A/L உயர் தர மாணவர்களுக்கான கலை, வர்த்தக பாடங்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஓர் அங்குரார்ப்பணக் கூட்டம்
இன்று (July 3 2011) காலை 9.00 மணியளவில் சகோதரர் அல்ஹாஜ் பாரி அவர்களது இல்லத்தில் இனிதே இடம்பெற்றது. மேற்படி கூட்டத்துக்கு தலைமை வகித்த அஷ்ஷெய்க் நூருல்லாஹ் நளீமி இந்த பிரத்தியேக வகுப்பின் தேவையையும் அவசியத்தையும் முக்கியத்துவப்படுத்திப் பேசினார். எமது பிராந்திய முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் பலர் கலந்து கொண்டமை கூட்டத்தின் சிறப்பம்சமாகும். இதன் போது உரையாற்றிய அதிபர்கள் பலரும் கூட இப்படியானதொரு தனியார் நிறுவனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலேயே தமது உரைகளை அமைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் ஏனைய நிறுவனங்களைப் போல் இடையில் மூடப்படாமல் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென்பதே கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பெரும்பாலானோரின் அபிலாசையாக இருந்தது. அல் ஹிமா இன்ஸ்டிடியூஷனின் நீடித்த வாழ்வுக்கு எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக