ஞாயிறு, 10 ஜூன், 2012

பலஸ்தீனம் - ஐ.நா. அங்கத்துவம் கிடைக்குமா?

சமாதானப் பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் ஆரம்பிக்காவிட்டால், பலஸ்தீனை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பார்வையாளர் அந்தஸ்துக்கு உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மஹ்மூத் அப்பாஸ் எச்சரித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பரிஸில், பிரான்ஸ் ஜனாதிபதியுடன் கலந்து கொண்ட ஒரு செய்தியாளர் மானாட்டின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாதுகாப்புச் சபை அங்கத்துவம் பெறும் முயற்சிக்கு இஸ்ரேலின் நண்பனான அமெரிக்கா எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கியது? என்று கேட்கப்பட்டதற்கு, "நாம் முயற்சி செய்தோம்; ஆனால், தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை" என்று அப்பாஸ் கூறினார். "சமாதானப் பேச்சுவார்த்தையை இஸ்ரேல் உடனடியாக ஆரம்பிக்காத பட்சத்தில், வத்திக்கான் போன்று, அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்தைப் பெற நிச்சயம் முயற்சிப்போம்."

இதன் மூலம், ஐ.நா. சபையில் வாக்குரிமை அந்தஸ்து கிடைக்காவிட்டாலும், ஒரு நாடு என்ற சர்வதேச அந்தஸ்து, ஐ.நா. அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு மற்றும் சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றில் அங்கத்துவம் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நடவடிகை எப்போது மேற்கொள்ளப்படும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்காத அதே வேளை, "இது மிகவும் சிரமமான ஒரு விடயம்" எனவும் பலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் பெறுவதற்கு, ஒன்பது நாடுகளின் "ஆம்" தேவைப் படுவதுடன், எந்த ஒரு நாடும் எதிர்த்து வாக்களித்திருக்கக் கூடாது என்பது பிரதான நிபந்தனை. அங்கம் பெறுவதற்கு முன், சமாதானப் பேச்சின் மூலம் இரு நாடுகளும் தீர்வுக்கு வர வேண்டும் என்று கூறி, முன்னைய முயற்சியை அமெரிக்கா எதிர்த்திருந்தது. அத்துடன், அவ்வாறான மற்றொரு முயற்சி முன்வைக்கப் பட்டால், அதனையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக