சனி, 25 ஆகஸ்ட், 2012

அல்-பத்ரியா இருளில் மூழ்கும் அபாயம்!!!


எமது கஹடோவிடாவுக்கு நூற்றாண்டு கடந்து கல்வி ஒளி பரப்பிக்கொண்டிருக்கும் அல் பத்ரியா, மின்சாரத் துண்டிப்பு காரணமாக சமீப காலமாக நிர்வாக ரீதியாக பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றது. அண்மையில் பாடசாலைக்கு கணனிப் பிரிவுக்கென பொறுப்பாளர் ஒருவர் நிய்மிக்கப்பட்ட போதும், மின்சாரத் துண்டிப்பு காரணமாக அவர் தனது கடமைகளை  மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலைக்கான காரணம் தொடர்பாக நாம் அலசியதில் எமக்குக் கிடைத்த தகவல் இதுதான்.

பாடசாலை மின் பாவனைக்கான  கட்டணம் நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் நிலுவையாகவே இருந்து வந்துள்ளது. இன்றும்தான். 35000 ரூபாவையும் தாண்டிய நிலையில் நிலுவை இருந்ததனால் மின்சார சபை உத்தியோகபூர்வமாகவே மின்சாரத்துண்டிப்பை மேற்கொண்டுள்ளது.

பத்ரியா வோக் மூலம் சேகரித்த பணத்தின் மூலமாகவேனும் நிலுவையைச் சரி செய்து பாடசாலையினதும் ஊரினதும் மானத்தைக் காப்பாற்றலமல்லவா என ஊர் மக்கள் விசனப்படுகின்றனர்.

பத்ரியா அதிபரே! இது உங்கள் கவனத்துக்கு!

நன்றி: www.kashtowitty.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக