ஞாயிறு, 21 அக்டோபர், 2012

96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர்
























மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த
ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தைக்கு ரஞ்சித் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் மனைவி இறந்ததையடுத்து 25 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த ராம்ஜித், 22 வருடங்களுக்கு முன் சகுந்தலாவைச் சந்தித்து தனது வாழ்க்கைத் துணையாக ஏற்று வாழ்ந்து வருகிறார். அவர்களது இல்லறத்தின் விளைவாக அவர்களுக்கு மேற்படி இரு ஆரோக்கியமான ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. சகுந்தலாவுக்கு தற்போது 54 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது இளமையின் இரகசியம் குறித்து ராம்ஜித் விபரிக்கையில், தான் தினசரி வாதுமை, வெண்ணெய் மற்றும் பால் ௭ன்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் தான் தினசரி ஒவ்வொரு இரவும் மூன்று அல்லது 4 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக