ராகுல் காந்தி குடிசைகளில் நுழைந்து கூழ்
குடித்துவிட்டு போஸ் கொடுத்த போதிலும், காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் சில
மாதங்களுக்கு முன்பு மரண அடி கிடைத்தது.
அதே மரண அடி இலங்கையில்
ராஜபக்சேவுக்கு கிடைத்திருக்கிறது.
லட்சக்கணக்கான தமிழச்ச்சிகளின் தாலிகளைப் பறித்தெடுத்து, பொட்டுகளை அழித்தெடுத்த சுவடை மறைக்க பேரம் பேசி சில தமிழச்சிகள் தனக்கு பொட்டு வைப்பதாய் விளம்பரப்படுத்தினார் ராஜபக்சே. தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீதெல்லாம் மினி போர் தொடுத்து மிரட்டிப் பார்த்தார். ஆனால் எதற்கும் மசியாமல் ‘இது எங்கள் ஈழம்.. இங்கே உனக்கு வேலையில்லை’ என்று ராஜபக்சேவை உள்ளாட்சித் தேர்தலில் விரட்டி அடித்திருக்கின்றனர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள்.
1976-ம் ஆண்டு நிறைவேற்றிய வட்டுக் கோட்டை தீர்மானத்தை இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் மீண்டும் வழிமொழிந்திருக்கிறார்கள் ஈழத்து மக்கள்.ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் ஈழப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.இந்தத் தேர்தலின் முடிவுகளை அளறி மாளிகையில் உடற்பயிற்சி செய்தபடி கேட்டுக்கொண்டிருந்த ராஜபக்சே, சிங்களர்கள் நிறைந்த தெற்கில் தன் கட்சி வெற்றி பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, ஈழப் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரேயடியாக வென்றத்தில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.
தேர்தல் முடிவுகள் ஈழத் தமிழர்களின் மனசாட்சியை சர்வதேசத்துக்கு தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டாலும்... உள்ளபடியே அனைத்து தமிழர்களையும் வாக்களிக்கவிட்டிருந்தால் தமிழர்களின் வெற்றி இன்னும் பிரமாண்டமாய் அமைந்திருக்கும். அதைத் தனது ராணுவத்தின் மூலம் ராஜபக்சே தடுத்து நிறுத்தியிருக்கிறார் என்றேசொல்ல வேண்டும்.
அதற்கு ஆதாரமாக சில சம்பவங்களை அடுக்குகிறார்கள் ஈழத்திலிருந்து நமது சகோதரர்கள். ‘‘தேர்தல் நடாப்பதற்கு முன்பிருந்தே ஆர்மிக்காரர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து எங்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.யாருக்கு ஓட்டுப் போடுவீங்க..? என்று கேட்டார்கள். ‘கூட்டமைப்புக்குத்தான் போடுவம்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்ன தமிழர்களை அடித்து துவைத்து எடுத்தார்கள். அளவெட்டி என்னும் இடத்தில் கூட்டமைப்புக் காரங்கள் பிரசார வைபவத்தை ஒரு மண்டபத்தில் வைத்திருந்தார்கள். அங்கே முன்கூட்டியே வந்தார்கள் சிங்களக்காடையர்கள். எப்படித் தெரியுமா?கையிலே மண் வெட்டி, கடப்பாரை ஆகியவற்றை ஏந்திவந்து... ‘உடனே கலைந்துவிடுங்கள். இல்லையென்றால் அனைவரையும் வெட்டுவோம்’ என்றுகாட்டுமிராண்டிகளாகக் கத்தினர். வைபவம் நடக்கும் மண்டபத்திலுள்ள நாற்காலிகள் பொருட்கள் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டனர். அப்போது அங்கே இருந்தமாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் ஆகிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்மிக்காரர்களை எதிர்த்து கடுமையாக பேசினார்கள். இது எங்கட உரிமை... இதுல தலையிட நீங்க யாரு? என்று கடுமையாக எதிர்த்ததோடு, பக்கத்திலுள்ள காவல் நிலையத்திலும் ஆர்மி மீது முறைப்பாடுசெய்துவிட்டார்கள். கூட்டமைப்பினர் கூடி இதையே தங்களது பிரசாரமாக்கிவிடுவார்கள் என்று பயந்துபோன சிங்கள ராணுவம்... அவசர அவசரமாக மண்டபத்துக்குவந்து தாங்கள் கலைத்துப் போட்டதை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டுப் போனார்கள். கிளிநொச்சியில் தேர்தலுக்கு முதல் நாள் பாரிய தேடுதல் வேட்டை ஆயிரக் கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றதுராணுவம்.ஆனால் தேர்தல் திணைக் களமோ வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வேறு ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என்று அறிவிக்கைவெளியிட்டது. ஆனால் மக்களில் பலர் பயந்துகொண்டு வாக்களிக்க வந்திருக்கவில்லை. அவர்களும் வந்து வாக்களித்திருந்தால் ராஜபக்சே இன்னும் தூரத்துக்கு துரத்தப்பட்டிருப்பான்’’ என்கிறார்கள் ஈழத்து சகோதரர்கள்.இவ்வளவு நடந்தும் ஈழத் தமிழர்கள் தங்களுக்கான பிரதேச சபைகளை மீட்டிருக்கிறார்கள். குறிப்பாக பிரபாகரனின் சொந்த ஊர் வல்வெட்டித் துறையை தமிழ் தேசியகூட்டமைப்பு மீட்டிருக்கிறது.தமிழ்நாட்டு சட்டபை தீர்மானம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமெரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சர் ஹிலாரி சந்திப்பு, அமெரிக்க பொருளாதாரத் தடைத் தீர்மானம்ஆகியவற்றால் அலறிப் போய் அளறி மாளிகையில் இருக்கும் ராஜபக்சேவை, தங்கள் பங்குக்கு ஈழத் தமிழர்களும் திருப்பி அடித்துள்ளனர்.
ரசாயன ஆயுதங்கள், ஷெல்கள், பீரங்கிகள் என தமிழர்கள் மீது, ராஜபக்சே நடத்திய தாக்குதலுக்கு வாக்குச் சீட்டு மூலம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் ஈழத்தமிழர்கள்.தெற்கு சூடானை அடுத்து ஈழத்துக்கும் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் நிலையில்.. 1976-ல் நிறைவேற்றப்பட்டவட்டுக்கோட்டை தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி எங்களுக்கு தனி தமிழ் ஈழம் தேவை என்பதை பிரகடனப்படுத்திவிட்டனர் ஈழத் தமிழர்கள்.
Intli
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக