புதன், 20 ஜூலை, 2011

புனித மக்காவில் கற்பழிப்பும் படுகொலையும்: சவூதியின் மற்றொரு கொடூரம்



புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு வந்திருந்த 15 வயது அல்ஜீரியச் சிறுமி சாரா காதிப், கடந்த சில தினங்களுக்கு முன் மக்காவிலுள்ள நப்ரஸ் ராஷிதிய்யா ஹோட்டலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


'நாம் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு வந்தோம். வெளியில் சென்ற எமது மகள் இரவாகியும் திரும்பாமையால் அது தொடர்பில் ஹோட்டல் அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் அவர்கள் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என சாராவின் தந்தை காதிப் கவலை தெரிவிக்கின்றார்.

'ஹோட்டல் அதிகாரிகள் குறித்த நேரத்தின் பின் அலட்சியமான தேடல் முயற்சிகளை மேற்கொண்டனர். ஹோட்டல் பணியாளர்கள் மூவர் எனது மகளைத் தேடிக் கொண்டு, 16ஆம் மாடிக்குச் சென்றனர். 16ம் மாடி பாவனையில் இல்லாத ஒரு பகுதி. அங்கு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. சற்று நேரத்தின் பின், 16ம் மாடியிலிருந்து ஏதோ ஒன்று கீழே விழும் சத்தம் எமக்குக் கேட்டது. கீழே பார்த்த போது எமது மகள் சடலமாக விழுந்து கிடப்பதைக் கண்டு நாம் பதறிவிட்டோம்' என காதிப் மேலும் குறிப்பிட்டார்.

சாராவின் சடலம் கீழ்த்தளத்தில் கண்டெடுக்கப்பட்டது. தாமதித்து அங்கு வந்த பொலிஸ் பாதுகாப்புப் படையினர் சடலத்தைக் கைப்பற்றினர்.

மக்காவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அப்துல் முஹ்சின் குறிப்பிடுகையில், 'இந்த 15 வயதுச் சிறுமி கற்பழிக்கப்பட்டிருப்பதுடன், 16ம் மாடியிலிருந்து கீழே விழுந்தமையின் காரணமாக அவளது உடலுறுப்புகள் சேதமடைந்துமுள்ளன' என்றார்.

எவ்வாறாயினும், நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ள அரபி ஒருவரினாலேயே இந்த கற்பழிப்பு நடவடிக்கை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சவூதி அரசாங்கம் இந்த அல்ஜீரியச் சிறுமியின் படுகொலை தொடர்பிலான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், சிறுமியின் உடலை அவர்களது நாட்டிலுள்ள குடும்பத்தாரிடத்தில் திருப்பி அனுப்பவும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான அல்ஜீரிய யாத்திரிகர்கள், நப்ரஸ் ராஷிதிய்யா ஹோட்டல் முன்பாகத் திரண்டு, இக்கொடூரப் படுகொலையின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனவும், அதற்கான விரிவான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும், சிறுமியின் உடலை தாய்நாட்டுக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சவூதி அரசுக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிதல்ல.

சவூதி மன்னர்கள் தாம் அனுபவிக்கும் வெட்கக்கேடான உல்லாசங்களையும் சல்லாபங்களையும் தமது குடிமக்களும் அனுபவிக்க வேண்டுமென விரும்புகின்றது.

அதற்காகவே இத்தகைய கொடூரங்களுக்கு அனுமதியும், அவற்றைச் செய்வோருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கி, பழியையும் அவமானங்களையும் பாதிக்கப்பட்டோர் மீது போட்டு விடும் கைங்கரியத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையின் சிங்களப் பெண்மணியொருவருக்கு ஆணிகள் அடித்துத் துன்புறுத்திய கொடூரமான அரபுக் குடும்பத்தைக் கைது செய்வதை விட்டு விட்டு, குறித்த பெண்மணி மனநலமற்றவர் என்று வாதிட்டது சவூதி அரசாங்கம்.

இப்போது, அல்ஜீரியச் சிறுமியைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிப்பதை விட்டு விட்டு, அவள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் எனக் கூறி அச்சிறுமியின் குடும்பத்தை அவமானப்படுத்துகின்றது அவ்வரசாங்கம்.

குறித்த கொலையுடன் தொடர்புடையவர்களைத் தேடுவதிலோ அவளது கொலை தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதிலோ அக்கறை காட்டாது, அவள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்று சர்வதேச உலகுக்கு அறிக்கை விட்டது அவளது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் அவமானமாகும்.

நீங்கள் சவூதியில் இருக்கும் போது உங்களது மனைவியோ பிள்ளைகளோ தொலைந்து போனால், பொலிசாரிடம் முறையிடாதீர்கள். ஏனெனில், அந்த பொலிசார்தான் அவர்களைக் கடத்திக் கற்பழித்து கொலையும் செய்திருப்பார்கள்.

சவூதிக்குள் நுழைவது மிகவும் பயங்கரமான ஓர் அனுபமாக மாறும் காலம் தொலைவிலில்லை.

சவூதியில் மன்னராட்சி முறையும், அவ்வாட்சிக்கு அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆதரவும் இருக்கும் வரையில் சவூதியின் நிலை இவ்வாறுதான் இருக்கும்.

சவூதி மன்னர்களினதும் அங்குள்ள ஆடம்பர மோகிகளினதும் பிடியிலிருந்து எமது புனித ஸ்தலங்களான மக்காவையும் மதீனாவையும் நாம் மீட்டெடுக்க வேண்டும்.

அமெரிக்காவின் பிடியிலிருந்து ஈரானை மீட்டெடுத்த ஈரானியர்களுக்கிருந்த தேசப்பற்றும் மார்க்கப்பற்றும், அமெரிக்காவின் பிடியிலிருந்து கியூபாவை மீட்டெடுத்த கியூபியர்களுக்கிருந்த தேசப்பற்றும் சமயப்பற்றும் சவூதி குடிமக்களிடம் இல்லையென்பதனால், சவூதியைச் சுத்திகரிப்பதற்கான புரட்சியொன்று சவூதியில் உருவாவதற்கான சாத்தியங்கள் இல்லை.

ஏனெனில், சவூதி மக்களை நியாயமாகவும் சமய அடிப்படையிலும் சிந்திக்க விடாது தடுத்து ஆடம்பரங்களிலும் களியாட்டங்களிலும் ஆபாசப் படங்களிலும் அம்மக்களை திட்டமிட்டு மூழ்க வைத்துள்ளது சவூதி அரசாங்கமும் அதன் ஆலோசகர் அமெரிக்காவும்.

எனவே, சவூதியை சுத்திகரிப்பதற்கான புரட்சிகள் அந்நாட்டுக்கு வெளியிலிருந்துதான் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அந்தப் புரட்சியை இமாம் மஹ்தி (அலை) அவர்கள் வந்துதான் ஆரம்பித்து வைக்க வேண்டும் என நாம் காத்திருக்க வேண்டியதில்லை.

ஏனெனில், நாம் முஸ்லிம்கள். எமது புனிதஸ்தலங்களைப் பாதுகாக்கவும் தூய்மையாக வைத்திருக்கவும் எமக்கு முழு உரிமையுண்டு.

மக்காவும் மதீனாவும் சவூதியின் சொத்துகளல்ல. அது உலக முஸ்லிம்களின் சொத்து, உலக முஸ்லிம்களின் உயிர் நாடி.
Posted by Hafis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக