ஞாயிறு, 27 மே, 2012

மாற்றம் மலரட்டும்

"ஒரு சமூகம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்வும் அந்த சமூகத்தை மாற்றியமைக்கமாட்டான்." (அல்குர்ஆன்)

மனமாற்றம் நிகழ்ந்தால்தான் வாழ்வில் முன்னேற்றம் நிகழும். மாற்றமே முன்னேற்றத்திற்கு முதல்படி.

திங்கள், 21 மே, 2012

இரு தலைக் கொல்லி எறும்பு

இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பது வேறு யாருமல்ல. எமது வாசகர்கள் பெரும்பாலும் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பவர் நமது ஜனாதிபதி ராஜபக்ஷ என்றே நினைப்பார்கள். ஆனால் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது எமது பிராந்தியத்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான ஒரு பாடசாலையின் ஓர் அதிபரைப் பற்றியே. அரபு வசந்தம் போல் தனது பாடசாலையிலும் ஏற்பட்டு எகிப்திய நாசகாரியும் சர்வாதிகாரியுமான முபாரக்கைப்போல தானும் விரட்டப்பட்டுக் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவேனோ என்ற அச்சத்தில் வாழும் இந்த அதிபருக்கு, தான் இதுவரை சொல்லி வந்த பெரும் பொய்கள் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனவாம். வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தானே ஆகவேண்டும்? இதுவல்லவோ இறை நீதி? நியதி?  அறுக்கட்டும்! நன்றாக அறுக்கட்டும்!!

வெள்ளி, 18 மே, 2012

பத்ரியா வசந்தம்

இதென்னடா புது வகை வசந்தம் என்று எமது வாசகர்கள் திகைப்பது தெரிகிறது. வேறு ஒன்றுமில்லை; சமீபத்தில் அரபுப் பிராந்தியத்தில் வெடித்த அரபு வசந்தம் பற்றிக் கேள்விப்பட்டிடுப்பீர்கள் அல்லவா? அது போன்று எமது பத்ரியாவின் உடநிகழ்கால அராஜகங்களையும் அ நியாயங்களையும் தட்டிக் கேட்பதற்கெனத் தோற்றம் பெற்றுள்ள, வீரமும் உணர்வும் மிக்க புரட்சிகரமான ஓர் அமைப்பின் பெயர்தான் இந்த பத்ரியா வசந்தம். வெகு சீக்கிரத்திலேயே இவ்வமைப்பு தனது புரட்சிகர நடவடிக்கைகளை முடுக்கிவிட இருப்பதாக அவ்வமைப்பின் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வியாழன், 17 மே, 2012

சீர்கெட்ட நாகரிக நடைமுறைகளுக்கு அமெரிக்காவில் தடை!.....?

தனது சிகை அலங்காரமாக தனக்கு விருப்பமான ஒரு விளையாட்டு விரரின் தோற்றத்தை தலையில் சிரைத்துக்கொண்ட ஒரு மாணவனுக்கு, அமெரிக்க பாடசாலையொன்று வகுப்புத்தடை விதித்துள்ளது.

முழு விபரம் அறிய இங்கே க்ளிக்குங்கள்.

பேதம் மறப்பது ஆறாம் அறிவு ! வேதஞானம் எழாம் அறிவு !

நாம் அனைவருமே நம்மை அன்பு செய்கின்றோம். நமக்கு ஏதாவது தீங்கு நேர்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது உடலைக் காயப்படுத்தவோ அல்லது எமது உள்ளத்தைக் காயப்படுத்தவோ நாம் துணிய மாட்டோம்.

நாய் நன்றிக்கு உதாரண மிருகம். இறைவன் அது தூய்மை அற்றது என்று கூறக் காரணம் வேறு ஓரு நாயைக் கண்டதும் அன்பு செலுத்தாது. ஒன்றை ஒன்று வெறுத்து சண்டையிட்டு துரத்திவிடும். மற்ற நாய்களுடன் சேர்ந்து உணவு உண்ணும்போதும் சண்டை பிடிக்கும். இதற்கு காரணம் பேத உணர்வுதான். இதனால் ஐந்து அறிவுள்ள மிருகம் என்று கூறுகின்றோம் .

நம்மில் பலர் பிறரைப் பல விதத்திலும் காயப்படுத்துவதில் துணிச்சலுடன் செயற்படுவோம். பிறருக்கு ஏற்படும் துன்பம் பற்றி நாம் கவனத்திற் கொள்வதில்லை. நமக்கு ஏற்படும் வலிகள்,  துயரங்கள் போன்றே அவர்களுக்கும் நேரும் என்பதை அறிந்தும் நாம் அதையே செய்கிறோம். தூய்மையற்ற உள்ளமும் ,அறிவுமற்ற நாம் ஆறாம் அறிவு உள்ளவர்கள் என்று நாம் சொல்வது பொய்யாகும்.

உண்மையில் ஆறாவது அறிவு செயல் பட்டால் நாம் நம்மை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும். நம்மைப்போன்றே நம் அயலாரையும் பேணி நடக்க வேண்டும். நம்மைப் படைத்த இறைவனை நாம் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அன்பு செய்வதுபோல். அவன் படைப்புக்களின்மீதும் அன்பு செலுத்த வேண்டும்.உதவிபுரிய வேண்டும்.
அப்போதுதான்நாம் ஆறாம் அறிவுள்ள மனிதர்கள்.

இறைவனைவிட வேறு ஒன்று உள்ளதென்ற பேத உணர்வே இணை (ஷிர்க்) என்று இறைவன் வெறுக்கின்றான்.அவர்களுக்கே நிரந்தர நரகம்.

“அன்பு என்பது உங்கள் உறவினர்மீது மட்டும் செலுத்தபடுவதல்ல, அன்பு அனைவர்மீதும் செலுத்தப்படுவதாகும்”
மேலும் “நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறைநம்பிக்கையாளராக முடியாது.”
(நபிகள்நாய்கம் நூல் பத்ஹுல்பாரி)

எழாம் அறிவு வேதஞானம்.

செவ்வாய், 15 மே, 2012

ஆசிரியர்களை விரட்டியடிப்பதில் அல் பத்ரியா ஹட்ரிக் சாதனை

நம் நாட்டுச் சூழலில் ஓர் அரசாங்கப் பாடசாலையில் ஆண் ஆசிரியர்கள் இருப்பதென்பது அருமையிலும் அருமையான ஒரு விடயமாகும். கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான ஆண் ஆசிரியர்களைக் கொண்ட ஒரேயொரு முஸ்லிம் பாடசாலை திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மாத்திரமே. இந்த நிலையில் கடந்த ஆறு வருட காலப்பகுதிக்குள் முக்கிய பாடங்கள் பலவற்றைப் போதித்து வந்த பல ஆண் ஆசிரியர்களை எமது மதிப்பிற்குரிய பத்ரியா நிர்வாகம் அதன் சொந்தக்  காரணங்களுக்காக  விரட்டியடித்ததை எல்லோரும் அறிவர். இவ்வாறு செய்வதொன்றும் பத்ரியா நிர்வாகத்துக்குப் புதிதான விடயமல்ல. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஒரு காலத்தில் மும்மூர்த்திக்களாக இருந்து, பாடசாலையின் முன்னேற்றத்துக்காக  உழைத்த மூன்று முக்கிய ஆசிரியர்களுள் இருவர் ஏலவே நிர்வாகத்தின் வீம்புத்தனம் காரணமாக விரட்டியடிக்கப்பட்டனர். இன்று எஞ்சியிருந்த மூன்றாவது விக்கட்டும் கழற்றப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மூவரும் மீண்டும் ஒரே பாடசாலையிலேயே ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது அந்த மும்மூர்த்திகளைப் பொருத்தவரை மகிழ்ச்சிப்படத்தக்க விடயமாகும். ஆறு வருடங்களின் பின்னர் அவர்கள் மூவரும் ஒன்றிணைந்த அந்த மகிழ்வான நிகழ்வை இன்று அல் அஸ்ஹர் கண்டீன் சாலையில் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிந்ததாக செய்திகள் கூறுகின்றன.

வாழ்க அல்-பத்ரியா!!

திங்கள், 14 மே, 2012

கொடுக்கிறேன்.....(கவிக்கோ அப்துல் ரஹ்மான்)


கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

ஞாயிறு, 13 மே, 2012

இலங்கையில் இஸ்லாமிய தஃவா -பொது நோக்கு-MAM Mansoor (Naleemi)

சிரிய நாட்டு நவீன சிந்தனையாளர் ஜவ்தத் ஸஈத் தன்னுடைய சமூக, உள மாற்றத்துக்கான விதிகள் எனும் நூலில் குறிப்பிடும் ஒரு கருத்தை நினைவு கூறி இலங்கையில் இஸ்லாமிய தஃவாவின் யதார்த்த நிலை குறித்த சில பொது நோக்குகளை  முன்வைக்க முயல்கிறேன்.

வெள்ளி, 11 மே, 2012

இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

ஊடக அறிக்கை
 
இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை,இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

புதன், 9 மே, 2012

ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு.

நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் உயர்ந்ததரத்தில் ஐரோப்பா காணப்படுகின்றது. எனினும் ஐரோப்பாவுக்கு நாகரீகத்தையும்,மேற்கூறப்பட்ட பல்வேறு கலைகளையும் கற்றுக்கொடுத்த முன்னோடிகள் முஸ்லிம்களே என்பதை எத்தனை பேர் அறிவர்?

உங்கள் உணவில் நீங்கள் உப்பையும் சர்க்கரையையும் குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

செவ்வாய், 8 மே, 2012

களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்!

 களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள்  நேற்று திங்கட்கிழமை, மே, 7 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக "ரிவிர" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கள், 7 மே, 2012

பாலியல் அத்துமீறல் விவகாரம! பிரித்தானிய நீதிமன்றத்தில் சிங்கள பௌத்த பிக்கு

பாலியல் அத்துமீறல்களில் குற்றஞ்சாட்டப்படிருந்த சிங்கள பௌத்த பிக்குவொருவர் குற்றவாளியென பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்பளித்துள்ளது. இது தொடர்பில் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் : பிரிட்டனில் உள்ள பிரபல பௌத்த பிக்குகளில் ஒருவரான பகலகம சோமரட்ண பிக்கு பெண்களிடம் கண்ணியத்தை மீறி நடந்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை ஜூன் முதலாம் திகதியில் வழங்கப்படும். அதேவேளை வயதுக்கு வராத பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்திருந்தார்.

சனி, 5 மே, 2012

வேதாளம் மீண்டும்.................! பத்ரியாவும் பாலிகாவும் இணைக்கப்படலாம்?!

அல் பத்ரியாவையும் பாலிகாவையும் இணைத்து, தனி நிருவாகத்தின் கீழ், தனிப் பாடசாலையாக்கும் முயற்சி மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.

சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட்

உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, "விளையாட்டு" என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர்.

புதன், 2 மே, 2012

தம்புள்ள பள்ளி விவகாரம் - நாம் என்ன செய்தோம்?

தம்புள்ள  ஹைரியா பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம்கள், கண்டனப் பேரணிகளும் ஹர்த்தால் நடவடிக்கைகளும் மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்; இன்னும் வெளியிட்ட வண்ணமுள்ளனர்.