கெஸ்கின் இரண்டாவது கருத்தரங்கு, முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று இன்று பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற இருந்த கணித பாடத்துக்குப் பதிலாக தமிழ் பாடம் இடம் பெற்றது.
தமிழ் துறையில் முது கலைமானிப் பட்டம் பெற்ற மூதூரைச் சேர்ந்த ஜனாப் பௌஸி ஆசிரியர் இன்றைய கருத்தரங்கைச் சிறப்பாக நடாத்தி முடித்தார். இதில் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், தகுதி வாய்ந்த ஓர் ஆசிரியரின் விரிவுரையை பாலிகா மாணவிகள் புறக்கணித்து வருகை தராமல் விட்டதுதான். இருப்பினும் பத்தாம் தரத்தைச் சேர்ந்த மாணவிகள் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டனர் என்ற விடயம் ஆறுதல் அளிக்கிறது.
வெளி நாட்டு உதவிகளைப் பெற்று இலவசமாக நடாத்தப்படும் இவ்வாறான கருத்தரங்குகளைப் புறக்கணிக்கும் பாலிகாவைத் தவிர்த்து, வேறு பாடசாலைகளுக்கு அத்தகைய உதவிகளைச் செய்தால் என்ன என்பதே கெஸ்கிடம் நாம் கேட்கும் கேள்வியாகும்.
கெஸ்க் நிறுவனத்தினரே இது உங்கள் கவனத்திற்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக