????????????????......................

5 கருத்துகள்:

  1. பத்ரியாவின் பழைய மாணவன்22 மார்ச், 2012 அன்று AM 6:16

    ஒரு பதிலும் தேவையில்லை; முதலில் இந்த மோட்டுப் பிரின்ஸிபலை மாற்றி பாடசாலையைக் காப்பாற்றப் பாருங்கள்!!

    பதிலளிநீக்கு
  2. மற்றுமொரு பழைய மாணவன்22 மார்ச், 2012 அன்று PM 7:56

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மிஸ்டர் பளிச்!
    மார்ச் 21ம் திகதிய பத்ரியா அதிபர் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கான பதிலகள்:

    1. ஆளுமையுள்ள அதிபரா? ஆண்மையுள்ள அதிபரா? உங்கள் வினாவில் தெளிவில்லை. ஆன்மை இருந்தால் சிக்கல். ஸோ, ஆளுமை மிக்க அதிபர்தான் தேவை.

    2, இல்லை. ஆளுமை இல்லாதபோதும் ஆண்மை தாராளமாக இருக்கிறது. நிரம்பி வழிகிறதே............

    3. இப்போது உள்ள அதிபர் மௌலவி ஸலாம். முன்பு இருந்தவர் ஒரு வருட லீவில் ஒரு பயிற்சி நெறிக்காகச் சென்றுள்ளார். நான்கே மாதங்களில் வருவதாக ஊர் மக்களையும் எஸ். டீ. எஸ். ஐயும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். பாவப்பட்ட ஜென்மங்கள் மக்கள்.

    4. மேலேயுள்ள விடைதான் இதற்கும். விடுமுறையில் இருந்தும் அவர் அதிபர் ஸ்தானத்தில் இன்னும் இருப்பதற்குக் காரணம் மக்களின் அறியாமைதான். கல்வியோடு தொடர்பில்லாதவர்கள் SDS இருந்தால், அதிபர் சொல்வதெல்லாம் அவர்களுக்கு வேதவாக்குகள் போலத்தானே தோன்றும்.

    5. இல்லையே.... ஆனால் ஆளுமை உள்ள ஒருவருக்கு வருவதற்கு இருப்பவரும் SDSம் அனுமதி கொடுக்க மறுக்கிறார்களே.........இவர் என்னவோ அதிபர்மாருக்கெல்லாம் முத்திரையாக வந்தவர்போல! (காத்தமுல் முதர்ரிஸூன்)

    6. யோவ்! என்ன கேள்வி அய்யா இது? எந்தத் துறையில் பத்ரியா முன்னேற்றம் காணவில்லை? காதலில் கொடிகட்டிப் பறக்கிறது. சில மாணவர்களிடம் தூள் பாவனையும் இருக்கிறதாகக் கேள்வி. மாணவர் ஒழுக்கம் அதளபாதாளத்தில்... இப்படி நாளந்தம் அதிகவேக முன்னேற்றம் கண்டு வருகிறது

    7. பாடசாலைப் பௌதீகச் சூழல் பூமரங்களாலும், சுவர் பல் பரிமாண வர்ணங்களாலும் அழகு செய்ய்ப்பட்டுள்ளதே... இது போதாதா?

    8. ஏன் முடியாது? சொல்லலாமே.....................

    9. ஆசிரியர்களின் வருகை............. ஆம் திருப்தியாக உள்ளது.

    10. பெண் பிள்ளைகளாவது மானத்தைக் காப்பாற்றி வருகிறார்களே ...அது போதுமய்யா! திருப்திப்பட்டுக் கொள்வோம்.

    11. ஆண் மாணவர்களிடம் திறமை இல்லாமலில்லை. வேலியே பயிரை மேய்கின்றபோது எப்படித் திறமை வரும்?

    12. இதுவரை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

    13. ஆ......அந்தத் துறையில் பரம திருப்தி அடையலாம்.

    14. ரெகோட் புக்கைப் போய்ப் பாருங்கள்.

    முடிந்த வரை உங்களது எல்லா வினாக்களுக்கும் விடையளித்துவிட்டேன். சரியாக இருந்தால் எனக்குரிய பரிசை அனுப்பி வையுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. கஹடோவிட மக்களே!

    முன்னாள் அதிபரின் நான்கு மாதத் தவணை முடியும் தஅறுவாயில் உள்ளதல்லவா? அப்படியாயின் மே மாதம் அவர் மீண்டும் அதிபர் ஆசனத்தில் அமர்வாரா?? அவர் வருவாரா?? அவர் வருவாரா?? காலியான இடத்தை நிரப்ப அவர் வருவாரா??

    பதிலளிநீக்கு
  5. பத்ரியாவுக்கு ஆஸிம் ஸேர் அதிபராக வரப்போவதாக ஒரு செய்தி அடிபடுகிறதே, உண்மையாக இருக்குமோ????? அப்போ இவரின் நிலை? திஹாரியவில் அதிபராவதோ? எங்கும் இல்லையென்றால் சர்வதேசப் பாடசாலையிலாவது அதிபராக முடியும்தானே?

    பதிலளிநீக்கு