ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ரமழான் 27ம் நாள் இரவுதானா லைலதுல் கத்ர்?


கேள்வி:
சில மக்கள் ரமளானின் மற்றைய இரவுகளை விடவும் ஒரு குறிப்பிட்ட இரவை லைலதுல் கத்ர் என,பல வகையான வணக்க வழிபாடுகளில் மூலம் கழிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இது சரியான வழிமுறையை சேர்ந்தது தானா ?


பதில்:
இல்லை, இது சரியான வழிமுறையை சேர்ந்தது அல்ல, நிச்சயமாக லைலதுல் கத்ர் இரவானது மாறிக்கொண்டிருக்கும். ஹதீதுகளில் சுட்டிக்காட்டியது போல் அது 27 ம் இரவாகவும் இருக்கலாம், ஏனைய இரவுகளில் ஒன்றாகவும் இருக்கலாம்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் " அந்த குறிப்பிட்ட வருடத்தில் லைலதுல் கத்ர் 21 ம் இரவில் அருளப்பட்டது ". இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஒரு குறிப்பிட்ட இரவில் வணக்கங்களுக்காக நிற்பதும் அல்லது அவர்கள் ஓர் இரவைக் கருதி மற்ற இரவுகளில் இருந்து வித்தியாசப் படுத்தி வணக்கங்களுக்காக நிற்பதும் மனிதர்களுக்கு உகந்ததல்ல. மாறாக , கடைசிப் பத்து இரவுகளிலும் கடுமையாக முயற்சி செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலாக இருக்கிறது. கடைசி பத்து நாட்கள் வந்தடைந்து விட்டது என்றால் அவர் தனது இடுப்புப் பட்டியை இறுக்கமாக கட்டிக் கொள்வார்கள், தனது குடும்பங்களை எழுப்பி விடுவார்கள், அவற்றை வணக்க வழிபாடுகள் மூலம் கழித்து உயிர்ப்பிப்பதை வழமையாக்கி இருந்தார்கள்.

எனவே, கடைசி பத்து நாட்களிலும் கடுமையாக முயற்சி செய்வது  விவேகம் உள்ள மூமினுக்கு உகந்ததாகும். ஏனெனில் அந்த வெகுமதிகள் அவனை விட்டும்  தவறி விடாமல் இருப்பதற்காக ஆகும்.    

ஷெய்க் இப்ன்  அல் -உஸைமீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக