வியாழன், 11 ஆகஸ்ட், 2011

தண்ணீரில் இயங்கும் கார் இலங்கை வாலிபர் சாதனை !


பெட்ரோல் டீசல் விலைகளை வைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரசாங்கம் கைவைத்து பூச்சாண்டி காட்டும் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இலங்கை வாலிபரான 'துஷார ஹெதிரிசிங்க " சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார் .

ஆம் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார் இந்த இளைஞர் தமது சோதனை முயற்சியாக 3 லீடர் தண்ணீரை எரிபொருளாக பயன் படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இந்த காரில் இல்லை என்பதாகும் .

வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முற்சிகளை மேற்கொண்டும் இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்ததாக தெரிவிற்கும் துஷாரவிற்கு உள்நாட்டில் இவரை ஊக்குவிக்கவும் இந்த தொழிநுட்பத்தை மேம்படுத்தவும் யாரும் முன்வராதது வேதனையான உண்மையாகும் .

இவரது முயற்சி வெற்றி பெறவும் இந்த தொழிநுட்பம் மிக சீக்கிரமாக மக்கள் பாவனைக்கு கிடைத்திடவும் துஷாரவை வாழ்த்திடுவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக