சனி, 31 டிசம்பர், 2011

சமூகப் புணரமைப்பு: இரு குறிப்புக்கள்

பாலிகா அதிபருக்கு மாற்றம்.

கஹட்டோவிட்ட பாலிகா பாடசாலையின் அதிபர் ஜனாப் புஹாரி உடயார் அவர்கள் உடனடியாக மாற்றம் பெற்றுச் செல்வதாக நேற்று (30.12.2011) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

திங்கள், 26 டிசம்பர், 2011

K.P. கோத்திரத்தின் ஒன்றுகூடல்

எமது கிராமத்தின் மதிப்பு மிக்க கோத்திரமான K.P. கோத்திரம், அதன் நான்கு தலைமுறையினரையும் கூட்டி, 25.12.2011 ஞாயிரன்று ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தது. பரந்தும் பிரிந்தும் செல்லும் குடும்பங்களை ஈர்த்து, ஒன்றிணைக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்த கோத்திரத்தின் 38 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். K.P. கோத்திரத்தின் முதலாவது தலைமுறை உறுப்பினர்களான, K.P. ரவூப் அவர்களின் பிள்ளைகளும் மருமக்களும் பிரதம அதிதிகளாக இங்கு கௌரவிக்கப் பட்டனர்.

சனி, 24 டிசம்பர், 2011

அல் அக்ஸா தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள்

* கி.பி. 636   இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களால் ஜெரூஸலம் கைப்பற்றப்படுதல் மற்றும் அவர்களுடைய மஸ்ஜித் கட்டப்படுதல்

* கி.பி. 685 உமையா கலீபா

வியாழன், 22 டிசம்பர், 2011

'பாலிகா'வுக்குக் கிடைத்த அரச உதவிகள் நழுவிச் செல்லவில்லை....

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா பாடசாலையில் கட்டப்பட்டு வருகின்ற மலசல கூடங்கள், கட்டுமானப் பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளன.

இதன் பணிகளை

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கண்மூடித்தனமான பின்பற்றல்.....

ஒரு தாயும் ஒரு மகளும் சமையலறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். 'சொஸேஜஸை' கழுவி சுத்தப்படுத்திய தாய், அதனை சமைக்கும் பாத்திரத்தினுள் இடும் போது, இரு நுனிகளையும் வெட்டி விட்டாள்.

மகள் கேட்டாள்

சனி, 17 டிசம்பர், 2011

பிரஷர், உப்பு, பொட்டாசியம்


'பிரஷரா?

 உணவில் உப்பைக் குறை.'

 ஆம் பிரஷருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?

உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na)

கல்லறை வாசகங்கள்


ஒரு கல்லூரிப் பட்டமளிப்பு விழாவின்போது வைரமுத்து உதிர்த்த வைர வரிகள் சிலதை இதோ உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:

"இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."

வெள்ளி, 16 டிசம்பர், 2011

சிரிப்பு (கவிஞர் வைரமுத்து)


(எங்கே னண்பர்களே நீங்களும் ஒரு முறை சிரித்துத்தான் பாருங்களேன்!)

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

(இந்த ஹைக்கூ எப்படியென்று பாருங்கள்!)

தன் பசியைத் தணிக்க
பிறன் பசியைத் தீர்ப்பவள்
விபச்சாரி!

ஸீராவைக் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு) கற்பதன் அவசியம் - (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்)


முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.

 நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர்

வியாழன், 15 டிசம்பர், 2011

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி


(இஸ்லாம் / இஸ்லாமிய நாகரிகம் - உயர் தரம்)


 அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்கஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர்
குர்ஆனின் மொழியாகப் பரிணமித்துஇஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சியோடு இஸ்லாமியக் கலாஞானங்களின் மொழியாக மாறியது.
இந்தவகையில் இஸ்லாத்தின் பரவலோடுஅதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலெல்லாம் பரவிய அரபு மொழியானது அப்பகுதிகளில் ஏற்கனவேவழக்கிலிருந்த மொழிகளில் அதன் செல்வாக்கைப் பதித்தது.

முஸ்லிம்களால் பாரசீகம் கைப்பற்றப்பட்டபோது

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

9A சித்தி பெற்ற 9 மாணவர்களுக்கு இலவச உம்றா யாத்திரை!

கடந்த 2010 ஆம் வருட ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற ஒன்பது மாணவர்களுக்கு இலவசமாக புனித உம்றா யாத்திரைக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியும் மனிதர்கள்!

எனது வீட்டுக்கு அருகில் பராமரிக்கப்படாத ஒரு காணி உண்டு. இதன் வேலிக்கு நடப்பட்டிருந்த இரண்டு பஞ்சு மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அத்துடன் இவற்றின் கிளைகள், எனது வீட்டுக் கூரைக்கு மேலாக படர்ந்து, எந்த நேரம் வீட்டைப் பதம் பார்த்து விடுமோ என அஞ்சுமளவுக்கு கிளைகளைப் பரப்பியிருந்தன. போதாக் குறைக்கு, ஒரு மரத்தின் தண்டின் அடிப்பாகம் உக்கியும் போயிருந்தது.

இந்த நிலையில்,

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கவலைக்கிடமான நிலையில் அத்தனகல்ல தொகுதி முஸ்லிம்களின் கல்வி நிலை!

கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகள், ஏனைய சிங்கள பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது, கல்வித் துறையில் மிகவும் பின்தங்கி அதல பாதாளத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.