திங்கள், 30 ஜூலை, 2012

பத்ரியா வசந்தம் சூடுபிடிக்கிறது!


முன்பு நாம் அறியத்தந்ததுபோன்று பத்ரியா வசந்தம் சூடுபிடித்துள்ளது. பத்ரியாவின் தலை விதியை மாற்றிப் பொற்காலம் ஒன்றை நோக்கி நகர்த்துவோம் என்பதே மேற்படி வசந்தத்தின் தொனிப் பொருளாகும்.

ஒரு காலத்தில் கம்பஹா பிராந்தியத்திலேயே மிகச் சிறந்த பெறுபேறுகளைப்  பெற்றுக் கொடுத்தது மாத்திரமன்றி ஏராளமான பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமை எமது அல் பத்ரியா மகா வித்தியாலயத்தயே சாரும். இப்பாடசாலையின் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இன்று பத்ரியாவில் கற்பிக்கின்ற ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள்.

இப்படிப் பெருமைப்பட்டுக்கொள்ளக் காரணம் கடந்த இரு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் அவற்றை முறையாகவும் வெற்றிகரமாகவும் நெறிப்படுத்திய ஆளுமை மிக்க நிர்வாகிகளுமே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவ்வாறானதொரு பொற்காலம் மீண்டுமொருமுறை தோன்றுமா என்பது முயல் கொம்பாகவே உள்ளது.

இன்று பாடசாலை நிலவரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வேலிகளே பயிர்களை மேய்கின்றன.  ஆசிரியம் என்ற அந்த மகத்தான பொறுப்பு தட்டிக்கழிக்கப்படுகிறது. உயர் வகுப்புக்கள் பெயரளவிலேயே இயங்குகின்றன. உயர் வகுப்பில்  கற்பிக்க ஆசிரியர்கள் இருந்தும் முறையாகப் பாடங்கள் நடைபெறுவதில்லையென மாணவர்களே புகார் செய்கின்றனர். இடை நிலை மற்றும் கீழ் வகுப்புக்களின் நிலையோ சொல்லும் தரத்தில் இல்லயாம்.

மறு பக்கம் சிம்மாசன இருக்கையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதில் ஆளுமை மிக்க அதிபர் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார். இன்னும் அந்த இரு தலைக் கொல்லி எறும்பின் நிலை தொடர்கிறது.

இந்த அவலத்தில் இருந்து பத்ரியாவைப் பாதுகாப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாகவே பத்ரியா வசந்தக்காரர்கள் கருதுகின்றனர். மட்டுமன்றி நோன்பு முடிவதற்குள் பாடசாலையில் பாரியதொரு மாற்றம் வரும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சற்றுமுன் எமக்குக் கிடைத்த தகவலின்படி புதிய அதிபர் ஒருவரையும் அழைத்து வருவதற்கான ஏற்படுகள் யாவும் நிறைவுற்றுள்ளன. மாண்டுபோன வர்த்தகப் பிரிவை உயிர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

பத்ரியாவுக்கும் தேவை ஒரு முர்ஸி

புதிய அதிபரை நாமும் வாழ்த்துகிறோம்.

நன்றி: www. kashtowitti. lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக