ஞாயிறு, 1 மே, 2011

கட்டாய தலைமைத்துவப் பயிற்சி

பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி கட்டாயமாக்கப் படவுள்ளது.

இந்தப் பயிற்சி நெறியின் ஒரு பகுதியாக 'உடல் மற்றும் தேகாரோக்கியப் பயிற்சி' என்ற அம்சமும் இடம்பெறுகிறது.

வியாழன், 28 ஏப்ரல், 2011

'யஹபத் பாஸல'

இது, 'மாணவர்களுக்கு சகல வசதிகளுடனும் கல்வியயை வழங்குவதற்காக' என்ற அறிவிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்ற புதிய கல்வி முறை.

இதன்படி, நாட்டில், 'யஹபத் பாஸல' என்று அழைக்கப்படும் 1000 பாடசாலைகள் இருக்கும்.

ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட அனைவரும் இந்தப் பாடசாலைகளிலேயே படிக்க வேண்டும்.

இந்தப் பாடசாலைகளில் இஸ்லாம், சைவம், பௌத்தம், கத்தோலிக்கம் என்ற வேறுபாடுகளோ, அல்லது ஆண் , பெண் என்ற வேறுபாடுகளோ இருக்காது. அனைவரும் ஒன்றாகவே கற்க வேண்டும்.

எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டி ஏற்படும்.

அத்துடன், எமது ஊர்ப் பாடசாலைகள் வெறும் Primary பாடசாலைகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

பருவ வயது மாணவ, மாணவிகள்தான் வெளியே செல்ல வேண்டி ஏற்படுகிறது.

இது எமக்கு ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளையும், பதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளையும் மற்றும் பொருளதாரம் சார்ந்த பிரச்சினைகளையும் நிச்சயமாகத் தோற்றுவிக்கும்.

வளர்ந்து வருகின்ற எமது ஊரின் கல்வியில், அரசின் இந்தத் தீர்மானங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்?

சற்று யோசியுங்கள்......................!
 

சனி, 23 ஏப்ரல், 2011

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதெப்படி?

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. "அம்மா.." என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது.

சீரழிக்கும் சீரியலும் சினிமாவும், சீரழியும் முஸ்லிம் சமூகமும்.

‘(நபியே!) தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும், தங்களது வெட்கஸ்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் கூறுவீராக!’ (24:31)
மனிதர்களால் உணரப்படாத மற்றும் அதிகமாக புரியப்படுவதுமான பெரும் பாவங்களுள் ஒன்றான இந்த சீரியல், சினிமாவைப் பற்றி

இஸ்லாமிய சினிமா

சினிமா என்பது நவீன கதை சொல்லும் வடிவம். மக்கள் கலையாகிப் போன ஒரு தனியான மொழி. கலைகளை நோக்கிய உள்ளீடு, அதன் இயல்புக்கும், உள்ளிடுவோரின் உணர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு பண்புகளுடனான வெளியீடுகளாக உலகை அலங்கரிக்கும் சூழலில், சினிமா எனும் பரந்த களத்தில் ஊன்றப்படும் முரண்பட்ட விதைகளிலிருந்தும் வேறுபட்ட இயல்புக் கலவைகள் உயிர்ப்பெடுப்பது இயல்பானதாகும். மாற்றுச் சினிமா தொடர்பான கதையாடல்களில் இஸ்லாமிய சினிமா என்ற எண்ணக்கரு முகிழ்ப்பதும் அது போன்றதே.