வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தூள் பாவனையும் மாணவர்களும்

ஒரு காலத்தில் எமதூர்களிலெல்லாம் வயதானவர்களிடம்தான் தூள் பாவனை இருந்து வந்தது. அதுவும் மூக்குத் தூள் பாவனைதான் பரவலாகக் காணபட்டு வந்தது.

ஆனால் இன்று நிலைமை மிகவும் பயங்கரமாய் மாறியுள்ளது. அதிகமான மாணவர்கள் போதை அளிக்கவல்ல தூள் வகைகளையே நுகர்கின்றனர். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பிற்கு இடைப்பட்ட மாணவர்களே இத்தகைய போதை தரும் தூளை விரும்பிப் பாவிக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பயங்கரம் என்னவென்றால் இத்தகையோர் ஒரு பெரும் ஹராத்தைச் செய்வதோடு இன்னும் பல ஹராம்கள் செய்யத் தூண்டப்படுவதாகும். மட்டுமன்றி நாளடைவில் உடல் தளர்ச்சி, பலவீனம், சோர்வு, விரக்தி, எதிலும் முழுமையான ஈடுபாடு காட்டாமை முதலிய உடல், உள ரீதியான ஏராளமான பாதிப்புகளுக்கு உட்படுவர்.

எனவே பெற்றோர்களே! உங்கள் அன்புச் செல்வங்களை இத்தகைய அபாயத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இன்றே முயற்சி எடுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக