வெள்ளி, 22 ஜூலை, 2011

சிலுவை யுத்தங்கள்


நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திய அதேவேளை, ஏனைய சமயங்களையும் அச்சமயங்களைப் பின்பற்றுகின்றவர்களையும் மதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். எனவே, இஸ்லாம் ஏனைய சமயங்களை மதிக்கும் உயர்ந்த பண்பைக் கொண்டது. ஆனால், இஸ்லாத்தைப் பல வகையிலும் விமர்சிக்கின்ற கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்லாத்தின் இவ்வுயர் பண்புக்கு மாற்றமான பண்புகளையே வரலாறு நெடுகிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவ்வகையிலான ஓர் அம்சமாக அமைவதே கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மதத்தின பெயரால் மேற்கொண்ட கொடூரமான சிலுவை யுத்தங்களாகும்.


நபி (ஸல்) அவர்களது காலத்திலிருந்தே யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், யுத்தங்கள் போன்ற கெடுபிடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நடவடிக்கைகள் வியாபகமடைந்து கி.பி. 11ம் நூற்றாண்டளவில் சிலுவை யுத்தங்களாகப் பரிணமித்தன. சிலுவைப் படையெடுப்பின் ஊடாக முஸ்லிம் சமூகத்தை அரசியல், பொருளாதார, சமய, சமூக ரீதியாகப் பின்னடையச் செய்வதே கிறிஸ்தவர்களினதும் யூதர்களினதும் முழு நோக்கமாக இருந்தது. சிலுவை யுத்தங்கள் என்பவை, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி, முஸ்லிம்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து, இஸ்லாமிய ஆட்சியை ஒழித்துக் கட்டும் நோக்கில் மேற்கொண்ட யுத்தம் எனலாம். இவ் யுத்தத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய வீரர்கள் இது கிறிஸ்தவர்களின் புனிதப் போர் என அடையாளம் காட்டுவதற்காக சிலுவை அடையாளங்களைத் தமது ஆடைகளில் கொழுகிக் கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டதனால் 'சிலுவை யுத்தம்' எனப் பெயரிடப்பட்டது.

மதரீதியாகப் பல பிரிவினராகப் பிளவுபட்டிருந்த கிறிஸ்தவர்கள், முன்னேற்றத்தின் உச்சியை எட்டியிருந்த இஸ்லாத்தினதும் அதன் அரசியலினதும் வளர்ச்சியைக் குறுக்கிட்டு, இடைநிறுத்தி, தமது ஆதிக்கத்தையும் மதத்தையும் பரப்புவதை நோக்காகக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ சமயத்தை உலகம் முழுவதும் பரப்பி, முஸ்லிம் ஆசியாவை கிறிஸ்தவ ஐரோப்பாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து, கிறிஸ்தவ ஆசியாவாக மாற்ற வேண்டுமென்ற நோக்கிலேயே கிறிஸ்தவர்கள் இப்போரைத் தொடங்கினர். ஐரோப்பாவில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிலமானிய முறைப் பொருளாதார அமைப்பு காணப்பட்டதனால் அங்கு வாழ்ந்த விவசாய ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். வறுமையில் வாடியிருந்த இவர்கள் கிழக்காசிய நாடுகளின் செல்வங்கள் மீது ஆசை கொண்டு இப்போரில் கலந்து கொண்டனர். அன்றைய ஐரோப்பிய சமூகம், பாப்பரசரின் தலைமையின் கீழ் ஒரு பகுதியினரும், பேரரசனின் தலைமையின் கீழ் ஒரு பகுதியினரும், பாட்டாளிகள் என ஒரு பகுதியினருமாக மூன்று குழுக்களாகக் காணப்பட்டது. உரோமத் திருச்சபையை தனியானதொரு சுதந்திர சக்தியாக அமைக்க வேண்டும் என்பதைக் குறியாகக் கொண்டிருந்த பாப்பரசர், தனது மேலாதிக்கத்தைக் கிறிஸ்தவ உலகில் நிறுவுவதற்காகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காகப் போர் நடவடிக்கைகளைக் கூட ஊக்குவித்தார். முஸ்லிம்களுக்கெதிராகச் சிலுவை யுத்தத்தை ஆரம்பிக்கத் தூண்டுவதன் மூலம் கிறிஸ்தவ உலகின் ஆதரவைப் பெறலாம் எனவும், இதன் விளைவாக ஐரோப்பிய மன்னர்கள், இளவரசர்கள் தனது தலைமைத்துவத்தை எவ்வித மறுப்புமில்லாது ஏற்றுக் கொள்வர் என்றும் கருதினார். இவ்வாறு மூன்று பகுதியினராகப் பிரிந்து அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உட்பட்டிருந்தவர்கள் பாப்பரசரின் பொது அழைப்பை ஏற்றுக் கொண்டனர். இவ் அடிமைகள் தங்களை இளவரசர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளவும், மன்னர்களும் இளவரசர்களும் கிழக்குப் பிராந்தியத்தில் புதிய சிற்றரசுகளை உருவாக்கிக் கொள்ளவும், பாட்டாளிகள் ஏழ்மையின் கோரப் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் என பாப்பரசரின் அழைப்பை இரு கரம் நீட்டி வரவேற்றனர். இவற்றோடு ஐரோப்பிய யாத்திரிகர்கள் சிலர், ஜெரூசலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தம்மை மானபங்கப்படுத்தித் துன்புறுத்தினர் என்று பொய்யாகக் கூறிய கதையும் கிறிஸ்தவர்கள் சிலுவைப் போரைத் தொடங்குவதற்குக் காரணமாயிற்று.

முதலாவது சிலுவைப் போர் கி.பி. 1097இலும், இரண்டாவது சிலுவைப் போர் கி.பி. 1149இலும், மூன்றாவது சிலுவைப் போர் கி.பி 1189இலும், நான்காவது சிலுவைப் போர் கி.பி. 1204இலும், ஐந்தாவது சிலுவைப் போர் கி.பி. 1218இலும், ஆறாவது சிலுவைப் போர் கி.பி. 1228இலும், ஏழாவது சிலுவைப் போர் கி.பி. 1248இலும், எட்டாவது சிலுவைப் போர் கி.பி. 1269இலும் நடைபெற்றன. இவ் யுத்தங்களின் போது கிறிஸ்தவ சிலுவை வீரர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதியும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடூரப் படுகொலைகளும், வன்முறைகளும், சித்திரவதைகளும், கொள்ளையடிப்புகளும் வரலாற்றில் என்றுமே நடைபெற்றிராத அளவு படுமோசமானவையாக இருந்தன. இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண், பெண், சிறுவர், சிறுமியர், முதியோர், குழந்தை என்ற பாகுபாடின்றி, காணுமிடத்திலெல்லாம் வெட்டிச் சரிக்கப்பட்டார்கள்: கொன்று குவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் சிலுவை வீரர்களைச் சமாளிக்க முடியாது திணறிய முஸ்லிம்கள் பின்னர் ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கிய போது, சிலுவை வீரர்கள் மிரண்டு பின்வாங்கி ஓடினர். சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக விட்டு விட்டு நடைபெற்ற இப்போரில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது முஸ்லிம்களே. ஆனால் அதிகமாகப் பயனடைந்தது கிறிஸ்தவர்களே. கிறிஸ்தவர்கள் தாம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையென்றாலும், அதற்குப் பதிலாக அல்லது அதை விடவும் பெறுமதியான பல சிறப்பு மிக்க வாழ்க்கை முறைகளையும், சலாசார அறிவியல் அனுபவங்களையும், நாகரிக முன்னேற்றத்தையும் முஸ்லிம்களிடமிருந்து இவ் யுத்தத்தின் மூலமாகப் பெற்றுக் கொண்டனர். இவ்வகையில், சிலுவை யுத்தங்களின் மூலமாக கிறிஸ்தவர்கள் பெற்ற சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

சிலுவை யுத்தங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள்

சிலுவை யுத்தத்தின் மூலம் கிழக்குத் தேசத்தைக் காலனித்துவப்படுத்தும் முயற்சியில் சிலுவை வீரர்கள் தோல்வியடைந்தனர். என்றாலும் அவர்கள் இவ் யுத்தத்தின் விளைவாக முஸ்லிம்களிடமிருந்து கல்வி, கலாசார, மத, சமூக ரீதியான பல பயன்பாடுகளைப் பெற்றுக் கொண்டனர் என்பது பகிரங்கமான இரகசியமாகும். இது பற்றி சில பிரெஞ்சு வரலாற்றாசிரியர்களும் எழுதியுள்ளனர்.

ஐரோப்பாவின் கலாசார வளர்ச்சிக்கு சிலுவை யுத்தங்கள் மகத்தான பங்களிப்பினை வழங்கியுள்ளன. ஐரோப்பிய மக்களின் சிந்தனைக் கண்களைத் திறந்து விட்டதில் இவ் யுத்தங்களுக்குப் பாரிய பங்கிருக்கின்றது. மத்திய கிழக்கில் நாகரிகம் வளர்ந்துள்ள அளவு தமது நாகரிகமும் வளர வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதில் இவ் யுத்தங்களுக்குப் பாரிய பங்கிருக்கின்றது. ஐரோப்பாவின் நாகரிகமும் கலாசாரமும் உயர் பெறுமானத்தைப் பெறுவதற்கும், ஐரோப்பாவின் கலாசாரத்தை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்கும் மத்திய கிழக்கின் நாகரிகமும் கலாசாரமும் பாரிய செல்வாக்குச் செலுத்தியுள்ளன. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளோ சிலுவை வீரர்களிடமிருந்து எந்தவொரு கலாசார விழுமியங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு கலாசார, அறிவியல் அம்சங்களும் அவர்களிடம் இருக்கவில்லை. எனினும், சில போர்த் தந்திரங்களை அவர்களிடமிருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொண்டனர் என முசைழ என்ற அறிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

சிலுவை வீரர்கள் முஸ்லிம்களிடமிருந்து பெற்று வந்த கலாசார விழுமியங்கள் அவர்களை நாட்டுப்புற வாழ்க்கையிலிருந்து விடுபட வைத்தன. அவர்களை நாகரிக உலகின் பக்கம் அவை இட்டுச் சென்றன. சிலுவை யுத்தத்திற்கு முன்பிருந்தே முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக் கொண்ட கலாசார அம்சங்களை நீண்ட நாட்களாக ஐரோப்பியர் பேணிப் பின்பற்றி வந்துள்ளனர். சிரியா, ஸ்பெய்ன் போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களினூடாகவே இவர்கள் அவைகளைப் பெற்றுக் கொண்டனர். சிலுவை யுத்தங்கள் ஆரம்பமான போது சிரியா அதற்கான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் சமாதான உடன்படிக்கைகள் ஏற்பட்டிருக்கும் கால கட்டத்திலேயே இப்பிரதேச முஸ்லிம்களைச் சந்தித்து கிறிஸ்தவர்கள் அளவளாவினர். இக்காலப் பகுதிகளில் இரு பகுதியினருக்கும் இடையிலான கலப்பும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்பட்டன. இதனால் முஸ்லிம்களிடமிருந்து பல அறிவில் துறைகளை இவர்கள் அப்படியே பெற்றுக் கொண்டனர் என நுஅநசவழn குறிப்பிடுகிறார்.

இலக்கிய ரீதியாக எடுத்துக் கொள்வோமாயின், முஸ்லிம்களிடமிருந்து நிறையவே பெற்றுக் கொண்டுள்ளனர் எனலாம். முஸ்லிம்களின் இலக்கியங்களைப் படித்த சிலுவை வீரர்களெல்லாம் விரிந்த கற்பனா சக்தியுடையவர்களாக மாறினர். தேசத்தை விட்டும் தூரமாகியிருப்பதும், இதுவரை அவர்கள் அனுபவித்து வந்த அடிமைத் தளையிலிருந்து கிடைத்த விடுதலையும், பாதைகளிலும் போர்க்களங்களிலும் அவர்கள் சந்தித்த நிகழ்வுகளும் அவர்களிடையே அழகான கவிதைகளையும் கதைகளையும் முளைவிடச் செய்தன.
ஐரோப்பியர் முஸ்லிம்கள் பற்றிய செய்திகளை மோசமான முறையில் மட்டுமே கேள்விப்பட்டிருந்தனர். கண் முன்னால் காணாதவர்கள் பற்றிக் கிடைக்கப் பெற்ற செய்திகளை வைத்துத் தங்களின் மனங்களிலே முஸ்லிம்கள் பற்றித் தப்பெண்ணங்களை வளர்த்து வைத்திருந்தவர்களுக்கு முஸ்லிம்களை நேரடியாகக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. சிலுவை வீரர்கள் தமது கண்களால் காணும் முஸ்லிம்கள் ஏற்கனவே தாம் கேள்விப்பட்ட முஸ்லிம்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருப்பதைக் கண்ணூடாகக் கண்டனர்.

முஸ்லிம்களிடம் நிறைந்து காணப்படும் மனிதாபிமானப் பண்புகளையும், அவர்களிடம் குடிகொண்டிருக்கும் சிறப்பான பண்புகள், வீரம், துணிவு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் தன்மை போன்ற தாம் முன்னர் கேட்டிராத, கண்டிராத பல நற்பண்புகளைக் கொண்டவர்களாக முஸ்லிம்களைக் கண்டனர்.
மத்திய கிழக்கு முஸ்லிம்களிடம் காணப்பட்ட இப்பண்புகள் ஐரோப்பியரிடையே மனிதாபிமான ரீதியான பண்பாடுகள் வளர உதவியாக இருந்தன. முஸ்லிம்களைக் கண்டதன் பின்னர் அவர்களிடையே வளர்ந்த மனிதாபிமானப் பண்புகள் எவையும், அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் சிலுவை வீரர்களிடம் காணப்படவில்லை எனலாம்.

சிலுவை யுத்தத்தில் ஈடுபட்டு நாடு திரும்பிய வீரர்கள், தாம் ஏற்கனவே யுத்தத்திற்கு வரும்போதிருந்த பண்புகளிலிருந்து மாற்றம் பெற்றவர்களாகவே நாடு திரும்பினர். யுத்தப் பிரயாணத்தில் ஈடுபடும் முன் அவர்களிடம் காணப்பட்ட எந்தப் பழக்க வழக்கங்களையும் யுத்தம் முடிவடைந்த பின் அவர்களிடம் காண முடியவில்லை. அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை உடையொராய் தாயகம் திரும்பினர். புதிய கலாசாரத் தாக்கத்தின் சாயல்கள் அவர்களிடம் தென்பட்டன. புதிய சிந்தனைப் பாங்கு வெளிப்பட்டது. அவர்கள் தமது சுற்றுப் பிரயாணங்கள் பற்றிய குறிப்புக்களைத் தொகுத்தெடுத்தனர். இவர்களது இம்முயற்சியை எந்தவொரு குறுநில ஆட்சி எல்லைகளும் தடுத்து நிறுத்தி விடவில்லை. இவர்களிடம் இருந்த புதிய சிந்தனையை ஐரோப்பாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரப்பும் முயற்சிகளில் ஈடுபடலாயினர். இவர்களின் இம்முயற்சிகள் ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடமாடும் பல பாடசாலைகள்உ ருவாக வழிவகுத்தன எனலாம்.

வியாபாரத் துறையில் முஸ்லிம்களுக்கும் சிலுவை வீரர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. இதனால்தான் சிலுவை வீரர்கள் முஸ்லிம்களின் துறைமுகங்களில் அதிகமானவற்றில் கைவைத்தனர். இந்தத் துறைமுகங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காகத் திறந்து விடப்பட்டன. இதனால் இத்துறைமுகங்களை ஐரோப்பியர் தமது தேவைகளுக்காகப்ப யன்படுத்தி வந்தனர். என்றாலும் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் கைத்தொழில் துறையை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பது இக்கட்டத்தில் நோக்கத்தக்கது. ஆயினும், இவர்கள் இத்துறையில் பெற்ற அனுபவம் போதாமையினால் அண்டை சமுதாயத்திடமிருந்து பெற்றுக் கொண்ட அத்துறையை அவர்களால் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. இதற்குப் பிந்திய ஆட்சியாளர்களிடம் காணப்பட்ட கைத்தொழில் பற்றிய திறமையின்மையே காரணம் என்பர். இவர்கள் குறுநில பிரபுத்துவ அமைப்பின் கீழ் செயற்பட்ட, விவசாயத்தை மட்டும் தொழிலாகக் கொண்டிருந்த பிரதேசங்களிலிருந்து வந்திருந்ததினால் நிலப் பிரபுத்துவ முறையை விட இவர்களிடம் வேறெந்தத் திறமையும் இருக்கவில்லை. குறைந்த முயற்சியில் பாரிய இலாபம் பெறும் நோக்குடையவர்களாகவே அவர்களில் பெரும்பாலானோர் காணப்பட்டனர். இதனால் அவர்கள் முஸ்லிம்களின் உற்பத்திப் பொருட்களில் தேவையுடையவர்களாக இருந்தனர். விஷேடமாக ஆயுதங்கள், குதிரைகள், ஆடைகள், தானியங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

முஸ்லிம்களின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதால் நாணயம் அச்சிட வேண்டிய கட்டாய நிலைக்குள்ளானார்கள். இதற்கு முன்னரெல்லாம் அவர்களிடம் நாணயப் பயன்பாடு அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஒரு ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் முறை அங்கு காணப்படவில்லை. பெரும்பாலும் அக்காலப் பகுதியில் ஐரோப்பாவில் பண்டமாற்றுப் பொருளாதார முறையே காணப்பட்டது. இந்த முறை சிரியாவில் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகக் காணப்பட்டது. எனவேதான், மத்திய கிழக்கில் வாழ்வதற்காக வேண்டி நாணயம் அச்சிட்டு புழக்கத்திற்குக் கொண்டு வந்தனர்.

இக்கட்டத்தில் கலாநிதி அஹ்மத் ஷலபி எடுத்தாளும் பின்வரும் கருத்து நோக்கத்தக்கது: 'ஐரோப்பாவின் வாழ்க்கை முறை சிலுவை யுத்தத்தினூடாகச் செழிப்படைந்தது. ஏனெனில், ஐரோப்பா முஸ்லிம்களது சிந்தனை கலாசாரம் போன்ற பல வாழ்வியல் அம்சங்களை அப்படியே எடுத்துக் கொண்டது. ஐரோப்பாவின் அடிவானம் மத்திய கிழக்கில் காணப்பட்ட மார்க்கத்தினுடனான தொடர்புகளையடுத்தே வெழுக்கலானது. ஐரோப்பிய சிலுவை வீரர்கள் தமது இலக்கை அடைவதில் தோல்வியடைந்தாலும் அதைவிடப் பெறுமதி வாய்ந்தவைகளைப் பெற்றுக் கொண்டனர். உண்மை என்னவெனில், ஐரோப்பா நினைத்த புனிதப் பிரதேசத்தைக் கைப்பற்றுதல் என்பதை விட அவர்கள் நினைத்துப் பார்த்திராத ஐரோப்பியத் தொழிற் புரட்சி நிறைவேறியதே இந்த இடத்தில் முக்கிய அம்சமாகும். கிழக்கின் செழிப்பான நிலையைக் கண்ட ஐரோப்பியரது கண்கள் அந்நிலையை அடையாமல் இமைக்கவே இல்லை'

சிலுவை யுத்தத்துக்கு வந்த பிரெஞ்சுக்காரர்களது ஆடைப் பழக்க வழக்கங்களில் அண்டை வீட்டார்களான முஸ்லிம்களது ஆடைப் பழக்க வழக்கங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்கள் தமது ஐரோப்பிய ஆடைகளைக் களைந்தெறிந்து விட்டு இப்பிரதேசங்களில் காணப்பட்ட தேசிய அம்சங்களைத் தமக்குரியதாக்கிக் கொண்டனர். உணவுப் பழக்க வழக்கங்களிலும் குடிபான அமைப்புக்களிலும் கிழக்குத் தேசத்தவர்களின் அமைப்பை எடுத்துக் கொண்டனர். சீனி, மசாலாத் தூள் பயன்பாட்டையும் பழகிக் கொண்டனர். தமது குடியிருப்புக்களை கிழக்குப் பிரதேச வீடமைப்புக்கு ஒத்ததாகவே உருவாக்கினர். அதே மாதிரியான கவர்ச்சிகளையும் ஆடம்பரங்களையும் விரும்பினர். வீட்டைச் சுற்றி முற்றம் வைத்தல், நீர்த்தடாகங்களை ஏற்படுத்தல் போன்ற பழக்க வழக்கங்களை தாமும் பின்பற்றினர்.
இது பற்றி ர்நnநெ யுஅ சுhலn'ள என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'மத்திய காலப் பகுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கெல்லாம் சிலுவை யுத்தங்களின் விளைவுகளே காரணமாகும். மார்க்கம் என்ற போர்வையில் பாப்பரசர்களின் விருப்பு வெறுப்புகளே பாதுகாக்கப்பட்டு வந்த நிலை மாறி, இனிமேல் அவ்வாறானதொரு நிலை ஏற்படாத அளவு மாற்றம் சமயத் துறையில் ஏற்பட்டது. சமூக, பொருளாதாரத் துறைகளைப் பொறுத்தவரைக்கும், ஐரோப்பாவில் காணப்பட்ட சமூக வேறுபாட்டுத் தன்மை அடியோடு இல்லாமலானது. அனைவருக்கும் கல்வி என்ற நிலை உருவானது. வர்த்தகம், கைத்தொழில் முன்னேற்றங்களைத் தொடர்ந்து தனிநாடுகளும் அரசுகளும் உருவாக்கப்பட்டன. கல்வி, கலாசாரத் துறையைப் பொறுத்தவரை, சிலுவை யுத்தங்களின் போது அரபிகளுடன் ஏற்பட்ட தொடர்புகளினால் பல தத்துவ சிந்தனையாளர்கள் தோற்றம் பெற்றனர். 'தஸவ்வுப்' என்ற சிந்தனையும் கலை என்ற உருவத்தைப் பெற்றது. பண்டைய மொழிக் கல்வி விருத்தியடையலானது. வரலாறு, புவியியல் போன்ற துறைகள் அதிக முக்கியத்துவமுள்ள கலைகளாக வளர்ச்சி கண்டன'

இதேபோல் சிலுவை யுத்தத்தின் விளைவுகள் பற்றி ர்யளெ Pயவெண என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'முஸ்லிம் உலகிற்கும் கிறிஸ்தவ உலகிற்கும் இடையில் ஏற்பட்ட சிலுவை யுத்தங்கள்தான் காலத்துக்குக் காலம் ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கான ஒரே காரணி எனலாம்'

குதிரை வீரர்கள் கவசம் அணியும் பழக்கத்தை சிலுவை வீரர்கள் அரபிகளிடமிருந்தே கற்றுக் கொண்டனர். அதே போன்று யுத்தத்தின் போது இவர்கள் கற்றுக் கொண்டவற்றுள் உள்ளகக் குளியலறை அமைப்பும் (யுவவயஉhநன டீயவாசழழஅ) ஒன்றாகும்.

சிலுவை யுத்தங்கள் கீழைத்தேய கலைகளைக் கற்கும் ஒரு குழுவை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ மதகுருக்கள் அரபு மொழி, இஸ்லாமிய கற்கைகள் என்பவற்றை எல்லாக் கோணங்களிலும் கற்றனர். ஒவ்வொரு விடயத்திலும் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்ற ஆய்வுகளையும் மேற்கொண்டனர். இதனால் கி.பி 1276ம் ஆண்டு கிறிஸ்தவ பாதிரிகளுக்கான கீழைத்தேய கலாபீடங்கள் நிறுவப்பட்டன. ஆயுத முனையில் முஸ்லிம்களுடன் போராடி வெல்ல முடியாது என்பதை நன்குணர்ந்து கொண்ட கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை சமய, சமூக, கலாசார, பொருளாதார ரீதியாக தோற்கடிக்கவே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தனர்.

முஸ்லிம்களிடையே கிறிஸ்தவ மதத்தைப் போதித்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சியில் வெற்றியடைவதற்காக கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிக் குழுக்களை ஏற்படுத்தினர். சிலுவை யுத்தம் தோல்வியடைந்தமையும், முஸ்லிம்களுடன் தொடர்ந்தும் போரிட இராணுவ ரீதியான பலம் குன்றியமையும் சிலுவை வீரர்களை சமாதானத்தின் பக்கம் சாய்த்தன. யுத்த நடைமுறைகள் மூலம் முஸ்லிம்களைத் தோற்கடிக்க முடியாது என்பதால், சமாதானம் என்ற அம்சத்தை தமது இலக்கை அடையப் பயன்படுத்தலாயினர். இந்த வகையில், பிரான்ஸிகன் (குசயளெiஉழn)இ டொமனியின் (னுழஅinழைn) போன்ற பாடசாலைகளும் 13ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. இது சிரியாப் பிரதேசத்திலேதான் அக்காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது பாடசாலையை பிரன்லீஸ் என்பவனும் இரண்டாவது பாடசாலையை டொம்னீக் என்பவனும் உருவாக்கினர்.

முஸ்லிம்களை கொள்கை ரீதியாக மாற்றுவதற்கான பிரசாரகர்கள் உடனடியாக அனுப்பப்படுவதற்கு முன்னர் நன்கு பயிற்றுவிக்கப்பட்டனர். இந்த வகையில், அவர்கள் செய்த முக்கிய செயற்றிட்டம்தான் அரபுமொழி, இஸ்லாமிய கற்கை நெறிகள் என்பவற்றை ஆழமாகக் கற்பித்தனர். இன்றைய நவீன காலம் வரைக்கும் இது ஒரு யாப்புக் கொள்கையாக கிறிஸ்தவர்களிடம் மாறியுள்ளது.

நிலப்பிரபுத்துவ முறை சிலுவை யுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்றாக இருந்தது. என்றாலும், இவ் யுத்தங்கள் முடிவுறும் போது குறுநில அதிகார ஒழுங்கமைப்பும் முடிவுக்கு வந்தது. குறுநில ஆட்சி முறையை விட நாடு என்ற அமைப்பில் உருவாகும் ஆட்சிதான் உறுதியானது, நிலையானது என்பதை இவ் யுத்தங்களின் பொது சிலுவை வீரர்கள் அறிந்து கொண்டனர். குறிப்பாக ஒரே இனத்தைச் சேராத, ஒத்துழைப்பற்ற இராணுவமும் அதனை வழிநடத்தும் தலைமைகளிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு முன்னால் படுதோல்வியடைவதைத் தெளிவாகக் கண்டனர். இதனால் கூட்டமைப்பை வலியுறுத்தும் நாடுகளை உருவாக்கலானார்கள். இவ்வாறு உருவான நாடுகள் (இன்றைய) ஐரோப்பிய ஒன்றியமாக மிளிரும் நிலை வரை வளர்ந்து வந்தன. இவ்வளர்ச்சி ஐரோப்பாவுக்கு இவ் யுத்தத்தின் விளைவாகவே கிடைத்தது என்றால் அது பிழையாகாது.
ஐரோப்பிய நில மானிய அமைப்புடன் தொடர்புடைய அம்சமான அடிமைத்துவ வாழ்க்கையை விட்டும் சமூகத்திலிருந்த ஒரு வர்க்கத்தினர் விடுதலை அடைந்தனர். நிலமானிய முறையில் அதிகாரம் செலுத்தி வந்த பிரபுக்கள், தமது நிலங்களை விவசாயத்தில் பயன்படுத்துவதற்காகப் பொருளாதார வசதியற்ற விவசாய உழைப்பாளிகளை அடிமைகளாகவே வைத்திருந்தனர். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கப் பெறாத இவ்வடிமைகள் தொடர்ந்தும் ஏழைகளாகவே இருந்து வந்தனர். இவ்வாறு தாழ்ந்த சமூக நிலையிலிருந்தவர்கள் சிலுவைப் படைகளில் இணைவதன் மூலம் விடுதலையைப் பெற்றுக் கொண்டனர். இந்த நிலை அடிமைத் தளையிலிருந்தவர்கள் விடுதலை பெறலாம் என்ற ஒன்று இருக்கிறது என்ற மனோநிலையைப் பரவலாக ஏற்படுத்தலானது.

இன்னொரு புறத்தில், சிலுவைப் படையில் அங்கம் வகித்த சிப்பாய்கள் முஸ்லிம்களின் படையில் அடிமைகள் என்ற ஒரு குழுவே இல்லாதிருந்ததை அவதானித்தனர். கிழக்கில் அடிமைத் தளையற்ற ஒரு சிந்தனைப் பாங்கையும் சமூக நிலையையும் அவர்கள் கண்டனர். ஆனால், ஐரோப்பிய சமூகத்தில் விவசாய உழைப்பாளிகள் கொத்தடிமைகளாக இருந்தனர். இந்த நிலையில் நிலச்சுவாந்தர்களான பிரபுக்கள் தமது சில நிலத் தொகுதிகளை விற்பதன் மூலம் உழைப்பாளிகள் சிலரை சிலுவைப் படையில் இணைத்தனர். சில சந்தர்ப்பங்களில் பிரபுக்களது அதிகாரத்தின் கீழிருந்த நிலங்களில் வசித்த குடியிருப்புக்கள் அப்படியே விற்கப்பட்டன. இவ்வாறு சுதந்திர நிலை தோன்றுவதற்காகப் பல நகரங்கள் கூட விற்கப்பட்டன. இதனால் பல சுதந்திர நகரங்கள் உருவாகின. இந்நகரங்களுக்கும் பிரான்ஸ் மன்னனுக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படலாயின. இதனால் அடிமைத்தளை என்ற நிலை ஐரோப்பிய விவசாயிகள் விடுதலையானார்கள்.

முதலாவது சிலுவை யுத்தத்தின் போது முஸ்லிம்கள் தமது எதிரிகள் பற்றிய சரியான தகவலின்மையின் விளைவை நன்கு அவதானித்தனர். அதேவேளை, முஸ்லிம்கள் பற்றிய முழுத் தகவல்களுடனும் எதிரிகள் செயற்படலாயினர். இதனால் ஏற்பட்ட பல விபரீதங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்றுணர்ந்த முஸ்லிம்கள் சிலுவை வீரர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டனர். இதனால் சிலுவை வீரர்கள் பற்றிய சிறிய, பெரிய விடயங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டனர். சிலுவை வீரர்கள் இருக்குமிடமெல்லாம் முஸ்லிம்களின் தகவல் சேகரிப்பாளர்கள் இருந்தனர். உன்னிப்பாக நிலைமைகளை அவதானித்த இவர்கள், சேகரித்த தகவல்களினூடாக முஸ்லிமகள் செயற்பட்டதினால்தான் பிற்பட்ட காலங்களில் சிலுவை வீரர்கள் முஸ்லிம்களிடம் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது என முஹம்மத் குர்த் அலீ தனது 'இஸ்லாமும் அறபிய நாகரிகமும்' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

சிலுவை யுத்தத்தின் தாக்கமாக கிறிஸ்தவமும் கிறிஸ்தவர்களும் இத்தகைய பல்வேறு சாதக விளைவுகளை அடைந்து கொண்ட அதேவேளை, உயிரிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, போன்ற வேறு சில தாக்கங்களையும் அவர் சந்திக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்குப் புறம்பாக, சிலுவை யுத்தம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்கள் மிக அதிகமாகும். எண்ணற்ற பாதக விளைவுகளையே அடைந்து கொண்டனர். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்:

சிலுவை யுத்தங்கள் கிறிஸ்தவ உலகத்தினால் முஸ்லிம் உலகுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் என்பதனால், முஸ்லிம்கள் நிறையவே பாதிப்புக்குள்ளானார்கள். அதேபோல் ஐரோப்பியரும் பலவிதமான பாதிப்புகளைச் சந்தித்தனர் என்பதனை மறுப்பதற்கில்லை. என்றாலும், தம்மை நோக்கி வந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கும் நடவடிக்கையில் இறங்கிய முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்:

கிழக்கு இஸ்லாமிய உலகில் சிலுவைப் படையினர் சுமார் இரண்டு நூற்றாண்டுகள் தங்கியிருந்தனர். இக்காலப் பகுதியில் இவர்கள் இஸ்லாமிய கேந்திரஸ்தலமாக விளங்கிய பல நகரங்களை அழித்து நாசமாக்கி சின்னாபின்னமாக்கினர். இதற்குதாரணமாக அன்தாகியா, திரிப்போலி, அக்கா போன்ற நகரங்களைக் குறிப்பிடலாம். இஸ்லாமிய நாகரிகத்தின் கேந்திரஸ்தலங்களாக விளங்கிய நகரங்கள், மத்திய காலப்பகுதியில் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்பட்டதுதான் சிலுவை வீரர்கள் தோல்வியடையக் காரணமாய் அமைந்தது என சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். ஏனெனில், சிலுவை வீரர்களின் நாகரிக அழிப்பு எனும் நாசகார நடவடிக்கைகளிலிருந்து தமது நகரங்களைக் காத்துக் கொள்வதற்காக முஸ்லிம்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். சிலுவை வீரர்களிடமிருந்து வரும் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்தலாயினர். தமது வளங்கள், சக்திகள், மயற்சிகள் அனைத்தையும் அதற்காகச் செலவளித்து அர்ப்பணம் செய்தனர். ஹிஜாஸ், எகிப்து, ஈராக், சிரியா போன்ற பிரதேசங்களையும் மற்றும் மொரோக்கோ, ஸ்பெய்ன் போன்ற நகரங்களையும் அழிப்பதற்கு சிலுவைப் படையினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டதோடு, அவர்கள் அறபுத் தேசியங்களிலிருந்தும் துடைத்தெறியப்பட்டனர். எனினும், பல நூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட இஸ்லாமிய நாகரிகத்தின் செழிப்பைப் பறைசாற்றும் பல நகரங்களை அந்த நாசகாரக் கும்பல் அழித்து விட்டது.

சிலுவை யுத்தங்களின் விளைவாக முஸ்லிம்கள் எதிர்கொண்ட அடுத்த அபாயம் காலனித்துவம் பற்றிய ஐரோப்பியரின் விழிப்புணர்ச்சியே. இந்த யுத்தங்களின் போது ஐரோப்பியர் அவ்வப்போது காலனித்துவ அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர். ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள பிரதேசங்களை தமது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்து அப்பிரதேசங்களில் காணப்படும் வளங்களையும் செல்வங்களையும் தமது பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற சிந்தனைப் பாங்கை இவ் யுத்தம் ஐரோப்பியர் உள்ளங்களில் ஏற்படுத்தியது. இந்தக் காலனித்துவ அவா இன்று வரையும் நடைமுறையில் இருப்பதைக் காணலாம். இதனால் முஸ்லிம்களின் வளங்களும் பொருளாதாரங்களும் சுரண்டப்படுகின்றன. அதற்கு இடமளிக்கப்படாதவிடத்து அவை அழித்து நாசமாக்கப்படுகின்றன.
சிலுவை யுத்தத்தின் போது முஸ்லிம் உலகு நேரடியாக பல நூற்றாண்டுகள் விட்டுக் கொடுக்கும் தன்மையைக் காணவேயில்லை. இக்காலப்பகுதியில் உலகம் முழுவதும் முரட்டுத்தன்மையே முதலிடம் வகித்தது. இதனால் சகிப்புத்தன்மை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நிலை உருவானது. சிலுவைப் படையினர்தமது மதத்தைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை. அதனால் அவர்களிடம் அடாவடித்தனம், அட்டூழியம், அநியாயம் என்பனவே குடிகொண்டிருந்தன. சிலுவை யுத்தங்களுக்கு முன்னாலும் உலகத்தில் அநியாயங்கள் நடைபெற்றிருந்தாலும் இக்காலப் பகுதியில் நடைபெற்ற அநியாயங்களைப் போல் வேறெந்தக் காலங்களிலும் அநியாயம் நடைபெற்றிருக்க முடியாது.

இன்றைய நவீன காலத்தில் நாம் காணும் மேற்கும் கிழக்கும் மோதிக் கொள்ளும் நிலை அன்றைய சிலுவை யுத்தத்தின் தொடரே. விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை இல்லாத ஒரு தலைமுறையை கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட சிலுவை யுத்தங்களே உலகுக்கு ஈன்றுகொடுத்தன. கிறிஸ்தவ பாதிரிகளும் மதத் தலைவர்களுமே அன்று கிழக்குக்கெதிரான யுத்தத்தைத் த}ண்டிக் கொண்டிருந்தனர். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு பற்றி பிரசாரம் செய்ய வேண்டிய இவர்கள் யுத்தம் செய்யத் தூண்டியதன் விளைவையே இன்றைய உலகம் அனுபவித்து வருகிறது. அன்றைய பிரசாரங்களும் தூண்துல்களும் உள்ளங்களில் விதைத்து விட்ட போராட்ட விதைகள் இன்று பெரும் விருட்சங்களாக வளர்ந்து அநியாயமான கொலை வெறி நடவடிக்கைகளில் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஈடுபட வைத்துள்ளன.
ஆயுதரீதியாகத் தோல்வியடைந்த கிறிஸ்தவ உலகு, முஸ்லிம்களுக்கெதிரான தனது போராட்ட நடவடிக்கைகளை காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டு வருவதைக் காணலாம். உருவமைப்பை மாற்றி மாற்றி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமாகச் செயற்பட்டு வரும் இந்தக் கிறிஸ்தவ நாடுகள் பணத்தைச் செலவளித்து இந்நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் பின்னிற்பதில்லை. இதற்காக ஆண்டு தோறும் பல மில்லியன்களை அவை செலவு செய்கின்றன.

இஸ்லாத்திற்கெதிரான இத்தகைய சூழ்ச்சிகளிலிருந்தும், சதித்திட்டங்க ளிலிருந்தும் தம்மையும் தமது சமயம், சமூகக் கட்டமைப்பு என்பவற்றையும் பாதுகாத்துக் கொள்வதும் அதற்காகப் பாடுபடுவதும் உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் அனைவரதும் கண்டிப்பான சமயக் கடமையாகும். இதற்காக அவர்கள் தமது உள்ளகப் பிளவுகளையும், சுயநல உணர்வுகளையும் முற்றாகக் களைந்து முழுமையான விட்டுக்கொடுப்புடன் செயலாற்ற முன்வருவதும் அவசியமாகும்.

சிலுவைப் போர், கிறிஸ்தவர்களின் தற்காப்புக்காக அன்றி வெறும் மத நோக்கங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்பதை பிரான்ஸ் எழுத்தாளர் ஜான் ஜாக் ரூசோ இவ்வாறு குறிப்பிடுகின்றார்: 'சிலுவைப் போரில் ஈடுபட்டவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்லர். மாறாக, அவர்கள் மதத் தலைவர்களின் படைகள் ஆவர். தேவாலயங்களின் பிரஜைகள் ஆவர். ஆன்மீக தேசத்திற்காக (தேவாலயத்திற்காக) அவர்கள் போரிட்டார்கள். அதற்கு எவ்வாறு நிகழ்காலத் தேசத்தின் சாயம் பூசினார்கள் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.
ஆகவே, சிலுவைப் போர்களுக்குத் தலையாய காரணம் மத நோக்கமே தவிர, நவீன உலகைப் படைக்கும் நோக்கமல். இதை விட பெர்நாட் டீ வைஸி தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 'சிலுவைப் போர் நடைபெற்ற அந்தப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே எப்போதும் சமாதானமும் அமைதியுமே நிலவி வந்தன. எந்தளவுக்கென்றால், நான் அப்பகுதியில் பயணம் செய்து, எனது ஒட்டகம் வழியில் எங்கேனும் காணாமல் போய்விட்டால், அந்த இடத்திலேயே நான் என்னுடைய உடைமைகள் அனைத்தையும் எந்தக் காவலும் இல்லாமல் விட்டு விட்டு வந்தால் கூட, வேறொரு ஒட்டகத்தை நான் வாங்கிக் கொண்டு வரும் போது, அந்த உடைமைகள் அனைத்தையும் அதே இடத்தில் நான் அப்படியே காண முடியும்.

அவற்றை யாரும் கைவைத்தும் பார்த்திருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு அங்கு பாதுகாப்பான சூழ்நிலை இருந்தது'
ஆனால், பைத்துல் முகத்தஸுக்குச் சென்ற கிறிஸ்தவ யாத்திரீகர்களிடம் முஸ்லிம் ஆட்சியாளர்கள் மோசமாக நடந்து கொண்டதும், பைஸாந்திய கிறிஸ்தவர்களின் உடைமைகளை சல்ஜூக்கியர் கொள்ளையடித்ததும்தான் சிலுவைப் போர் மூளக் காரணம் என்று, சில கிறிஸ்தவ அறிஞர்களும் அவர்களின் சிந்தனை வழி தோன்றிய அறிவற்ற முஸ்லிம்களும் எழுதி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக