ஆரம்பமாகின. மேற்படி நிகழ்ச்சிகளை கம்பஹா - மினுவங்கொட வலய ஆரம்பப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஜனாபா எம்.எம்.கே. மௌபியா வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வின்போது ஆசிரிய ஆலோசகர் எம்.டீ.எம். நஹாஸ் மற்றும் கல்லூரி அதிபர் புகாரி உடயார் முதலானோரும் கருத்துரைகள் வழங்கினர். கம்பஹா கல்வி வலய தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கிடையிலான மேற்படி ஆரம்ப தினப் போட்டிகளில் பின்வரும் பாடசாலைகள் கலந்து கொண்டன.
1. முஸ்லிம் மகளிர் கல்லூரி - கஹடோவிட
2. குமாரிமுள்ள ம.வி. - பூகொட
3. அரபா ம.வி. - உடுகொட
4. அல் பத்ரியா ம.வி. - கஹடோவிட
5. ஓர்ச்சட்வத்த வித்தியாலயம் - ஓர்ச்சட்வத்த
6. அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி - திஹாரிய
7. அங்கவீனர் நிலையம் - திஹாரிய
கஹடோவிட முஸ்லிம் மகளிர் கல்லூரி மிகக் குறைந்த பௌதீக வளங்களைக் கொண்டுள்ள ஒரு பாடசாலையாக இருக்கின்ற நிலையிலும் மேற்படி நிகழ்ச்சிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க எல்லா வகையிலும் பாடசாலை நிர்வாகம் தன்னோடு ஒத்துழைத்ததாக பொறுப்பதிகாரி மௌபியா கல்லூரிக்குப் புகழாரம் சூட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக