செவ்வாய், 31 ஜூலை, 2012

கவிக்கோவின் கவிதை


kavikko-abdul-rahman
தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

திங்கள், 30 ஜூலை, 2012

கெஸ்கின் இலவசசக் கருத்தரங்கு

கத்ர் நாட்டில் தொழில் புரியும் எமதூர் மக்களின் கல்வி நிறுவனமான கெஸ்க், தனது கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவிகளுக்கு இலவசக் கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டக் கருத்தரங்கு கடந்த 29. 07. 2012 ஞாயிறு காலை 8.45 மணியளவில் பாலிகாவில் ஆரம்பமாகியது. குறித்த கருத்தரங்கில் இடம் பெற்ற விஞ்ஞஆன பாடத்துக்கான விரிவுரையை, திஹாரிய அல்-அஸ்ஹர் ம. கல்லூரியின் பிரபல விஞ். ஆசிரியர் ஜனாப் ஹாஜா மொஹிடீன்  நிகழ்த்திச் சென்றார்.

இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த வாரங்களில் ஏனைய பாடங்களுக்கான கருத்தரங்குகளும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இக்கருத்தரங்குகளில் ஏனைய சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் மாத்திரம் கலந்துகொள்ள முடியும்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை கணிதக் கருத்தரங்கு நடைபெறும். ஜனாப் ரிஸ்வான் ஆசிரியர் விரிவுரை நிகழ்த்துவார்.

ஏற்பாட்டுக் குழு

பத்ரியா வசந்தம் சூடுபிடிக்கிறது!


முன்பு நாம் அறியத்தந்ததுபோன்று பத்ரியா வசந்தம் சூடுபிடித்துள்ளது. பத்ரியாவின் தலை விதியை மாற்றிப் பொற்காலம் ஒன்றை நோக்கி நகர்த்துவோம் என்பதே மேற்படி வசந்தத்தின் தொனிப் பொருளாகும்.

ஒரு காலத்தில் கம்பஹா பிராந்தியத்திலேயே மிகச் சிறந்த பெறுபேறுகளைப்  பெற்றுக் கொடுத்தது மாத்திரமன்றி ஏராளமான பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமை எமது அல் பத்ரியா மகா வித்தியாலயத்தயே சாரும். இப்பாடசாலையின் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இன்று பத்ரியாவில் கற்பிக்கின்ற ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள்.

இப்படிப் பெருமைப்பட்டுக்கொள்ளக் காரணம் கடந்த இரு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் அவற்றை முறையாகவும் வெற்றிகரமாகவும் நெறிப்படுத்திய ஆளுமை மிக்க நிர்வாகிகளுமே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவ்வாறானதொரு பொற்காலம் மீண்டுமொருமுறை தோன்றுமா என்பது முயல் கொம்பாகவே உள்ளது.

இன்று பாடசாலை நிலவரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வேலிகளே பயிர்களை மேய்கின்றன.  ஆசிரியம் என்ற அந்த மகத்தான பொறுப்பு தட்டிக்கழிக்கப்படுகிறது. உயர் வகுப்புக்கள் பெயரளவிலேயே இயங்குகின்றன. உயர் வகுப்பில்  கற்பிக்க ஆசிரியர்கள் இருந்தும் முறையாகப் பாடங்கள் நடைபெறுவதில்லையென மாணவர்களே புகார் செய்கின்றனர். இடை நிலை மற்றும் கீழ் வகுப்புக்களின் நிலையோ சொல்லும் தரத்தில் இல்லயாம்.

மறு பக்கம் சிம்மாசன இருக்கையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதில் ஆளுமை மிக்க அதிபர் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார். இன்னும் அந்த இரு தலைக் கொல்லி எறும்பின் நிலை தொடர்கிறது.

இந்த அவலத்தில் இருந்து பத்ரியாவைப் பாதுகாப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாகவே பத்ரியா வசந்தக்காரர்கள் கருதுகின்றனர். மட்டுமன்றி நோன்பு முடிவதற்குள் பாடசாலையில் பாரியதொரு மாற்றம் வரும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சற்றுமுன் எமக்குக் கிடைத்த தகவலின்படி புதிய அதிபர் ஒருவரையும் அழைத்து வருவதற்கான ஏற்படுகள் யாவும் நிறைவுற்றுள்ளன. மாண்டுபோன வர்த்தகப் பிரிவை உயிர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

பத்ரியாவுக்கும் தேவை ஒரு முர்ஸி

புதிய அதிபரை நாமும் வாழ்த்துகிறோம்.

நன்றி: www. kashtowitti. lk

சனி, 28 ஜூலை, 2012

உலகமெங்கும் அதிகரித்து வரும் உடற்பருமன், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை! – WHO


உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.

தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

கூடா நட்பு கேடாய் முடியும்



imagesCA1IB1FJஇஸ்ரேல் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன.

நோன்பு



அனைத்து மத கோட்பாடுகளும் கூறும் அறிவுரைதான் நோன்பு என்று சொல்லப்படும் விரதம். மதங்கள் மனிதனை ஆரோக்கியப் படுத்தவும், நல்வழிப் படுத்தவும் தோன்றியவைதான். இவை மனித ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளன. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப மனிதன் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இலங்கையில் இஸ்லாமியர்களை இலக்குவைக்கும் பேரினவாத சக்திகளும், வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டிய முஸ்லிம்களும்.!



வெள்ளி, 20 ஜூலை, 2012

முஸ்லிம் சமூகம் / ஜாஹிலிய்யா சமூகம் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு


- ஜா, சமூகம் கோத்திர உணர்வை முதன்மைப்படுத்த முஸ்லிம் சமூகம் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை முதன்மைப் படுத்தியமை
- ஜா, சமூகம் பாவங்கள் செய்வதை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை; முஸ்லிம் சமூகம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளமை
- ஜா. சமூகம் அஸபிய்யா எனும் கோத்திர வெறி உணர்வுக்கு மதிப்பளித்து கோத்திரத் தலைமைக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழந்தமை; முஸ்லிம் சமூகம் பொதுத் தலைமைத்துவம் ஒன்றுக்குக் கட்டுப்படுகின்றமை
- சீரான குடும்ப அமைப்பு ஜா. சமூகத்தில் இல்லாதிருக்க முஸ்லிம் சமூகத்தில் இவை சீராகக் காணப்படுகின்றமை
- ஜா. சமூகத்தில் சுய நலமும் சுரண்டலும் தாண்டவமாடியபோது முஸ்லிம் சமூகத்தில் சமூக நலனை மையப்படுத்தி ஹலால்-ஹராம் சட்ட விதிகள் பேணப்பட்டமை
- ஜா. சமூகத்தில் பெண் எத்தகைய ஒரு பெறுமாணத்தையும் பெறவில்லை. முஸ்லிம் சமூகத்தில் அவர்களது சமூக அந்தஸ்து, சொத்துரிமை, திருமண-விவாகரத்து உரிமை என அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
- மனிதனின் விருப்பு வெறுப்பே செல்வாக்குப் பெற்றிருந்த ஜா. சமூகத்தில் கல்வி, ஒழுக்கவிழுமங்கள், வணக்க வழிபாடுகள் உரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை, முக்கியத்துவம் பெற்றும் இருக்கவில்லை; ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இவையனைத்துக்கும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதோடு அவற்றுக்கு உரிய அந்தஸ்தும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளன.
- கலை என்ற பெயரிலுள்ள சகலதுமே ஜா. சமூகத்தில் அசிங்கங்களையும் கீழ்த்தரமான ஆபாசங்களையும் வெளிக்கொணர்வனவாய் அமைந்திருந்தன. முஸ்லிம் சமூகத்தில் இவை அனைத்தும் மானுட சமூகத்தின் மேம்பாட்டை மையப்படுத்தியதாகவே அமைதிருக்கும்; அல்லாதபோது அவற்றுக்கு அங்கீகாரமோ பெறுமாணமோ கிடையாது.
- ஜா. சமூகத்தில் தக்வாவையோ ஆன்மீகப் பெறுமாணங்களையோ செயற்பாடுகளில் காண முடியாதிருந்தது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இவைதாம் உரைகற்கள்

ரமழான் முபாரக்

இன்று ஆரம்பமாகும் ரமழான், அனைவரது உள்ளங்களிலும் தக்வாவை ஏற்படுத்தி இறை நெருக்கமுள்ளவர்களாக ஆக்கி அருள வேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.

புதன், 11 ஜூலை, 2012

செவ்வாய், 10 ஜூலை, 2012

Jaffna Muslim: சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு தலைவன் கைது - மோதலில...

Jaffna Muslim: சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு தலைவன் கைது - மோதலில...: சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு பிரிவினரு...

எதிர்கால பத்ரியாவின் வினைத்திறன் மிக்க அதிபர் யார்? ஒரு சூடான செய்தி!


மேற்குறித்த விடயம் தொடர்பாகப் பரவலாகவே ஊர்மட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. சமீபத்தில் அதிபர்மாருக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பாணையைப் பெற்றுக் கொண்ட பத்ரியாவின் ஸலாம் ஆசிரியரும், அல்அஸ்ஹரின் ஸபீர் ஆசிரியரும் அந்த சிம்மாசன இருக்கைக்காக  ஒரு பக்கம் போட்டியிட மறுபக்கம் பத்ரியாவின் பிறிதோர் ஆசிரியரான மாஹிர் ஆசிரியரும் போட்டியிடப்போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு மத்தியில் விடுமுறையில் இருக்கும் அதிபரையே தொடர்ந்தும் வைத்துக்கொள்வதற்கான பகீரதப் பிரயத்தனங்களும் நடைபெற்று வருகின்றன. எமக்குக் கிடைத்த தகவலின்படி "லீவில் இருப்பவரே நல்லம்" என்று வாக்களிக்குமாறு குறித்த பாடசாலையின் சில ஆசிரியர்களை  முக்கிய புள்ளிகள் சிலர் ( ? )  கட்டாயப்படுத்தியதாகவும் ஒரு த்கவல்............ 

நன்றி: www.waaththiyaar.blogspot.com

மிகுதி, நாளை எதிர்பாருங்கள்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

கர்வப்படுவது தப்பில்லை; தனது கர்வத்தை அடுத்தவர் மண்டையில் ஏற்றக்கூடாது. (வாலி)


உலகிலேயே அதிக திரையிசைப் பாடல்களை எழுதியிருக்கும் வாலிப கவிஞர் வாலியின் 80வது பிறந்தநாள் விழா சென்னை நாரத கானசபாவில் 13 .11. 2010 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பாடல்களின் தொகுப்பான “வாலி - 1000” என்ற நூல் வெளியீடும் நடந்தது. நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில்,பொதிகை தொலைக்காட்சி நடராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், நடிகர் கமலஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

ஆரம்ப கால முஸ்லிம்களின் எழுச்சியும் எமது சமகால நிலையும். அலி இஸ்ஸத் பிகோபிச் (ரஹ்)

புதன், 4 ஜூலை, 2012

யார் இந்த கஷ்டோவிட்டி ஷீஆக்கள்??

எதிரியின் எதிரி நண்பன் என்று கேள்விப்பட்டிருப்பீர்களல்லவா? அந்த வாய்ப்பாட்டை அடியொட்டித்தான் இதுவும் அரங்கேறுகிறது. தப்லீக் தௌஹீத் மற்றும் இதர இயக்கங்களின் வளர்ச்சி கண்டு, அவற்றினால் தமது வயிற்றுப் பிழைப்புக்கான வாயில்கள் அடைக்கப்பட்டுவிடுமோ  என்று பயந்து அவ்வியக்கங்கள் மீது பொறாமை கொண்ட ஒரு சில விஷமிகளின் தூர- திருஷ்டியற்ற செயற்பாட்டின் விளைவே இக்கொள்கை இங்கு வேரூன்றக் காரணமாய் அமைந்துள்ளது.

செவ்வாய், 3 ஜூலை, 2012

கஹட்டோவிட்டாவில் ஷீஆக் கொள்கை?

ஆமாம், எமது சின்ன மக்காவில் ஷீஆவுக்கான முதல் விதை தூவப்பட்டுவிட்டது. தொப்புள் கொடி உறவாக இந்த உறவு இனி இங்கு வளரும் என எதிர்பார்க்கலாம்.

முன்பு ஒரு தடவை நான் இதே தளத்தில் ரஸூலுல்லாஹ்வையும் பாதிமா நாயகியையயும் தமது ஞானக் கண்களால் காண்பதாகக் கதை அளக்கும் ஒரு கொள்கை வழிப் பாடசாலை பற்றி எச்சரித்திருந்தேன்.

அது போன்ற பிறிதொரு சனியன்தான் இதுவும். ஊரில் ஒரு பிரபலம் எனத் தன்னைக் காட்டிக்கொள்ள முனையும் ஒரு முக்கிய புள்ளியின்  முயற்சியால்தான் இந்தப் பாதகமே அரங்கேறுகிறது.

அகீதாவோடு தொடர்பான இவ்வாறான சர்ச்சைகளை முறியடிக்க எமது சமூகத்தில அஷ்அரீக்களும் மாத்ரூதிகளும் அஹ்மத் இப்னு ஹன்பல்களும் தேவைப்படுகிறார்கள். விழித்தெழுங்கள் இஸ்லாமிய உள்ளங்களே!

மார்க்கப் பணி புரியும் இஸ்லாமிய இயக்கங்களே! அமைப்புக்களே!
இது உங்கள் கவனத்துக்கு!!

பத்ரியாவுக்குப் புதிய அதிபர், பிரதி அதிபர்கள் நியமனம்!!!

மேற்படி பாடசாலைக்கு நீண்ட காலமக  தகுதி வாய்ந்த அதிபர் ஒருவர் இல்லாதிருப்பதை அறிந்துகொண்ட கம்பஹா கல்வி வலயம், குறித்த பாடசாலைக்கு ஓர் அதிபரையும் ஓருதவி அதிபரையும்  நியமித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. பத்ரியாவில் உள்ள ஸலாம்  ஆசிரியர் அதிபராகவும் திஹாரிய அல் அஸ்ஹர் ஆசிரியர் ஜனாப் ஸபீர் உப அதிபராகவும்  நியமிக்கப்படவுள்ளனர். புதிய அதிபர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!