செவ்வாய், 30 அக்டோபர், 2012

இலங்கையில் ஈரானின் தலையீடு, ஷீஆ மதத்தைப் பரப்பும் திட்டத்தின் முதற் படி (RASMIN M.I.Sc)


இஸ்லாமிய வரலாற்றில் சிகப்புப் பக்கங்களை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் ஷீஆ மதத்தைப் பின்பற்றும் வழிகேடர்கள். நபிகள் நாயகம் முதல் நபியின் தோழர்களை குறை கூறி,இகழ்ந்து பேசி,அவதூறுகளை அள்ளி வீசி அவர்களின் வாழ்க்கையின் புனிதத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்க நினைத்த கயவர்கள் தான் இவர்கள்.
தற் காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை கூறு போட நினைத்தார்கள் அல்லாஹ்வின் கருணையின் காரணமாக இவர்கள் யார் இவர்களின் உள் நோக்கம் என்ன என்பவை எல்லாம் மக்கள் மத்தியில் வெளிச்சமாகியது.

இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைத்து தங்கள் மதப் பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள் தற்போது மிகப் பெரிய அளவில் அதனை நடை முறைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

அதன் ஒரு பகுதியாக தற்போது இலங்கைத் திரு நாட்டையும் அவர்களின் கழுகுப் பார்வை எட்டியுள்ளது.

புல வருடங்களாக மந்த நிலையில் நடந்த இந்தப் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கை முஸ்லீம்களின் அரசியல்,ஆன்மீக விஷயங்களில் பல துறைகளிலும் இவர்கள் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள்.இலங்கைக்கு ஷீயாக்கள் ஏன் ஊடுருவியுள்ளார்கள்,அவர்கள் எந்த முறைகளில் இஸ்லாத்தில் இல்லாத காரியங்களை புகுத்துகிறார்கள்,அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாம் விளக்கமாக ஆராய கடமைப் பட்டுள்ளோம் அதன் ஆரம்பமாக முதலாவது ஷீஆக்கள் பற்றிய ஒரு தெளிவை நாம் பார்ப்போம்.

பிரிவினைவாதிகளின் பெயர் விளக்கம் :

ஷீஆ என்பது அணி ,கோஷ்டி,குழு என்ற பொருள்களை கொண்ட ஒரு வார்த்தையாகும்.அரசியல் ரீதியாக பிளவு பட்டு இரண்டு அணிகளாக பிரிந்தவர்களை குறிப்பதற்காகத் தான் இந்த வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டது.

ஆனால் இதுவே கால ஓட்டத்தில் ஒரு வழி கெட்ட பிரிவை இனம் காணும் வார்தையாக மாறிவிட்டது.

ஈரான்,ஈராக் போன்ற நாடுகளில் அதிகமாகவும் இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் குறைவாகவும் தற்காலத்தில் காணப் படும் இவர்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வழி தவறிய கூட்டத்தில் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள்.

வழிகேடர்களின் தோற்றத்தின் பின்னனி :

ஷீஆ என்ற இந்த வழி கெட்ட கூட்டத்தினர் தோன்றியதன் பின்னனியை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிப் பொருப்பை ஏற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக இருப்பவர்கள் அபூபக்கர்,உமர்,உஸ்மான்,அலி,ஹஸன்,முஆவியா(ரலி)ஆகியோர்களாகும்.

அபூபக்கர்(ரலி)அவர்களைத் தொடர்ந்து உமர்(ரலி)அவர்களும்,உமர்(ரலி)அவர்களைத் தொடர்ந்து உஸ்மான்(ரலி)அவர்களும் ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

உஸ்மான் (ரலி)அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த சில அசம்பாவித நிகழ்ச்சியினால் உஸ்மான்(ரலி)அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்ட அலி(ரலி)அவர்கள் உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந் நேரத்தில் சிரியாவின் ஆளுனராக முஆவியா(ரலி)அவர்கள் இருந்தார்கள்.

சிரியாவின் ஆளுனராக இருக்கும் முஆவியா(ரலி)அவர்களிடத்தில் பைஅத் வாங்கிக் கொண்டு அவரையே மீண்டும் சிரியாவின் ஆளுனராக நியமிக்குமாறு இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அலி(ரலி)அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.

அலி(ரலி)அவர்கள் ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலி (ரலி)அவர்களை சிரியாவுக்கு அனுப்பி முஆவியா(ரலி)அவர்களிடம் பைஅத் வேண்டினார்கள்.

ஆனால் முஆவியா(ரலி)அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை.

தனது தந்தையின் சகோதரரின் மகன் உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களை தண்டிக்காத வரை தான் பைஅத் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

அதன் பின்னர் அபூ முஸ்லிம் அல் குராஸானி என்பவரையும் அனுப்பி முஆவியா(ரலி)அவர்கள் தன்னிடம் பைஅத் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் ஆனால் முஆவியா(ரலி)அவர்கள் அதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆட்சியில் கலகக் காரர்களின் கை ஓங்கியுள்ளதையும் ஆட்சியாளரின் கரம் கட்டப் பட்டிருப்பதையும் காரணம் காட்டி உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களை தற்போதைக்கு தண்டிக்க முடியாது என அலி(ரலி)அவர்கள் அந்த விஷயத்தைத் தள்ளி வைத்தார்கள்.

இந்தக் கருத்து வேறுபாடுதான் முஸ்லீம்கள் மத்தியில் இரு குழுக்களை உண்டு பண்ணியது.

அதாவது அலி(ரலி)அவர்களை ஆதரித்து ஒரு பகுதியினரும்,உஸ்மான்(ரலி)அவர்களை ஆதரித்து இன்னொரு பகுதியினருமாக முஸ்லீம்கள் பிளவு பட்டனர்.

இவர்கள் தான் ஷீஅத்து அலி (அலியின் கட்சியினர்),ஷீஅத்து முஆவியா(முஆவியாவின் கட்சியினர்)என வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.

இந்தப் பிரிவினையின் விளைவு ஹிஜ்ரி 36ல் முஹர்ரம் முதல் பத்தில் அலி(ரலி)அவர்களின் தரப்பினருக்கும்,முஆவியா(ரலி)அவர்களின் படையினருக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று வெடித்தது.

முஆவியா(ரலி)அவர்கள் தரப்பால் கலந்து கொண்ட அம்ரு பின் ஆஸ்(ரலி)அவர்கள் இந்த சண்டையை நிருத்தும் விதமாக குர்ஆனைத் தூக்கிக் காட்டுமாறு முஆவியா(ரலி)அவர்களை கேட்டுக் கொள்ள அவ்வாரே முஆவியா(ரலி)தரப்பினரால் குர்ஆன் தூக்கிக் காண்பிக்கப் பட்டது.

இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட அந்த யுத்தம் முடிவுக்கு வந்து,இரண்டு அணியைச் சேர்ந்தவர்களும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். (பத்ஹ{ல் பாரி)

ஷீஅத்து அலி,ஷீஅத்து முஆவியா என்ற இரு அணிகளுக்குமான பெயர் ஒரு அடையாளத்திற்காகத்தான் வைக்கப் பட்டதே தவிர இப்போது இருப்பதைப் போல் மார்க்க ரீதியிலான பிரிவினைக்கு வைக்கப் படவில்லை.

நுபியவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை சொல்லி அவர்களை வளர்த்தெடுத்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கையில் அவர்கள் நிலையாக நின்றார்கள் அரசியல் ரீதியாக இரு அணிகளாக மாறினார்கள் அவ்வளவுதான்.

ஆனால் இன்று ஷீஆக்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் அடிப்படையில் இஸ்லாத்தின் மூலாதாரங்களையே மாற்றி ஒரு தனி மதமாக மாறி இஸ்லாத்திற்கு வெளியில் சென்று விட்டார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக