சனி, 28 ஜூலை, 2012

உலகமெங்கும் அதிகரித்து வரும் உடற்பருமன், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை! – WHO


உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.

தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

மக்கள் கூடுதலாக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொண்டு, குறைவான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் மக்கட் தொகையில் 12 சதவீதமானவர்கள் உடல் பருமனுடையவர்களாக கருதப்படுகிறார்கள்.
இதேவேளை, குழந்தை பேறு காலத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள் இப்போது பெருமளவில் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதே போல தடுப்பூசி போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சிறார்களின் உயிரிழப்பு வீதமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக