ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ரமழானுக்குப் பின்னரும் இபாதத்துக்களைத் தொடர சில வழிமுறைகள்

1. நேர்வழியில் நிலைத்திருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்ள
     வேண்டும்.
    "எங்கள் இறைவா! நீ நேர்வழி காட்டியதன் பின்னர் எமது உள்ளத்தைப் பிறழச்
     செய்து விடாதே; எமக்கு உன்னிடமுள்ள அருளைக்    
     கொடையாகத் தருவாயாக; நீ மிகப் பெரும் கொடையாளன்" (ஆலு இம்ரான்: 8)
2. நல்ல மனிதர்களுடனான உறவை அதிகரித்தல்; பொதுவாகவும் தனிப்பட்ட
     முறையிலும் இஸ்லாத்தைப் பற்றிய 
    சிந்தனைகளைப் பெற்றுக் கொள்ளல்.
3. நல்லடியார்களின் வரலாற்றக் குறிப்பாக ஸஹாபாக்களின் வரலாற்றைக்
    கற்றல்; இது உள்ளத்தில் உயர்ந்த இலக்கைத் 
    தோற்றுவிக்கும்.
4. அதிகமன உபதேசங்களைச் செவிமடுத்தல்
5. அடிப்படையான பர்ழுகளில் ஆர்வம் கொள்ளுதல் 
6. சிறிய அள்வாயினும் நபிலான வணகங்களைத் தொடர்ந்து செய்ய முயலுதல்
7. அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுதலும் அதனை மனனம் செய்தலும்
    மனனித்தவற்றைத்  தொழுகைகளில் ஓதுதலும்
8. அதிகம் திக்ர், இஸ்திஃபார்களில் ஈடுபடுதல். இது ஈமானை அதிகரிப்பதுடன்
    உள்ளத்தையும் உயிர்ப்பிக்கும்.
9. உள்ளத்தைப் பாதிக்கும் மோசமான நண்பர்கள், மோசமான காட்சிகள்,
    நிகழ்வுகள் முதலானவற்றிலிருந்து முழுமையாகத் 
    தூரமாகுதல்.
10. அடிக்கடி தௌபா செய்து கொள்ளுதல்

நன்றி, பயணம் (03ம் இதழ் 2011)

1 கருத்து: