வெள்ளி, 22 ஜூன், 2012

எகிப்தில் தேர்தல் முடிவு நிறுத்திவைப்பு

எகிப்து நாட்டில் தேர்தல் முடிந்ததும், ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அறிவித்துள்ளது. இந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கெய்ரோ நகர சாலைகளில் கோஷமிட்டும், கொடிகளை அசைத்தபடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இந்த கட்சியின் சார்பில் முகமது முர்சி என்பவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது முர்சிக்கு 26 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. முன்னாள் பிரதமரான அகமது ஷபிக் 24 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளார்.


எனவே, அடுத்த வாரம் மீண்டும் மறு ஓட்டெண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. எனவே, இந்த தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அடுத்த மாதம், 16 மற்றும் 17ம் தேதிகளில் மறுதேர்தல் நடத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக