செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சூரியனைப்பற்றிய அறிவியல் தகவல்கள்


சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

1. போட்டோ ஸ்பியர்
2. குரோமோ ஸ்பியர்
3. கொரோனா

சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படலம் என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பும் 500  இலும் குறைந்தது ஆகும்.
மேலும் இதன் வெப்பநிலை 5800 (கெல்வின்) ஆகும். போட்டோ ஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப் படை அதில் பெரும் பகுதியை தடுத்து விடுகின்றது. மேலும் பூமியின் வளி மண்டலத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் போட்டோ ஸ்பியரின் அடர்த்தி 3400 மடங்கு குறைந்தது எனவும் கூறப்படுகின்றது. வருங் காலத்தில் மிக உறுதியான உலோகத்தினால் ஆக்கப் படும் விண்கலமொன்று சூரியனின் இப்படலத்தில்  மய்யத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.

அடுத்த படலம் இதற்கு மேலே அமைந்துள்ள குரோமோ ஸ்பியர் ஆகும். இது போட்டோ ஸ்பி யரை விட அடர்த்தி குறைந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் படலமான இது சூரிய கிரகணத்தின் போது மறைக்கப்பட்ட சூரியனின் எல்லை வட்டத்தில் மிகுந்த பிரகாசமாக நாவல் நிற கோட்டை  அடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளியிலுள்ள சிவப்பு,நீலம்,வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோஸ்பியர் ஆனது அதன் நிற மாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாம் சுவாசிக்கும் வாயுவை விட குரோமோஸ்பியர் (10 இன் வலு 8) மடங்கு அடர்த்தி குறைவானது.

இறுதியாக கொரோனா பற்றி நோக்குவோம். சூரியனின் மய்யத்தில் இருந்து மிகப்பெரிய பரப்பள வுடைய குரோமோ ஸ்பியருக்கு மேலாகவும் உள்ளே யிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனா படலம் எனப்படுகின்றது. கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஒளி அலைகளை உள்ளடக் கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரிய விட்ட ஆரத்தைக் கொண்டது. மய்யத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர் களின் சராசரி வெப்ப நிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோ ஸ்பியரை விட பல நூறு மடங்கு அதிகமானது. அதிகளவான இந்த வித்தியாசம் பல விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கி யுள்ளது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு மய்யம்  எனப்படும் செய்மதியை ஏவியுள் ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றது.

சூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின் றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது அய்தரசனின் உட்கரு பிளவுற்று ஹீலியம் அணுக் களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சில தாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மய்யப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும்.  சூரியனைப் போலவே ஏனைய நட்சத்திரங்களிலும் மேலே கண்ட மூன்று படலங்களும் காணப்படும் என்ற போதும் கருத்தாக்கங்கள் வித்தியாசப்படலாம் என்பது வானியலாளர்களின் கருத்து.

nanRi widithalai
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக