புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் சுரேஸ் ஆப்கானிஸ்தானில் பலி

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் சுரேஸ் ஆப்கானிஸ்தானில் பலி

சிந்தனைத் துளிகள்.


1. "செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால்
     செயலில்லாமல்    மகிழ்ச்சியில்லை. "
2. "மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத்
     திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ  
      வெற்றியடைவாய்."
3.. "மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."
4. "தெய்வத்தின் தலைசிறந்த அன்பே காதல்"
5. "கொண்டதே கோலம் கண்டதே வாழ்க்கையென்று இருந்தால் வாழ்க்கை
     உன்னை கண்டு கொள்ளாமலே போய்வடும்"
6.. "தோல்விகளைக் கண்டு நீ பயந்தால் வெற்றி உன்னை கண்டு பயப்படும்"
7. "என்பிள்ளை என் தமிழை வாசிக்க வேண்டும்
      என்பிள்ளை எம்மண்ணை நேசிக்க வேண்டும்"
8. "போட்டிக்கு கடை திறப்போர் மற்றவன் கண் அழிக்க தன் கண்ணை
     இழப்போராவர்"

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தேனின் மருத்துவ குணங்கள்


தேன், தேன், தேன்!
உன்னைத் தேடி அலைந்தேன்.........

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப் பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது. தினமும் வெறும் வயிற்ட்ருடன் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதற்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை எடுத்து கொண்டு ஆறிய சுடு தண்ணியுடன் அதை கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
தேன் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது , இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது
எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலை வலி சரியாகும்.
கண்பார்வை பிரகாசமாக தெரியத் தேனுடன் வெங்காயச் சாரைக் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். தேனுடன் முட்டை மற்றும் பாலைக் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம

சூரியனைப்பற்றிய அறிவியல் தகவல்கள்


சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

1. போட்டோ ஸ்பியர்
2. குரோமோ ஸ்பியர்
3. கொரோனா

சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படலம் என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பும் 500  இலும் குறைந்தது ஆகும்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

அல்-பத்ரியா இருளில் மூழ்கும் அபாயம்!!!


எமது கஹடோவிடாவுக்கு நூற்றாண்டு கடந்து கல்வி ஒளி பரப்பிக்கொண்டிருக்கும் அல் பத்ரியா, மின்சாரத் துண்டிப்பு காரணமாக சமீப காலமாக நிர்வாக ரீதியாக பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றது. அண்மையில் பாடசாலைக்கு கணனிப் பிரிவுக்கென பொறுப்பாளர் ஒருவர் நிய்மிக்கப்பட்ட போதும், மின்சாரத் துண்டிப்பு காரணமாக அவர் தனது கடமைகளை  மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலைக்கான காரணம் தொடர்பாக நாம் அலசியதில் எமக்குக் கிடைத்த தகவல் இதுதான்.

பாடசாலை மின் பாவனைக்கான  கட்டணம் நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் நிலுவையாகவே இருந்து வந்துள்ளது. இன்றும்தான். 35000 ரூபாவையும் தாண்டிய நிலையில் நிலுவை இருந்ததனால் மின்சார சபை உத்தியோகபூர்வமாகவே மின்சாரத்துண்டிப்பை மேற்கொண்டுள்ளது.

பத்ரியா வோக் மூலம் சேகரித்த பணத்தின் மூலமாகவேனும் நிலுவையைச் சரி செய்து பாடசாலையினதும் ஊரினதும் மானத்தைக் காப்பாற்றலமல்லவா என ஊர் மக்கள் விசனப்படுகின்றனர்.

பத்ரியா அதிபரே! இது உங்கள் கவனத்துக்கு!

நன்றி: www.kashtowitty.blogspot.com

சனி, 18 ஆகஸ்ட், 2012

வரலாற்றுத் துறை நிபுணர் அல்-இத்ரீஸி


அல்-இத்ரீஸியைப் பற்றியும் அன்னாரது மேதமையைப் பற்றியும் தெரிந்தால் பிரமித்துப் போவீர்கள்!!!. விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருசேர ஒளிவீசிக் கொண்டிருந்த அல்-அந்தலுஸைப் (இன்றைய ஸ்பெயின்) பகுதியாகக் கொண்ட அல்மொராவித் தேசத்தில் கி.பி 1110இல் பிறந்த அல்-இத்ரீஸி,  அன்றைய ‘இருண்ட கண்டமான’ ஐரோப்பாவிற்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த, கொர்தோவாவில் கல்வி கற்று, அன்றைய நாளின் மிகச் சிறந்த புவியியலாளராகத் திகழ்ந்தார்.

லாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு


வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.

 "ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் "வரலாற்று வரைவியல்"(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

உண்மையை அறிதல் என்பது , தன்னை அறிதல் என்பதாகும்


உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.

அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி போன்றது. அதில் உள்ள பல முட்களுக்கு இடையில் ஓர் அழகான ரோஜாப் பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜாப் பூச் செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.


ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜாப் பூச் செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப் பூச் செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.

சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறன. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

க. பொ.த. (உ/த) இஸ்லாமிய நாகரிகம் முதலாம் பகுதி மாதிரி வினாக்களும் அவற்றுக்கான விடைகளும்


01. உஸூலுல் பிக்ஹ் துறையில் முதலாவது நூல் எது?
* அர்ரிஸாலா, கிதாபுல் உம்மு, கிதாபுல் கானூன், கிதாபுல் உஸூலிய்யா, கிதாபு அஷ்ஷிபா
02. முஜத்தித் காமில் என அழைக்கப்படுபவர் யார்?
* உமர் இப்னு அப்துல் அஸீஸ் , இமாம் கஸ்ஸாலி, இப்னு தைமியா, ஹஸனுல் பஸரீ,  இமாம் பூஸரீ
03.  துணை மூலாதாரமான கியாஸ் பற்றிய சரியான கூற்று
* நபியவர்களின் காலத்தில் சட்ட மூலாதாரமாகக் காணப்பட்டது
* எல்லாக் காலத்துக்கும் கியாஸ் பொறுத்த்மற்றது
* கியாஸ் நெகிழ்ச்சி மிக்க சட்ட மூலாதாரமாய் அமைந்துள்ளது
* இமாம்களின் காலத்தோடு கியாஸ் சட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
* கியாஸை ஏற்பது விரும்பத்தக்கதாகும்
04. கோட்டை இராஜ்ஜியத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்த ஐரோப்பியரையும், வெளியேற்றிய மன்னனையும் சரியாகக் காட்டும் தொகுதி
* ஒல்லாந்தர், மாயதுன்னை
* போர்த்துக்கேயர், மத்துமபண்டார
* போர்த்துக்கேயர், புவனேகபாகு
* ஒல்லாந்தர், புவனேகபாகு
* போர்த்துக்கேயர், மாயாதுன்னை
05. இலங்கையில் காதிரிய்யாத் தரீக்காவை அறிமுகம் செய்த அறிஞர்
*டீ.பீ. ஜாயா   *மாப்பிள்ளை லெப்பை ஆலிம்  * சித்தி லெப்பை  *ஏ.எம்.ஏ. அஸீஸ்   * எம்.ஸீ. அப்துர்ரஹ்மான்

புதன், 15 ஆகஸ்ட், 2012

Myanmar conflict threatens regional stability (By Subir Bhaumik)

As a rising number of Rohingya Muslims flee sectarian conflict in Myanmar and take sanctuary in India's northeastern states, the flow of refugees is putting a new strain on bilateral relations. New Delhi has called on Naypyidaw to stem the rising human tide, a diplomatic request that Indian officials say has so far gone unheeded. 

Ongoing sporadic violence between Rohingya Muslims and Buddhist Rakhines in western Myanmar has left more than 80 dead and displaced tens of thousands. The Myanmar government's inability or unwillingness to stop the persecution of Rohingyas has provoked strong international reaction, raising calls for retribution in radical corners of the Islamic world, including a threat from the Pakistani Taliban to attack Myanmar's diplomatic missions abroad. 

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

யூத சதிகாரர்கள் பற்றி அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி

“The Jews are working more effectively against us than the enemy’s army. They are several hundred times more dangerous for our freedoms than our enemies. We regret to say that we have not realized that they are the white ants of our society. And they are the great robbers of America’s pleasures and happiness”

“யூதர்கள் எதிரிகளின் இராணுவத்தைவிட வலிமையாக எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். எமது எதிரிகளைவிட அவர்கள் எமது சுதந்திரத்திற்கு பல நூறு மடங்கு ஆபத்தானவர்கள். அவர்கள்தான் எமது சமூகத்திலுள்ள கரையான்கள் என்பதை நாம் புரியத் தவரிவிட்டுடோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் அமெரிக்காவின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கலவாடிச் செல்லும் மிகப்பெரும் கொள்ளைக்காரர்கள்.”
alialif.tk

டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்!


- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்
- இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

முஸ்லிம் உலகம்: வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அ...

முஸ்லிம் உலகம்: வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அ...: வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானைச் சோந்த துபாய் கலைஞரான ரஹீன் அக்பர் கன்ஸடியால் வெள்...

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

Hameed's Blog: JAMAL: OUR MAN IN PALESTINE

Hameed's Blog: JAMAL: OUR MAN IN PALESTINE: Sunday 22 July, 2012 Jamal:  ‘Our’ Man in Palestine Hameed Abdul Karim It’s not every day that you see a foreigner gree...

புதன், 8 ஆகஸ்ட், 2012

Jaffna Muslim: ரவூப் ஹக்கீம் மீது ஜாதிக்க ஹெல உறுமய வெறியுடன் பாய...

Jaffna Muslim: ரவூப் ஹக்கீம் மீது ஜாதிக்க ஹெல உறுமய வெறியுடன் பாய...: TM காவியுடை பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தோற்கடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதை...

ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை


(மலேசியாவில் கடந்த ஜூலை 7- 8 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசிய திருக்குர்ஆன் மாநாட்டில் அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய கருப்பொருளுரையின் சுருக்கம்)

மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems)  ஒரு வகை; நித்திய பிரச்சினைகள்  (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வாழ்த்துக்கள்! CONGRATS!

 நாளை (06. 08. 2012)  GCE A/L பரீட்சை ஆரம்பமாகின்றது. முதற்கட்டமாக விஞ். - BIO SCIENCE  பிரிவுக்கான பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை  நடைபெறவுள்ளது. கலைப் பிரிவுக்கான பரீட்சைகள் பெருநாளின் பின்னரே நடைபெறும்.

இம்முறை Bio பிரிவில் எமதூரைச் சேர்ந்த மாணவியர் பதின்மர் அளவில் ப்ரீட்சைக்குத் தோற்றுகின்றனர். ஏனையோர் கலை வர்த்தகப் பிரிவுகளில் தோற்றுகின்றனர்.

இவர்கள் அத்தனை பேரும் தமது பெறுபேறுகளில் அனைத்துப் பாடங்களிலும் விசேட திறமைச் சித்திகளைப் பெற வேண்டுமென எமது பளிச் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

பாலிகா ???

கெஸ்கின் இரண்டாவது கருத்தரங்கு, முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று இன்று பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற இருந்த கணித பாடத்துக்குப் பதிலாக தமிழ் பாடம் இடம் பெற்றது.

தமிழ் துறையில் முது கலைமானிப் பட்டம் பெற்ற மூதூரைச் சேர்ந்த ஜனாப் பௌஸி ஆசிரியர் இன்றைய கருத்தரங்கைச் சிறப்பாக நடாத்தி முடித்தார். இதில் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், தகுதி வாய்ந்த ஓர் ஆசிரியரின் விரிவுரையை பாலிகா மாணவிகள் புறக்கணித்து வருகை தராமல் விட்டதுதான். இருப்பினும் பத்தாம் தரத்தைச் சேர்ந்த மாணவிகள் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டனர் என்ற விடயம் ஆறுதல் அளிக்கிறது.

வெளி நாட்டு உதவிகளைப் பெற்று இலவசமாக நடாத்தப்படும் இவ்வாறான கருத்தரங்குகளைப் புறக்கணிக்கும் பாலிகாவைத் தவிர்த்து, வேறு பாடசாலைகளுக்கு அத்தகைய உதவிகளைச் செய்தால் என்ன என்பதே கெஸ்கிடம் நாம் கேட்கும் கேள்வியாகும்.

கெஸ்க் நிறுவனத்தினரே இது உங்கள் கவனத்திற்கு!

சனி, 4 ஆகஸ்ட், 2012

வருந்துகிறோம்


கடந்த ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்றை கத்ர் நாட்டிலுள்ள கெஸ்க் அமையம் அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இருப்பினும் குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் எமது தளத்துக்கு உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்காததால் அது தொடர்பான செய்தியை எம்மால் வெளியிட முடியவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது தொடர்பில் எமது வாசகப் பெருமக்கள் பலரும் எமது இத்தவறைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்திருந்ததையும் நன்றியோடு இவண் நினைவுகூர்கின்றோம்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தூள் பாவனையும் மாணவர்களும்

ஒரு காலத்தில் எமதூர்களிலெல்லாம் வயதானவர்களிடம்தான் தூள் பாவனை இருந்து வந்தது. அதுவும் மூக்குத் தூள் பாவனைதான் பரவலாகக் காணபட்டு வந்தது.

ஆனால் இன்று நிலைமை மிகவும் பயங்கரமாய் மாறியுள்ளது. அதிகமான மாணவர்கள் போதை அளிக்கவல்ல தூள் வகைகளையே நுகர்கின்றனர். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பிற்கு இடைப்பட்ட மாணவர்களே இத்தகைய போதை தரும் தூளை விரும்பிப் பாவிக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பயங்கரம் என்னவென்றால் இத்தகையோர் ஒரு பெரும் ஹராத்தைச் செய்வதோடு இன்னும் பல ஹராம்கள் செய்யத் தூண்டப்படுவதாகும். மட்டுமன்றி நாளடைவில் உடல் தளர்ச்சி, பலவீனம், சோர்வு, விரக்தி, எதிலும் முழுமையான ஈடுபாடு காட்டாமை முதலிய உடல், உள ரீதியான ஏராளமான பாதிப்புகளுக்கு உட்படுவர்.

எனவே பெற்றோர்களே! உங்கள் அன்புச் செல்வங்களை இத்தகைய அபாயத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இன்றே முயற்சி எடுங்கள்!